பக்கங்கள்

செவ்வாய், 29 ஜூன், 2010

காதல்என்ன மந்திர சொல் இது ..... உலக ஜீவராசிகள் அனைத்தும் ஈடுபடும் ஒரே செயல் இதுதான் . மனித குலத்தில் அதிகம் வறுபடும் சொல்லும் இந்த காதல் தான்.

இது ஒரு இயற்க்கை தேவை அவளவுதனே இதில் இருக்கிறது இதற்க்கு ஏன் இப்படி எதிர்ப்பு ?. அடிகடி கேள்விபடுவதுதான் ஆனால் இந்த முறை என்னை ஏதோ செய்துவிட்டது .இரு வேறு சாதி உயிர்கள் காதல் கொண்டால் அவ்வப்போது வாய்க்காலில் பிணம் போகும் எங்கள் பகுதியில் இல்லை என்றால் அதுவரை மருத்துவ மனை பக்கமே போகாமல் இருந்த பெண்ணுக்கு பல ஆண்டுகள் தீராத வாயிற்று வலி இருபதாகவும் அதனால் தூக்கு போட்டுகொண்டதாகவும் கதை பரப்படும் அந்த பெண்ணின் பெற்றோரே தூக்கி கட்டி இருந்தாலும் இப்படிதான் சம்பவம் பதிவு செய்யப்படும். உள்ளூர் மக்களுக்கு காரணம் தெரிந்திருந்தாலும் காலப்போக்கில் அட அவ பொண்ண வயித்துவளில தூக்குபோட்டுகிச்சுன்னு மிக சாதரணமாக எடுதுகொள்கிரார்கள் அந்த பெண் அவர்கள் சாதியாக இருந்துவிட்டால் . இது ஒரு மாறி அப்படின இன்னொன்னு இருக்கு அவளா அவ அவனோட ஓடி போய்ட்டா பாரேன் ரெண்டு பசங்களை விட்டுட்டு எப்படித்தான் போனாலோ அவனுக்கு வேற ஆள இல்ல இவள இழுத்துட்டு போயிருக்கான் பாரு புத்திகெட்டவன் அப்படின்னு பேசிக்கறாங்க .இஹுவாது அவங்க ஒதின்கிபோனது பரவால . கணவன் உடன் சேர்ந்து இருந்தாலும் அவளுக்கு தொடுப்பு இருக்கு அதன் இப்படி மினிக்கரானு சொல்லறது .

எனக்கு அதிகம் புரிவதே இல்லை வயித்துவலியல் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் காதலன் ஏன் விரைவில் அந்த இறந்துபோன காதலியை மறந்துபோகிறான் அவனும் மறித்து போகாமல் மனம் செய்துகொள்கிறான் . ( இது ஆண் மட்டும் பண்ணிக்கறது இல்ல ஆண் செத்துபோய் பெண் அந்த காதலனை மறந்து போகும் சம்பவங்களும் இருக்கிறது )

தனது பெண்ணின் வாழ்க்கை சந்தோசத்தை விட சாதி அத்தனை முக்கியமாக நினைப்பதன் காரணம் என்ன ?..

ஏற்க்கனவே திருமணமான பெண் புது இளைஞன் அல்லது வேறொருத்தியின் கணவனுடன் அவர்களை விட்டு போய் வாழும் போது அவளை மட்டும் அவளா அவ ஓடிப்போனவனு சொல்லுவது ஏன் ( ஆணாதிக்கம்னு சொல்லமுடியாது பெரும்பாலான ஆண்கள் இதனை பற்றி பேசுவது இல்லை பெண்கள் மட்டுமே அவளை புறம் பேசுகிறார்கள் )

ஒருவனுடன் அல்லது ஒருத்தியுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது வேறு ஒரு காதல் வந்தால் அந்த காதலை ஏற்றுக்கொண்டு அதனுடனும் வாழ்வது அதனை தவறா ?.. ( என்ன புத்தி இது அப்படின்னு கேக்காதிங்க )

படிக்கறவங்க எல்லாம் மறக்காம கொஞ்சம் பின்னுட்டம் போடுங்கள் இதனை ஒட்டி இனி நிறைய பதிவுகள் இடவேண்டியதாக இருக்கிறது உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப என்னுடைய விளக்கங்களை கொடுக்க முயலுவேன்.

அட இந்த பதிவு ஆரம்பிச்சதுக்கான காரணம் நேத்து எங்க பக்கத்துக்கு ஊருல ஒரு பொண்ணு வயித்து வலில தூக்கு போட்டுகிசுங்க ( ஒரு வேலை உண்மையாலும் வயிதுவலிய இருக்கும் எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிக்கும் அதன் பாதிப்புதான் இந்த பதிவு பாவம் நல்ல படிக்கும் சிலவருடங்களுக்கு முன் எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த பெண்ணும் கூட கல்லுரிபடிப்பின் பாதியிலே இப்படி அந்த பொண்ணுக்கு வயித்துவலி வந்திருக்க கூடாது . கொஞ்சம் படிப்பு முடித்து நல்ல வேலை கிடைத்திருந்து வந்திருந்தா வைத்தியம் பாதிருக்கலாமுங்க . சோகமாஇருக்கு )

திங்கள், 21 ஜூன், 2010

உலக தமிழ் செம்மொழி மாநாடா உலக தமிழ் இறுதி மாநாடா
அடேங்கப்பா எங்க பாத்தாலும் உலக தமிழ் மாநாடு பத்தி தான் பேசறாங்க ( செம் மொழி ) நல்லவிசியம்தாங்க நிறைய ஆய்வு கட்டுரைகள் விவாதங்கள் அடுத்த கட்டவளர்ச்சி கோவை மாநகரத்துல நிறைய மரம் போச்சு அடிப்படை தேவைகள் மாநாட்டை ஒட்டி வேகமாகவும் விவேகமாகமும் செய்து தந்திருக்காங்க நிறையபேரு வசூலில் கொழித்து இருக்காங்கனு பேச்சு வருது திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் கலைஞர் அவர்களுக்கும் ஒரு பேரு கிடைக்குது துணை முதல்வர் ஸ்டாலின் நல்லாவே எல்லா பணிகளையும் முடிக்கி விட்டு திறம்பட மாநாட்டை நடத்த திட்டம் போட்டு அதன் வழியில் அருமையாகவும் செயல்படறார். நிறைய தமிழ் அறிஞர்கள் அவர்கள் அறிவின் நீள அகலங்களை நமக்கு கொடுக்க இருக்கிறார்கள் அதற்க்கு என் பணிவான வணக்கம்

மத்த மொழிகளில் நம்ம தமிழ் மாறி இருக்கணு எனக்கு தெரியலைங்க நான் அத்தனை பெரிய ஆளு எல்லாம் கிடையாது ஆனா தெரிஞ்சத வச்சு சொல்லறேனுங்க. தமிழ் ஆதி மொழியாக இருந்தாலும் அதனை மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து ஆராய முடியும் முத்தமிழ்ன்னு சொல்லராங்க அதனை
இயல் இசை நாடகம் என்று . மூன்றும் ஒரே கற்பிதமான மொழி என்பதில் வந்தாலும் மூன்றுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு .

இயல் என்பது நாம் சாதரணமாக பொதுவழக்கில் கொண்டு இருப்பது இதற்க்கு எழுத்து வரலாறு பன்மை தன்மை என்று நிறைய இருக்கு இப்ப நடக்க போற மாநாடு கூட இயல் தமிழை முன்னிறுத்தி தான் நடக்க இருக்கிறது . அனால் இசை, நாடகம் எனும் இரண்டு தமிழும் எதோ போன ஜென்மத்தின் பாவங்களை போல நடத்த படுவது வேதனை அளிக்கிறது .ஒரு வேலை இசை என்பது பார்ப்பனர்கள் சார்ந்தது என்று போலி தமிழ் திராவிடர்கள் நினைத்து கொண்டார்களோ என்னவோ நாடக தமிழை ஏன் இப்படி ஒதிக்கி இருக்கிறார்கள் என்பது முற்றிலும் புரியாத விசியாகமாக இருக்கிறது .

இசை தமிழ் பற்றிய கற்றுரைகளோ ஆய்வரிக்கைகளோ நாடக தமிழ் பற்றிய கற்றுரைகளோ ஆய்வரிக்கைகளோ இல்லை இந்த மாநாட்டில் என்ன செய்தது இந்த இரட்டை தமிழ் இவர்களுக்கு ?.. இயல் தமிழ் பொது புத்தியில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது எப்படியும் வளர்ந்து கொண்டு இருக்கிறது அனால் இசையும் நாடகமும் அல்லவே சவளை பிள்ளைகளை போல இருக்கிறது இன்றைய நிலையில் .

இயல் தமிழ் பற்றி ஆயிரம் கட்டுரைகள் வந்தால் இசைக்கும் நாடகத்திற்கும் ஒரு நூறு கட்டுரைகள் கூடவா வரவில்லை ?.. அப்படியானால் இதுவரை ஆண்டுவந்த திராவிடம் பேசும் பெரியாரின் வாரிசுகள் தமிழ் கொடை ஆற்றியது இவளவுதான ?.. இனிவரும் ஆண்டுகளிலாவது இசை தமிழையும் நாடகத்தமிழையும் வளர்க்க ஏதேனும் வழிகள் கொண்டுவர போகிறார்களா ?..

இவர்களா செய்யபோகிறார்கள் பள்ளி கல்வியில் 6000 ஆசிரியர்கள் பற்றகுறையாம் அட தமிழ் ஆசிரியர்கள் இல்லையாமங்க இவங்க இதையே கவனிக்க முடியலை தமிழ எங்க வளர்க போறாங்க விளம்பரத்துல அவங்கள வளதுக்கவே நேரம் பத்தலை .

இன்னொரு பக்கம் உண்மை தமிழன் நாம் தமிழன் உலக தமிழ்னு சொல்லறவங்க எல்லாம் புலிக்கு வால பிடிக்கறதுக்கு தான் முயற்சி செய்யறாங்க ராஜபக்சே எத்தன சதவீதம் இலங்கை தமிழர்கள் சாக காரணமோ அதே அளவிற்கு புலி தலைவன் பிரபாகரனும் காரணம் என்பதை மறைக்கும் முயற்சி செய்யவே அவர்களுக்கும் நேரம் போதவில்லை இருக்கும் நேரமும் புலிகளை ஆதரிக்கதவர்களை தமிழ் இன துரோகி முத்திரை குத்த நேரம் போதவில்லை அவர்களுக்கு . விடு தமிழா தமிழ் இனி மெல்ல சாகும் என்பது எல்லாம் பழங்கதை தமிழை கொண்டுபோய் சுடுகாட்டில் வயதாகி விட்டது வந்து வாய்க்கரிசி போடவேண்டியது தான் மிச்சம் அதையும் இவர்களே போட்டு முடித்து விடுவார்கள் .

சனி, 12 ஜூன், 2010

எங்கே இருக்கிறது ?.. ( பெரியவர்களுக்கு )

ரயில் பயணம் யார் ஒருவருக்கும் அலுப்பூட்டுவதாக இருக்கவே முடியாது என்பது என் எண்ணம் .அதிலும் குழந்தைகள் நமது இருக்கைக்கு அருகில் இருந்து விட்டால் எனக்கு உலகம் மறந்து போகும் குட்டி குட்டி கதைகள் பேசி விரல் மடக்கி காசு மறைத்து மந்திரம் போட்டு என்று அவர்ளுடன் அவர்களாகவே மாறி விடுவேன் . என் அலைபேசி ipod  நானோ போன்ற புகைப்பட வீடியோ கருவிகள் அனைத்திலும் என்னுடன் பயணம் செய்யும் குழந்தைகளினால் நிறைந்திருக்கும் . என்னுடைய சிறந்த நண்பர்கள் என்று என்னுடன் பயணம் செய்த குழந்தைகளை எந்த மன உறுத்தலும் இல்லாமல் சொல்லமுடியும் . கடல் கடந்து கனடாவில் இருந்து என்னுடன் ரயில் பயணத்தில் வந்த செர்லியாகட்டும் அமிர்தானந்த மாயி மருத்துவமனையில் இதய சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பிய பெங்களூருவை சேர்ந்த நிஷாந்த் ஆகட்டும் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் ஆகட்டும் இன்னும் இன்னமும் என் பயணங்களை சுகமாகுவதில் குழந்தைகளுக்கு மிக பெரிய அக்கறை இருக்கிறது போல் உணர்கிறேன் .

எனக்கு ஒரு சிறு வருத்தம் ஒன்று உண்டு  நான் சிறுவனாக இருந்த போது அம்புலிமாம ,கோகுலம் , ராணி காமிக்ஸ் , முதுகாமிஸ் , தினமலர் சிறுவர் மலரில் என்று நிறைய கதைகள் வரும் இப்போது அப்படி பெரிய புனைவுகள் குழந்தைகளை குதுகலத்துடன் அறிவையும் வளர செய்து மனதையும் உறுதியாக்கும் கதைகளோ புனைவுகளோ ஏதும் இல்லை . இப்போதைய குழந்தைகளின் ஒரே வடிகாலாக நான் வேலு சரவணனை தான் சொல்லமுடிகிறது .சில எழுத்தாளர்கள்  கூட குழந்தைகளுக்கான கதைகள் வருவதில்லை என்று ஏக்க படுகிறார்கள் .

இப்போது பெரியவர்களுகுகான அனைத்தையும் குழந்தைகளுக்கு என்று ஆகிவிட்டது அது சினிமாவாகட்டும் பாடல்கள் ஆகட்டும் தொலைக்காட்சி நிகழ்சிகள் ஆகட்டும் எல்லாமே பெரியவர்களுக்கு மட்டும் இருந்து குழந்தை உலகத்தை எடுத்து இதன் மீது திணிக்கிறோம் .

முன்பெல்லாம் நீதிபோதனை என்று ஒரு வகுப்பு எனது பள்ளியில் இருக்கும் இப்போது அது எல்லாம் இல்லையாம் . அந்த வகுப்பில் எனது ஓவிய ஆசிரியர்தான் வகுப்பெடுப்பார் மரியாதை ராமன் கதைகள் பரமார்த்த குருவும் அவரின் சீடர்களும் சில ஜென் கதைகள் என்று சுவாரசியமாக இருக்கும் பள்ளி கல்வி துறை இப்போது இதனை எல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை .

சரி இலக்கிய உலகம் என்ன செய்கிறது குழந்தைகளுக்கு என்று பார்த்தல் ஒன்றுமே இல்லை வருத்தமாக தான் இருக்கிறது ."காலசுவடு " " உயிர்மை" என்று இரண்டு உலகம் பின் " மக்கள் ஜனநாயக இலக்கிய கழகம்" என்று மற்றொன்று இவர்களுக்கு எல்லாம் பேனா எதற்கு என்றால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் ஆயுதமாகவே இருக்கிறது . பெரியவர்கள் சண்டையில் குழந்தைகள் அன்னியப்பட்டு போகிறார்கள் என்பது நமது தமிழ் இலக்கிய உலகமே சான்று . குழந்தைகளுக்கான கதை பாடல் என்று எதாவது புனைய முடிகிறாத இந்த இலக்கிய உலகத்தாரால் . மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளில் இருக்கும் குழந்தைகளின் இலக்கியம் ஏன் இங்கே இல்லை .

எனக்கு வாசிப்பின் மேல் பெரிய ஈடுபாடு வருவதற்கு காரணம் எனது தந்தை . அவர் எனக்கு வாங்கி குவித்த பொம்மைகளை விட புத்தகங்கள் அதிகம் .அனால் இன்று நமது குழந்தைகளுக்கு பாட புத்தகத்தை தவிர வேறு புத்தகம் இருக்கிறது என்று தெரியாத நிலை .சரி வாசிக்கும் பழக்கம் தான் இப்படி என்றால் .விளையாட்டு கூட ரொம்ப சுருங்கி விட்டது வீட்டை தாண்டி ஒரு பெரிய மைதானம் என்பதை இன்றைய குழந்தைகளுக்கு இருப்பதாக காட்டவே நாம் விரும்புவதில்லை .அதுவும் இந்த நவநாகரீக உலகில் " நியுகிளியர் பேமலி" என்று கணவனும் மனைவியும் மட்டும் இருக்கும் தனி குடும்பத்தின் குழந்தைகளுக்கு கிடைக்கும் அடக்குமுறை என்பது அந்த கற்பனைகெட்டாத குழந்தை மனதின் உலகத்திற்கு கிடைக்கும் உயர்ந்தபட்ச தண்டனையாகவே கருதுகிறேன் .கணினியில் விளையாட்டு கையில் கொடுக்கப்படும் ரிமோட் என்று மிக சிறிய வட்டத்தில் அவர்களின் உலகம் சுருக்கபடுகிறது .தாத்த பாட்டி அத்தை மாமா அவர்களின் குழந்தைகள் என்ற குடும்ப உலகம் கூட பறிக்கப்பட்டு விட்டது இப்போது .

ஏன் இன்றைய குழந்தைகளின் மீது நமது சிந்தனைகளை துணித்து அவர்களை அவர்களாகவே இருக்க விடுவதில்லை . குழந்தையாக பிறக்கிறோம் முதுமை வயதில் மீண்டும் குழந்தையாகிறோம் இடைப்பட்ட வயதில் மட்டும் குழந்தை உலகை சூரையாடுகிறோம் நமது எண்ணங்களை திணிப்பதன் மூலம் . நாம் எவளவு பெரிய சுயநலவாதிகள் .நான் மட்டும் குழந்தையாக இருப்பேன் ஏன் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடமாட்டேன் என்பது என்ன நியாயம் .

குழந்தை உலகம் என்பது மிக பெரியது அதில் பெரியவர் உலகத்தை திணித்து சிறுசுகளின் மனங்களை பாழ்படுத்தலாமா....

செவ்வாய், 1 ஜூன், 2010

மதம் என்றால் என்ன ?..

தலைப்பு வணக்கம் சொல்லி ஆரம்பிக்க சொன்னாலும் மனசு ஏற்றுக்கொள்ளவில்லை .காரணம் இந்த மதத்தை வைத்து எத்தனை எத்தனை பிரச்சனைகள எத்தனை எத்தனை கொலைகள் எத்தனை எத்தனை கற்பழிப்புகள் எத்தனை எத்தனை ஆக்கரமிப்புகள் . கருமம் இந்த மதம் அப்படிங்கறதுல என்னதான் இருக்கு ?.. என்னத்துக்காக இப்படி எல்லாம் நடக்குதுன்னு . இதனால என்ன நல்லது நடக்க போகுது ?...இல்ல நடந்துச்சு ?..மதம் அவசியமா ?..இதனால் மனித குலம் சாதித்தது என்ன ?.. இப்படி பட்ட ஆயிரம் கேள்விகள் எழுகிறது .ஆனால் அதற்கும் முன்னால் மதம் என்பது பற்றி தெரிந்து கொள்ள விளைந்ததின் விளைவுதான் இந்த பதிவு . 

மதம் இந்த சொல்லுக்கு என்னவோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது . கடவுளை நம்புகிறவனும் நம்பாதவனும் இதனை பிடித்து தொங்கிக்கொண்டே இருக்கிறன் . அந்த ஈர்ப்பு இல்லை என்றால் அவர்கள் இப்படி தொங்கி கொண்டு இருந்திருக்க தேவை இல்லை . 

நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா அல்லது இருந்தால் நன்றாக இருக்கும் இல்லேன்னா கொஞ்சம் மோசமா இருக்கும் என்ற ஜல்லி அடிப்புகளுக்குள் இப்போதைக்கு போகவில்லை .என் நோக்கம் மிக சிறிய தேடல் மதம் இதன் தேவை என்ன ?.. என் உருவாக்க பட்டது ?..
அதன் அடிப்படை என்னவாக இருந்திருக்கும் இப்படி பட்ட கட்டமைவின் மூலம் என்ன ?.. மதம் தான் மனிதனை ஒழுங்கு படுத்தியாத என்பது மட்டும் தான் இப்போதைக்கு . பின் வரும் பதிவுகளின் கொஞ்சம் ஆழமாக அகலமாக செல்ல விரும்புகிறேன் .இப்போதைக்கு மதம் என்றால் என்ன என்பது பற்றி மட்டுமே .

ஆதி காலத்தில் மனிதன் கூட்டம் கூட்டமாய் வாழ்ந்து வந்தான் என்பது நாமனைவரும் அறிந்ததே . அப்படி கூட்டங்கள் கொஞ்சம் ஒன்று சேர்ந்து சமூகமாய் மாறியது அந்த சமுகத்திற்கு சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள் தேவை எழுந்த போது ஒட்டு மொத்தமாய் அவர்களை ஒன்று திரட்டி வழி படுத்த மனிதன் உருவாக்கிய அம்சம் கடவுள் .காரணம் எதனை வேண்டுமானலும் அனுகிவிடலாம் ஆராயலாம் கடவுளை எப்படி அணுகுவது அல்லது ஆராய்வது ?... தங்கம் தகரம் என்பது பொருளாக இருப்பதினால் ஆராயலாம் அறியலாம் கடவுள் என்பது வேற்று சித்தாந்தம் தானே . அந்த சித்தாந்தத்தின் மீது பயம் எனும் சாயம் பூசியது தான் மதம் . மனித சமூகத்தை நல்வழி படுத்த உருவான மதம் அவனை அழிவின் பாதைக்கு கொண்டு செல்வது கொடுமை தான் . 

சரி மதம் என்பது பயத்தின் மீது பூசிய சாயம் என்றால் அதன் மீது சாயம் பூசவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது ?.. 

அந்த சாயத்தின் தேவை ஏற்ப்பட காரணம் மனித மனம் . இந்த மனித மானது தன்னுடைய இயலாமையை அகற்றி கொள்ள எதாவது ஒன்றை பற்றிக்கொள்ள வேடியாதாய் இருந்தது. அந்த மனதிற்கு அதற்க்கு காரண காரியங்களை ஆராயமுடியாத ஒரு பொருள் ஒன்றின் தேவை ஏற்பட்டதன் விளைவு கடவுள் . மனம் கொஞ்சம் ஆறுதல் அடைய இயற்கையை அதன் விநோதங்களை கண்டு ஆச்சர்யமுற்றவன் அதனை செய்பவர் கடவுள் என்று நம்ப தொடங்கினான்.அவனது தேவைகளுக்கு கடவுள் என்பதை நம்ப தொடக்கி அந்த தேவைகள் அவனை அறியாமலே அவனே அல்லது பிறர் மூலமாகவோ இயற்கையாகவோ பூர்த்தியான போது இன்னும் கொஞ்சம் அதிகப்படியாகவே கடவுளை அவன் எப்படி எல்லாம் கற்பனையில் உருவ படுத்த முடியுமோ அப்படியெல்லாம் உருவபடுத்தி அவனின் தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டான் . அவனது நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவனுடனிருந்த  மனிதன் நம்ப ஆரம்பிக்க அப்படி நம்ப ஆரம்பித்த பொதுவான கூட்டத்தை மதம் என்று சொல்லலாம் . ஆக சமுதாயத்தை கட்டுக்குள் வைக்கவும் சட்ட திட்டங்களை போட்டு ஒழுங்கமைகவும் நம்பிக்கையை கொடுக்கவும் உருவாக்க பட்டது கடவுளும் மதமும் என்று நம்புகிறேன் . ஆனால் இப்போது நடப்பது எல்லாம் வேறு அதனை பற்றியெல்லாம் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம் . 

படிச்சிங்கன்ன பின்னுட்டம் போடுங்களேன் உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் என் கருத்துக்களில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள இயலும் அல்லவா ?..

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.