பக்கங்கள்

வியாழன், 15 ஜூலை, 2010

கௌரவ கொலைகளும் காதலும்

அடடா இப்ப எந்த தொலைக்காட்சி அலைவரிசையை பார்த்தாலும் செய்தித்தாள்களை படித்தாலும் ஒரு செய்தி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறது அது கௌரவ கொலை என்பது . எதோ இத்தகைய சம்பவங்கள் இப்போது தான் அதிகம் நடப்பது போல் ஊடகங்களும் இதனை பெரிது படுத்துகின்றனர் எதோ இந்த சம்பவம் மட்டுமே அதிகம் நிகழ்வதாக .

நான் இந்த ஊடங்களை சாடவில்லை இவர்கள் இப்போது தரும் இந்த கௌரவ கொலைகளுக்கான முன்னுரிமையை பிற முக்கிய செய்திகளுக்கு தருவதில்லையே என்பதுதான் . சரி விசியத்திர்க்கு வருகிறேன் .


அது என்ன கௌரவ கொலைகள் என்பவர்களுக்கு.



தன் இனம்,மொழி,மதம்,பொருளாதரா நிலை சாராமல் தன்னுடைய மகனோ மகளோ பிற இன,மதம்,மொழி,பொருளாதார நிலையில் உள்ளவர்களை காதலித்தால் அதனை வெறுக்கும் அந்த காதலிப்பவர்களின் குடும்பத்தார் செய்யும் கொலைகளை கௌரவ கொலைகள் என்று ஊடகங்களால் வகைபடுத்தபடுகின்றன.



ஏன் இப்படி கொலைகள் நடக்கின்றன ?..



மிக சாதாரணம் இதனை புரிந்து கொள்வது . மனிதன் எப்போதுமே பரிணாம வளர்ச்சியில் முந்தி சென்றுஒன்றை ஒன்று மிஞ்சி வாழ்வதால்தான் இன்னும் தழைத்து நிற்கிறான்.மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் இருக்கும் சூழலுக்கு ஏற்ப தன்னை சுற்றி ஒரு குழுவாக இருக்க பழகிகொண்டான் அந்த குழுக்கள் பிற்ப்பாடு மொழியாக இனமாக மாறியது.அந்த ஒவ்வொரு இன குழுவுமே தனக்கென சில வரைமுறைகளை கொண்டு வளர்ந்து வந்தது பிற இன கலப்பு நடந்தால் தன சந்ததி அழிந்து விடுமோ என்று பயம் கொண்டான் அப்படி சந்ததி அழிந்து போனால் தன குழுவின் வளர்ச்சி நின்று போய்விடும் அத்தோடு முடிந்தது கதை என்று .அப்படி ஆகும் பட்சத்தில் பரினமத்தின் ஆதாரமான இனபெருக்கம் என்பது இப்படி பட்ட காதல் போன்ற கலப்புகளினால் குறிப்பிட இனத்தின் சந்தத்தி தோன்றாமல் போகும்.ஆகா பரிணாமம் முதலில் விதைத்த உயிர் பெருக்கம் என்பது அவன் தனது இன குழுவாக பழகிக்கொண்டு அதன் ஆதர சுருதியை மட்டும் பிடித்து கொண்டு பிற இனத்தின் கலந்து கொண்டால் தன்னுடைய பரிணாமம் நின்று போகும் என்று கணித்து கொள்வதின் பலன்தான் இந்த கௌரவ கொலைகள் . மனிதன் பரிணாம வளர்ச்சியில் வளரவேண்டும் என்பது போய் மனிதனின் ஜாதி மத மொழி மட்டும் வளரவேண்டும் என்ற குறுகிய வட்டில் சிக்கிகொண்டது பரிணாமம் கொடுத்த சுதந்திரத்தை மீறிய செயலாகும் என்பது என் திடமான எண்ணமாகும்.