பக்கங்கள்

புதன், 29 டிசம்பர், 2010

இணையத்தில் ஒரு தேடல் .( பகுதி 1 )



என்னடா இது நமக்கு தெரியாததையா இவன் சொல்ல போறான் . அதன் கூகுள் ஆண்டவர் இருக்காரே அவருக்கு துணையா நம்ம விக்கி பீடிய  இருக்கே அத கேட்டா  சொல்லிட போகுது இதுல என்ன தெரிஞ்சுக்க இருக்கு . ?.. அப்படின்னு நினைக்காதிங்க .

இந்த பதிவை எழுதறதுக்கு முதல் காரணம் ஈரோடு சங்கமம் 2010 பதிவர்கள் வாசகர்கள் சந்திப்புதான் .இந்த சங்கமத்தை பற்றி நிறைய படிச்சு அத விட நிறைய ஏக்கத்தோட இருப்பிங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் . இந்த ஏக்கத்தை போக்க வாட்டத்தை வாட்ட அடுத்த சங்கமத்துள கலந்துக்கறத தவிர வேற அரு மருந்து கிடையாதுங்க . சரி விசியத்துக்கு வரேன் . திருப்பூர் பதிவுலக நண்பர்களின் சேர்தளம் அமைப்பினர் ஏற்ப்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி பயனுள்ள கலந்துரையாடலாக இருந்தது வந்திருந்த அனைவர்க்கும் .பதிவர்கள் அனைவரும் இந்த கலந்துரையாடலில் அழகாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள் . சேர்தளம் அமைபினரும் செறிவு நிறைந்த கேள்விகளை விவாத பொருளாகவைத்திருந்தார்கள் .

அந்த கேள்விகளில் என்னை வெகுவாக கவர்ந்த ஒன்று . இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் முழுமையானதாக இருப்பதில்லை என்பது . ஒரு நூலகத்தில் கிடைக்கும் முழுமை இணையத்தில் கிடைப்பதில்லை என்று எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் அவர்களையும் துணைக்கு அழைத்தே கேட்டார்கள் .வந்திருந்த பதிவர்கள் அனைவருமே ஆம் முழுமையாக இருப்பது இல்லை என்றே கூறினார் . எனக்கு இதில் உடன்பாடு இல்லை . காரணம் இந்த இணையத்தில் பல்வேறு வகைகளில் இனங்களில் தகவல்கள் முழுமையாக கொட்டி கிடக்கிறது அதனை நாம் எப்படி தேடி எடுப்பது என்பதில் தான் விசியமே இருக்கிறது .

முதலில் இன்றைய இணையம் எப்படி இயங்குகிறது என்பதை கூறி விடுகிறேன் . இப்போதைய இணையம் WEB 2.0 எனும் செயல்பாட்டில் உள்ளது . இந்த வெப் 2 என்பது இணைய பயனாளர்கள் தாங்களே தவகல்களை கொடுக்கவும் பெறவும் அந்த தகவல்களை பார்ப்பதற்கும் நேரிபடுத்தவும் உதவும் முறை . இந்த முறையில் தான் இப்போது நாம் உபயோகிக்கும் அனைத்து வகையான தேடுபொறிகளும் ( இதுல என்ன வகை இருக்குனு அப்பறம் சொல்லித்தரேன் இல்லன இப்போதைக்கு இந்த என்னோட இன்னொரு வலைப்பூ சுட்டி இது இங்க பாருங்க )  ,பேஸ் புக் , ஆர்குட் போன்ற தளங்களும் யு டியுப்,பிகசா , பிளிக்கர் போன்ற வீடியோ,புகைப்பட தளங்களும் வலைப்பூ சேவையை அளிக்கும் வோர்ட் பிரஸ் ,ப்ளாக் ஸ்பாட் ஆகிய தளங்களும் கட்டமைக்க பட்டு இயங்குகிறன .

இப்படி இயங்கும் தளங்கள் மூன்று முக்கிய விசியங்களை அடிப்படையாக கொண்டு உள்ளன.

1) Rich Internet Application - ( RIA ) :- இந்த அமைப்பபில் நடப்பது நமது இயங்கு தளத்தில் இருந்தது உலவியை பயன்படுத்தும் விதத்தையும் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்ன தேவை என்பதை நாம் உள்ளீடு செய்யும் தகவல்களில் இருந்தது பெற்று அதற்க்கு ஏற்றவாறு செய்கிறது
                                           உதாரணம் :-  GMail மினஞ்சலில் நமக்கு வரும் மின்னஞ்சல்களில் இருக்கும் தகவல்களை ஒத்து வலப்பக்கத்தில் avarkal அளிக்கும் வரி விளம்பரங்கள் . சென்னையில் நீங்கள் இருந்தால் சென்னை தமிழ் நாடு இந்தியா சம்பந்தம் உடைய உங்கள் மின்னஞ்சலில் இருக்கும் தகவலுக்கு ஏற்ப அங்கே விளம்பரங்கள் காண்பிக்கப்படும் . அதுவே நீங்கள் அமெரிகாவில் இருந்தால் அங்கே உள்ள தகவல்களை அளிக்கும் .

2) Service-oriented Architecture (SOA) :-  இந்த அமைப்பு WEB 2 வின் மையமானது ஆகும் . இந்த அமைப்பு மற்ற பக்கங்கள் மாறும் தளங்களின் உள்ள தகவல்களை உடனுக்கு உடன் பயன்படுத்தும் அமைப்பு .
                                         உதாரணம் :- Feeds, RSS, Web Services, Mash-ups போன்ற நிரலிகள் .இந்த அமைப்பை வைத்து தான் நமது திரட்டிகள் நமக்கு தகவல்களை அளிக்கிறது.

3) Social Web :- இவைபற்றி நமக்கு எல்லாம் நன்கு தெரியும் ஒரு உபயோகிப்பாளரும் இன்னொரு உபயோகிப்பாளரும் தொடர்பு கொள்வது .
                                       உதாரணம் :- ஆர்குட் பேஸ் புக் போன்ற தளங்கள் .

சரி இவற்றில் இருந்தது எப்படி நமக்கு தகவல்கள் முழுமையாகவோ அரைகுறையாகவோ பெற முடிகிறது . என்பதை பார்ப்பதற்கு முன்னால் . தமது தேடு பொறிகள் எப்படி தகவல்களை தேடி எடுக்கிறது என்பதை மிக சுருக்கமாக கூறி விடுகிறேன் .

அனைத்து விதமான தேடு பொறிகளும் மேற்சொன்ன வெப் 2 எனும் இயங்கு முறையில் இயங்குகிறது .இந்த தேடு பொறிகள் தவல்களை மூன்று வகைகளில் நெறிபடுத்துகிறது அவை .
  1. Web crawling
  2. Indexing
  3. Searching
Web crawling :- இது என்ன பண்ணுமுன இணையத்துல இருக்கற எல்லா தளங்களையும் தேடி அதனோட பக்கங்களை தன்னகத்தே ஒரு நகலை வைத்து கொள்ளும் . இது அணு தினமும் ஓயாமல் நடக்கும் . நாம மூச்சு விடற மாறி தேடு பொறிகளுக்கு இந்த அமைப்பு .

Indexing :- இது எப்படினா உலகம் பூராவும் இருக்கற தளங்களின் பக்கங்களுக்கு எங்களை வழங்கும் . அதும் எப்படின்னு பாத்திங்கன்ன ஒரு ஒரு தளமும் எத்தனை தளங்களோட இணைக்க பட்டு இருக்கிறது அதன் பயன்பாடு என்ன அப்படின்னு பாத்து வரிசை படுத்தும் .

Searching :- இது என்ன பண்ணுது அந்த குறிபிட்ட தேடு பொறியில் இருக்கற பக்கங்களை தரவரிசை படி போய் பாத்து நாம கொடுக்கற குறிசொல் அடிப்படையில் தேடி எடுத்து தறும் . உதரணமா  கம்ப்யூட்டர்  கணபதி அப்படின்னு தேடும் போது எனது வலைதளத்தின் முகவரியை அளிக்கும் .

சரிங்க இன்னும் நிறைய சொல்லணும் இதை ஒரு முதல் பாகம வச்சுக்கங்க அடுத்த பதிவுல இன்னும் நிறைய புரியவைக்க முயற்சி செய்கிறேன் . அதுக்கு முன்னாடி நீங்க பண்ணவேண்டியது எல்லாம் மறக்காமஓட்டு போடுங்க .உங்க கருத்துகளையும் கேள்விகளையும் பின்னுட்டத்துல சொல்லிட்டு போங்க .


திங்கள், 27 டிசம்பர், 2010

நிகழ்வும் நினைப்பும் ஈரோடு சங்கமம் 2010



நாங்க எல்லாம் சேர்ந்து அசத்திட்டோம் அப்படின்னு நாங்களே சொல்லகூடாது ..... அது தற்பெருமை ஆனால் வந்திருந்த பதிவர்களின் மணம் கோணாமல் சிறப்பாக நடத்தி காட்டிய பெருமை எல்லாம் ஈரோடு கதிர் , ஆருரான் , சந்துரு அண்ணன் , ஜாபர் , கார்த்தி , பாலாசி , ( இவங்க கிட்டதான் நான் பேசினேன் அதனால இவங்க பேரு நல்ல நியாபகம் இருக்கு ) எல்லாருக்கும் போய் சேரும் . ஏதோ நெல்லுக்கு பாஞ்சது இந்த புல்லுக்கும் பாஞ்சு அந்த புண்ணியத்தை நானும் கொஞ்சம் கட்டிட்டு வந்துட்டேன்னு நினைக்கறப்ப நேத்து அடிச்ச சரக்கையும் மீறி செம மப்பு எனக்கு . ( நான் எப்படி சரக்கடிசேன் அப்படின்னு பின்னாடி விலாவாரியா யாரவது எழுதுவாங்க அப்ப தெரிஞ்சுக்கங்க இப்பவேண்டாம் ).

நைட் அடிச்ச மப்பு தெளியாததுக்கு ஒரு சின்ன உதாரணம் நான் இன்னும் ஈரோட்டுக்கு போகவே இல்லை .காரணம் என்னோட தலைகவசம் கதிர் அண்ணன் அலுவலகத்தில் வைத்துவிட்டு வந்தது தான் ( சட்டத்தை ரொம்பவே நல்ல பின்பற்றுகிறேன் அப்படின்னு நினைச்சா உங்க நினைப்புல மன்ன அள்ளி நீங்களே போட்டுக்கங்க . திண்டல் கிட்ட போலிஸ் அய்யா ...!!! ( ஐயோ அய்யான்னு தானுங்க அவங்களை சொல்லோனும் ) ஒருத்தரு உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி ன்னு அவரு என்னை மடகிட்டறு தீவிரவாதி என்னமாரி அழக இருப்பனு சொல்லி .அப்ப பாத்தா வண்டிய சர்வீசி பண்ணின என் ஆருயிர் ஒன்றில் எதாவது ஒரு உயிரை எடுக்க நினைத்த நண்பன் விஜி தேவையான காகிதங்களை திரும்ப வைக்க மறந்து விட்டான் . நாம யாரு என்ன இருக்கு என்ன இல்லைன்னு எல்லாம் பாக்க மாட்டோம் இல்ல .. சரியான குசும்பனுங்க எக்குத்தப்பா பேசி மாட்டிகிட்டேன் . ( see Mr.Govindasamy எந்த மோட்டார் வாகன சட்டம் சொல்லி இருக்கு தேவையான ஆவணம் இல்லேன்னா வண்டிய சைக்கில் ஸ்டான்ட் ல விட்டு போகணும்னு எல்லாம் ரப்பு பேசி அந்த வழிய போக வர தலைகவசத கட்டாயம் உபயோகபடுத்தவேண்டியாத போச்சு :( சரி இத விடுங்க .... படிச்சு முடிச்சதுக்கு அப்பறம் சொல்லறேன்னு சொல்லறீங்கள ?.. நான் இத படிக்க சொல்லலைங்க இதுக்கு கீழ இருக்கறதா படிக்க சொல்லறேன் . )

எல்லாரையும் சரியான நேரத்துக்கு வரசொல்லி சரியாய் நடத்தினாங்க எல்லாரும் வழக்கம் போல நான் அதிகாலை 9 மணிக்கு எழுந்து விழா அரங்கிற்கு போய் சேர மணி 10.40 நல்லவேளை அந்த சமையத்துல குறைந்த அளவு நண்பர்கள் ( இனியும் அவங்களை பதிவர்கள்னு சொல்ல முடியாதுங்க ) தான் வந்து இருந்தாங்க . அடடே பரவலடா கணபதி கொஞ்சம் சொன்ன நேரத்துக்கு தான் வந்துட்டேன்னு எனக்கு நானே பாராட்டு பத்திரத்தை வாசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன் .

போன உடனே மிகப்பெரிய ஆச்சரியம் எங்க சந்துரு அண்ணன பாத்தது உங்க எல்லாருக்கும் தாமோதர் சந்துரு அப்படின நல்லாவே தெரியும் . எப்படியோ காலத்தால் காணமல் போயிருந்த என்னை மீண்டும் அவருடன் சங்கமித்ததில் இந்த சங்கமம் 2010 புண்ணியம் தேடிகொண்டது ....!!!

அவர்கிட்ட பேசிட்டு இருக்கறப்பர எங்க இருந்தது இறக்கை முளைச்சு வந்தாங்கனு தெரியலை ஒருவேளை கழுகா இருக்கலாம் ( ஜூனியர் விகடன் கழுகு இல்லைங்க ) டக்குனு மூக்கு வேர்த்து என் முன்னாடி நின்னாங்க ஆருரானும் , கதிரும் . போய் உங்க பேரு அட்ரஸ் எழுதுங்கன்னு அன்பான உத்தரவ போட்டு என்னை நிலைகுலைய வைத்தார்கள் . பின்ன எட்டாவது படிக்கறப்ப பேனா புடிச்சு எழுதின கை இப்ப போய் எழுத சொன்ன !!! அத எல்லாம் ஒருவழியா கஷ்ட பட்டு இஷ்டதோட எழுதிட்டு திரும்பினா நண்பர்கள் அவர்களின் அழகானக இளம் தளிர்களை வரவேற்ப்பு கொடுத்த இடத்தில் நிற்கவைத்து பழமை பேசி அவர்களின் புத்தகத்தையும் குறிப்பு எடுக்க சிறிய நோட்டு ஒன்றையும் கொடுத்து உள்ளே அனுப்பி விட்டார்கள் . நாம கொஞ்சம் சொகுசு பேர்வழிங்க போனதும் உள்ளார ஒரு மூளையோராம பாத்து ஒரு இடத்தை புடிச்சு ஒக்காந்துட்டேன் . ஆனா அப்பறமா நான் வெட்கப்படும் அளவிற்கு ஆளாளுக்கு ஒரு ஒரு வேலைய இழுத்துபோட்டு செய்யறாங்க .

இது என்னடா வம்பா போயிருச்சு நம்மளையும் வேலைசெய்ய வச்சுருவாங்களோனு அங்கலாப்போட கமுக்கமா போய் கதிர் அண்ணன் பக்கத்துல நின்னேன் . அவரு சாதரணம கணபதி இந்த பிளக்குல கரண்டு வரலை அதுல வருதனுபருங்க மொத வேலைய கொடுத்தாரு . சரிடா இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்லை போலன்னு நினைச்சு எதோ பன்னுவோமு ஆரம்பிச்சேன் . பாத்தா நான் ஒருத்தன் மட்டும் தான் எரும மாடு மாறி அசையாம நிக்கறேன் .சந்துரு அண்ணன் ஆருரான் கதிர் கார்த்தி ஜாபர் ன்னு எல்லாரும் பறந்தடிச்சு வேலை செய்யறாங்க. அத பாத்ததும் புது பொண்ணு வெட்கப்பட்டு மாமியார் வீட்டுல ஒளிஞ்சு இருக்குமே அந்த வேட்டகம் மொத ராத்திரி முடிஞ்சதும் காணாம போயிருக்கும் அதுமாறி இவிங்க காட்டின செயல் வேகத்துல எனக்கும் தொத்திகிச்சு . நான் வேலை செய்யரமாறி நடிக்க ஆரம்பிக்கறப்ப எல்லாரும் ஒரு ஒருத்தரா வர ஆரம்பிச்சாங்க . எங்க ஆளுங்க விழ நடந்த இடத்துக்கு வரதுக்கு கார் எல்லாம் கொடுத்து அசத்தி இருந்தது எனக்கு அப்பறம்தாங்க தெரிஞ்சுது . ஜாபர் இந்த விசியத்துல அசத்திட்டாருனு எல்லாரும் சொன்னப்ப பயங்கரமான சந்தோசம். பாலாசி துடுக்கு துடுகுனு தலேர் மொகந்தி பட்டுமாரி துடிப்ப வேலை செய்துட்டு இருகாரு சந்துரு அண்ணன் அத விட கலக்கறாரு கதிரன்னையும் ஆருரான் அண்ணனையும் சொல்லவேண்டியதே இல்லை செயல் புயல்கள் , கார்த்தி இவர பத்தி ஒரு தனி பத்தில சொல்லணும் .

இந்த கார்த்தி ஒரு ஒன்றை வருசமா சொல்லிட்டே இருக்காரு டகிலா ஒரு பாட்டில் இருக்கு ஒரு பாட்டில் இருக்குனு ஆனா கண்ணுல இன்னும் காமிக்கவே இல்லை . :( யாருகிட்டயாவது காமிச்ச எனக்கும் கொஞ்சம் சொல்லிவிடுங்க ஜோதில ஐக்கியம் ஆயிக்கறேன் . சாப்பாடு எல்லாம் போட்டுட்டு இருக்காங்க பாத்தா சூப்பரான பாயாசத்தை சுவைக்க கப்பு இல்லை உடனே ஓடு வாங்கியானு சொன்ன அப்பவும் மனுஷன் நாயா பேயா பறந்து அடிக்கறாரு . இப்படி எல்லாரும் ஆளாளுக்கு சிறப்ப அவங்க அவங்க பங்களிப்பை வழங்கி எனக்கும் நல்ல பேர கடைசி நேரத்துல வாங்கி தந்தாங்க .

நான் சென்னைல இருந்தது புதன் கிழமை ஈரோடுக்கு போனேன் . வெள்ளிகிழமை கதிர் அண்ணன பாத்தேன் அவளவுதான் அடுத்து ஞாயத்து கிழமை அங்க போனேன் . எல்லாரும் இதனை அர்ப்பணிப்போட ஈடுபட்டத பாத்ததும் ஒரு பெரிய சபதம் எனக்கு நானே எடுத்து கிட்டேன் அது ரகசியம் அடுத்த சங்கமம் அப்ப சொல்லறேன் .

சரி இன்னொரு விசியம் . என்ன என்னமோ எல்லாரும் பேசினாங்க சொன்னங்க சிறப்பு விருந்தினரவந்தவங்க எல்லாம் .எனக்கு ரொம்ப புடிச்சது கருவாயன்  போட்டோ எடுக்கறத சொல்லிகொடுத்து மட்டும் தான் மத்த படி எனக்கு ஒன்னும் புடிகலைங்க . ஆனா வந்திருந்தவங்க எல்லாம் ரொம்பவே ஆழ்ந்து கவனிச்சு தெரிஞ்சுகிட்டாங்க எல்லாரும் பேசினத. கடைசியா சேர்தளம் அமைப்பினர் ஏற்ப்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கலகலப்பா எல்லோரோட எண்ணங்களையும் வெளிப்படுத்தும் பின்னுட்டமாய் அமைந்திருந்தது .

வந்திருந்த எல்லோரும் விடை பெறுகிறார்கள் மணம் என்னமோ வெறுமையை எடுத்து பூசிகொண்டது .

அடுத்து விழ அரங்கை அரங்கத்தாரிடம் ஒப்படைக்க திரும்பவும் ஆளாளுக்கு வேலையை இழுத்து போட்டு கொண்டார்கள் . இப்பவும் நான் சும்மா இருந்த அர்த்தம் இல்லை என்று எனக்கும் ஈடுபாடு இருக்கிறது என்பதனை காண்பிக்க ஒரு தண்ணீர் கேனை எடுத்து வண்டியில் வைத்து இவர்களின் வேளையில் என்னையும் ஈடுபடுத்தி கொண்டேன் .

எல்லாம் ஒரு வழியா இனிதே முடிஞ்சு மன வருத்தத்தோட இருந்தப்ப கதிரண்ணன் வந்து ஒரே ஒரு லார்ஜ் அப்படின்னு சரக்க ஊத்தராறு .எனக்கு கொஞ்சம் சங்கடம் என்னதான் நாம கிரீன் பார்க் எஸ்கேப் பார்ல குடி இருந்தாலும் எங்க சந்துரு அண்ணன் முன்னாடி எப்படி குடிகராதுன்னு . அப்பவும் தலைல துண்ட போத்தி குடிச்சு வந்திருந்த நண்பர்கள் அனைவரும் சென்ற மன வருத்தத்தை காணாம போகவசுட்டேன் . அப்பறமும் விட்டங்கள எங்க பாசகாரங்க கதிர் அண்ணன் ஆபீஸுக்கு கூட்டிட்டு போய் அங்கயும் . எல்லாம் முடிஞ்சு அவரர் கூடுகளுக்கு திரும்புகிறோம் எனக்கு விழியோரத்தில் வழிகிறது கண்ணீர் .............

2011 டிசம்பர் எங்க இருந்தாலும் சீக்கரமே எங்க ஈரோட்டுக்கு வந்து விடமாட்டாயா ..... இதே போல் ஒரு சந்திப்பு பகிர்வு எனக்கு உடனே வேண்டும்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

ஒளிரும் விளக்குகள் இருளும் வாழ்கை




அவசியமான நாம் அனைவரும் உணரவேண்டிய கட்டாயம் செயல்படுத்தவேண்டிய ஒன்று ஆனால் யாரும் கவனிப்பதும் இல்லை கண்டுகொள்வதும் இல்லை . இன்றைய நவ நாகரீக உலகில் வேகம் மிக பெரிய பங்கு பெறுகிறது ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில் அது வாழ்கையாக இருந்தாலும் வாகனமாக இருந்தாலும் சரி நமக்கு முன்னால் போகிறவரை எப்படியேனும் முந்தி செல்ல முயலுகிறோம் .

வாழ்கையில் வேகம் நமது சந்ததிகளையும் நமது நீட்சியையும் நிலைத்திருக்க பயன்படுகிறது ஆனால் , சாலையில் ?...

போக்குவரத்தில் நமது கவனம் எல்லம் எதிர் வரும் வாகனங்களை பற்றி எப்போதுமே இருப்பதில்லை . அதுவும் இரவில் நமக்கு அந்த அக்கறை ஒரு துளியேனும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவே பயமாக இருக்கிறது .சாமான்ய மக்களை இருள் குற்றங்களை எல்லாம் மறைப்பதற்கு மட்டும் அல்ல செயல்படுத்தவும் தூண்டுகிறதோ என்ற கவலை எனக்கு . இரவில் தானே பாத்துகொள்ளலாம் எனும் அலட்சியம் தான் உச்ச பட்ச விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது . அது நகரமோ கிராமமோ நெடுச்சலையோ எந்த இடத்தில் பார்த்தாலும் எந்த வாகனத்தை பார்த்தாலும் மிக பிரகாசமாக முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு செல்கிறார்கள் எதிர் வரும் வாகனகளுக்கு இதனால் இடையுறு ஏற்படும் எனும் அக்கறையோ கவலையோ இன்றி. இத்தனைக்கும் இவர்களும் இனொரு புறத்தில் எதிர்வரும் வாகனம் என்பதை புரிந்து கொள்ள மறுகிறார்கள் . 
 


முன்பெல்லாம் இது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது . வாகன ஓட்டிகளும் ஹய் பீம், லோ பீம் இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து ஓட்டுவார்கள் அதுபோக முகப்பு விளக்கில் கருப்புவண்ண பட்டையையோ அல்லது வட்ட பட்டையையோ வாகனத்திற்கு தகுந்தாற்போல் ஒட்டி இருப்பார்கள் . எதிர் வரும் வாகங்களுக்கு அந்த பிரகாசமான ஒளியால் கண்கள் கூசுவது தடுக்கப்பட்டு சாலையும் தெளிவாக தெரியும் . ஹய் பீம் ஒளியை ஒளிரவிட்டு வரும் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனத்திருக்கு தான் வருவதை தெரிவிக்கவும் அவர்களை எச்சரிக்கை செய்யவும் எதிர் புற சாலை தெளிவாக தெரியும் வண்ணம் லோ பீம் விளக்குகளை பயன்படுத்துவதே இல்லை .

இந்த விசியத்தில் கனரக வாகன ஓட்டிகள் நிச்சியம் பாரட்டபடவேண்டியவர்கள் அவர்கள் இதனை சர்வ நிச்சியமாக கடைபிடிகிறார்கள் .அதிகமாக நெடுஞ்சாலையில் பயணிப்பவன் அதுவும் இரு சக்கர வாகனத்தில் என்பதால் அறுதியிட்டு கூற முடிகிறது .... பெரும்பாலான ஓட்டுனர்கள் எதிர் புறம் வரும் வாகனம் இருசக்கரமாக இருந்தாலும் கண்களை கூசுகிறது உங்கள் முகப்பு விளக்கை குறைந்த ஒளிக்கு மாற்றுங்கள் என்பது போல் நமது வாகனத்தின் முகப்பு விளக்கை அனைத்து போட்டால் அவர்கள் குறைந்த ஒளிக்கு உடனே மாறி விடுகிறார்கள் . சில வாகன ஓட்டிகள் அவர்களை நாம் கடக்கும் வரைக்கும் சில நொடிகளுக்கு முகப்பு விளக்கை அனைத்து விடுகிறார்கள் . ஆனால் இந்த நகர் புறத்தில் இருக்கும் பேருந்து , மற்றும் மகிழ்வுந்து ஓட்டிகள் இதற்க்கு எல்லாம் கண் சாய்ப்பதே சிமிட்டுவதே கிடையாது . நகர் முழுக்க பிரகாசமான தெரு விளக்குகள் எறிந்தாலும் சாலை மிக தெளிவாக தெரிந்தாலும் அவர்களின் வாகனத்தின் முகப்பு விளக்கு மட்டும் ஏன் இத்தனை பிரகசாமாக எரிகிறது ?.. இப்போது மழை பெய்து சாலைகளும் தெருக்களும் குண்டும் குழியுமாக இருக்கிறது . எதிர் புறம் பிரகாசமாக வரும் வாகங்களின் கண்ணை கூசும் ஒளிகளால் அந்த குண்டும் குழியுமான சாலை கண்ணனுக்கு தெளிவாக புலப்படுவதே இல்லை . கவனிக்காமல் பழக்கம் இல்ல சாலைகளில் சென்றால் நிச்சியம் விழுந்து எழவேண்டியது தான் .


முகப்பு விளக்கின் கண்ணாடியில் நிச்சியம் கருப்பு பட்டையையோ அல்லது கருப்பு வட்ட பட்டையையோ ஒட்டி இருப்பதை காவல் துறையினர் இதனை எல்லாம் முறைபடுத்த்வதில்லை அவர்களுக்கு இதற்கு எல்லாம் நேரமும் இருப்பது இல்லை அவர்களுக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் , வீர தீர சாகசம் போன்ற தமக்கு தாமே பட்டம் வழங்கி கொள்வதற்கே நேரம் போதவில்லையாம் . அவர்களை கடிந்து நாம் என்ன செய்ய முடியும் . நாமது இதனை எல்லாம் சரி செய்யலாமே நமக்கு நாமே கொஞ்சமேனும் இதனை பின்பற்றினால் எதிர்வரும் வாகன ஒட்டிகளும் உணருவார்கள் . நமக்கு சாலை பிரகாசமாக வேண்டி எதிர்வரும் வரும் வாகன ஓட்டிகளுக்கு வாழ்க்கையை இருளில் தள்ளாமல் இருக்கலாமே நாமாவது .




அப்பறம் நீங்க எல்லாம் எங்க ஊருல நடக்கற ஈரோடு பதிவர்கள் வாசகர்கள் சங்கமம்-2010 நிகழ்விற்கு வருகிறிகள் தானே ... உங்களை எல்லாம் எண்ணத்தாலும் எழுத்தாலும் சந்தித்திருந்தாலும் உருவமாக உணர்வாக சந்திக்க போகும் நிகழ்வை நானும் ஆர்வமுடனும் ஆசைகளுடனும் எதிர் நோக்குகிறேன் .




இடம்:
டைஸ் & கெமிக்கல் மஹால்
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

புதிய கழகம் உதயம் சமுக மாற்றம் ஒன்றே எனது குறிக்கோள்.

எனது ஆட்சியின் தேர்தல் வாக்குறுதி



சென்னை ல மட்டும் இப்ப 35000 கோடி ருபாய் திட்டங்கள் போயிட்டு இருக்கு கண்டிப்பா பத்து சதவீதம் கமிசன் கிடைக்கும் . இதே மாறி எல்லா ஊர்களுக்கும் நிறைய திட்டம் அறிவிச்சு நிறைய கமிசன் வாங்கி இப்ப எனக்கு நன்கொடை கொ...டுக்கறவங்களுக்கு திருப்பி தரேன் அது போக அரசாங்க வேலை, மானியம் , அரசாங்க ஒப்பந்தம் எல்லாம் தருவேன் ... அப்பறம் வாக்களர்களுக்கு மூன்று வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டம் , வீட்டுக்கு இரண்டு மடி கணினி இணைய இணைப்புடன் , வருடத்திற்கு 6 உடைகள் , 3 ஜோடி காலணிகள் , இலவச மருத்துவ திட்டம் அதுபோக கல்லுரி செல்லும் மாணவர்கள் ஆண்களாக இருந்தால் 150 cc இருசக்கர வாகனம் , பெண்களாக இருந்தால் ஹோண்டா , ஸ்கூட்டி போன்றவையும் , அலுவலகங்களுக்கு செல்லும் ஆண் பெண் இருவருக்கும் செடான் கார் வகைகளில் எதாவது ஒன்றை 10 லட்சத்தில் தருவேன் , திருமணம் செய்ய பெண்ணுக்கு 100 சவரன் ஆணுக்கு மோதிரம், கைகாப்பு , சங்கிலி 15 சவரனுக்கும் புதியதாக பிறக்கும் குழந்தைக்கு தாய் பாலில் இருந்து அந்த குழந்தைக்கு வேலை வாங்கி கொடுக்கும் வரை அனைத்து எனது கழக அரசு ஏற்று கொள்ளும் .முதியவர்களுக்கு இந்துவாக இருந்தால் காசி ராமேஸ்வரம் போன்ற திருதலன்களுக்கு கிறுத்துவராக இருந்தால் ஜெருசலம் , முஸுலீம் என்றால் மெக்க மெதின போன்ற இடங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்க படுவார்கள் .... கடவுள் நம்பிக்கை அற்ற முதியவர்களுக்கு உலக சுற்றுலா அனுப்ப படுவார்கள் . குடி மக்கள் இறந்து விட்டால் அவரின் ஈம காரியங்கள் அனைத்தும் அரசே ஏற்று கொள்ளியும் வைத்து விடும்.

இது தவிர குடி மகன்களின் தனிப்பட்ட விருப்பங்களும் நிறைவேற்ற படும் ... குறிப்பகா ... அனுஷ்க , தாமன்ன , திரிசா , குஸ்பு , நமீதா , நயன்தார போன்ற நடிகைகளின் " மானாட மயிலாட மார்பாட " நிகழ்ச்சி ஒரு ஒரு குடிமகனுக்கும் தனி அறையில் நிகழ்த்த படும் ... அதுபோக எதிர் கட்சி உதிர் கட்சி கள் நடத்தும் போராட்டம் மறியல் வேலை நிறுத்தம் போன்ற அவற்றின் வெற்றிக்கு எனது கழக அரசே 500 ருபாய் கொடுத்து கோழியும் குவாட்டரும் வழங்கும் ....

வியாழன், 15 ஜூலை, 2010

கௌரவ கொலைகளும் காதலும்

அடடா இப்ப எந்த தொலைக்காட்சி அலைவரிசையை பார்த்தாலும் செய்தித்தாள்களை படித்தாலும் ஒரு செய்தி கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கிறது அது கௌரவ கொலை என்பது . எதோ இத்தகைய சம்பவங்கள் இப்போது தான் அதிகம் நடப்பது போல் ஊடகங்களும் இதனை பெரிது படுத்துகின்றனர் எதோ இந்த சம்பவம் மட்டுமே அதிகம் நிகழ்வதாக .

நான் இந்த ஊடங்களை சாடவில்லை இவர்கள் இப்போது தரும் இந்த கௌரவ கொலைகளுக்கான முன்னுரிமையை பிற முக்கிய செய்திகளுக்கு தருவதில்லையே என்பதுதான் . சரி விசியத்திர்க்கு வருகிறேன் .


அது என்ன கௌரவ கொலைகள் என்பவர்களுக்கு.



தன் இனம்,மொழி,மதம்,பொருளாதரா நிலை சாராமல் தன்னுடைய மகனோ மகளோ பிற இன,மதம்,மொழி,பொருளாதார நிலையில் உள்ளவர்களை காதலித்தால் அதனை வெறுக்கும் அந்த காதலிப்பவர்களின் குடும்பத்தார் செய்யும் கொலைகளை கௌரவ கொலைகள் என்று ஊடகங்களால் வகைபடுத்தபடுகின்றன.



ஏன் இப்படி கொலைகள் நடக்கின்றன ?..



மிக சாதாரணம் இதனை புரிந்து கொள்வது . மனிதன் எப்போதுமே பரிணாம வளர்ச்சியில் முந்தி சென்றுஒன்றை ஒன்று மிஞ்சி வாழ்வதால்தான் இன்னும் தழைத்து நிற்கிறான்.மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் இருக்கும் சூழலுக்கு ஏற்ப தன்னை சுற்றி ஒரு குழுவாக இருக்க பழகிகொண்டான் அந்த குழுக்கள் பிற்ப்பாடு மொழியாக இனமாக மாறியது.அந்த ஒவ்வொரு இன குழுவுமே தனக்கென சில வரைமுறைகளை கொண்டு வளர்ந்து வந்தது பிற இன கலப்பு நடந்தால் தன சந்ததி அழிந்து விடுமோ என்று பயம் கொண்டான் அப்படி சந்ததி அழிந்து போனால் தன குழுவின் வளர்ச்சி நின்று போய்விடும் அத்தோடு முடிந்தது கதை என்று .அப்படி ஆகும் பட்சத்தில் பரினமத்தின் ஆதாரமான இனபெருக்கம் என்பது இப்படி பட்ட காதல் போன்ற கலப்புகளினால் குறிப்பிட இனத்தின் சந்தத்தி தோன்றாமல் போகும்.ஆகா பரிணாமம் முதலில் விதைத்த உயிர் பெருக்கம் என்பது அவன் தனது இன குழுவாக பழகிக்கொண்டு அதன் ஆதர சுருதியை மட்டும் பிடித்து கொண்டு பிற இனத்தின் கலந்து கொண்டால் தன்னுடைய பரிணாமம் நின்று போகும் என்று கணித்து கொள்வதின் பலன்தான் இந்த கௌரவ கொலைகள் . மனிதன் பரிணாம வளர்ச்சியில் வளரவேண்டும் என்பது போய் மனிதனின் ஜாதி மத மொழி மட்டும் வளரவேண்டும் என்ற குறுகிய வட்டில் சிக்கிகொண்டது பரிணாமம் கொடுத்த சுதந்திரத்தை மீறிய செயலாகும் என்பது என் திடமான எண்ணமாகும்.

செவ்வாய், 29 ஜூன், 2010

காதல்



என்ன மந்திர சொல் இது ..... உலக ஜீவராசிகள் அனைத்தும் ஈடுபடும் ஒரே செயல் இதுதான் . மனித குலத்தில் அதிகம் வறுபடும் சொல்லும் இந்த காதல் தான்.

இது ஒரு இயற்க்கை தேவை அவளவுதனே இதில் இருக்கிறது இதற்க்கு ஏன் இப்படி எதிர்ப்பு ?. அடிகடி கேள்விபடுவதுதான் ஆனால் இந்த முறை என்னை ஏதோ செய்துவிட்டது .இரு வேறு சாதி உயிர்கள் காதல் கொண்டால் அவ்வப்போது வாய்க்காலில் பிணம் போகும் எங்கள் பகுதியில் இல்லை என்றால் அதுவரை மருத்துவ மனை பக்கமே போகாமல் இருந்த பெண்ணுக்கு பல ஆண்டுகள் தீராத வாயிற்று வலி இருபதாகவும் அதனால் தூக்கு போட்டுகொண்டதாகவும் கதை பரப்படும் அந்த பெண்ணின் பெற்றோரே தூக்கி கட்டி இருந்தாலும் இப்படிதான் சம்பவம் பதிவு செய்யப்படும். உள்ளூர் மக்களுக்கு காரணம் தெரிந்திருந்தாலும் காலப்போக்கில் அட அவ பொண்ண வயித்துவளில தூக்குபோட்டுகிச்சுன்னு மிக சாதரணமாக எடுதுகொள்கிரார்கள் அந்த பெண் அவர்கள் சாதியாக இருந்துவிட்டால் . இது ஒரு மாறி அப்படின இன்னொன்னு இருக்கு அவளா அவ அவனோட ஓடி போய்ட்டா பாரேன் ரெண்டு பசங்களை விட்டுட்டு எப்படித்தான் போனாலோ அவனுக்கு வேற ஆள இல்ல இவள இழுத்துட்டு போயிருக்கான் பாரு புத்திகெட்டவன் அப்படின்னு பேசிக்கறாங்க .இஹுவாது அவங்க ஒதின்கிபோனது பரவால . கணவன் உடன் சேர்ந்து இருந்தாலும் அவளுக்கு தொடுப்பு இருக்கு அதன் இப்படி மினிக்கரானு சொல்லறது .

எனக்கு அதிகம் புரிவதே இல்லை வயித்துவலியல் தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் காதலன் ஏன் விரைவில் அந்த இறந்துபோன காதலியை மறந்துபோகிறான் அவனும் மறித்து போகாமல் மனம் செய்துகொள்கிறான் . ( இது ஆண் மட்டும் பண்ணிக்கறது இல்ல ஆண் செத்துபோய் பெண் அந்த காதலனை மறந்து போகும் சம்பவங்களும் இருக்கிறது )

தனது பெண்ணின் வாழ்க்கை சந்தோசத்தை விட சாதி அத்தனை முக்கியமாக நினைப்பதன் காரணம் என்ன ?..

ஏற்க்கனவே திருமணமான பெண் புது இளைஞன் அல்லது வேறொருத்தியின் கணவனுடன் அவர்களை விட்டு போய் வாழும் போது அவளை மட்டும் அவளா அவ ஓடிப்போனவனு சொல்லுவது ஏன் ( ஆணாதிக்கம்னு சொல்லமுடியாது பெரும்பாலான ஆண்கள் இதனை பற்றி பேசுவது இல்லை பெண்கள் மட்டுமே அவளை புறம் பேசுகிறார்கள் )

ஒருவனுடன் அல்லது ஒருத்தியுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது வேறு ஒரு காதல் வந்தால் அந்த காதலை ஏற்றுக்கொண்டு அதனுடனும் வாழ்வது அதனை தவறா ?.. ( என்ன புத்தி இது அப்படின்னு கேக்காதிங்க )

படிக்கறவங்க எல்லாம் மறக்காம கொஞ்சம் பின்னுட்டம் போடுங்கள் இதனை ஒட்டி இனி நிறைய பதிவுகள் இடவேண்டியதாக இருக்கிறது உங்கள் கருத்துக்களுக்கு ஏற்ப என்னுடைய விளக்கங்களை கொடுக்க முயலுவேன்.

அட இந்த பதிவு ஆரம்பிச்சதுக்கான காரணம் நேத்து எங்க பக்கத்துக்கு ஊருல ஒரு பொண்ணு வயித்து வலில தூக்கு போட்டுகிசுங்க ( ஒரு வேலை உண்மையாலும் வயிதுவலிய இருக்கும் எனக்கு அந்த பொண்ண ரொம்ப பிடிக்கும் அதன் பாதிப்புதான் இந்த பதிவு பாவம் நல்ல படிக்கும் சிலவருடங்களுக்கு முன் எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த பெண்ணும் கூட கல்லுரிபடிப்பின் பாதியிலே இப்படி அந்த பொண்ணுக்கு வயித்துவலி வந்திருக்க கூடாது . கொஞ்சம் படிப்பு முடித்து நல்ல வேலை கிடைத்திருந்து வந்திருந்தா வைத்தியம் பாதிருக்கலாமுங்க . சோகமாஇருக்கு )

திங்கள், 21 ஜூன், 2010

உலக தமிழ் செம்மொழி மாநாடா உலக தமிழ் இறுதி மாநாடா




அடேங்கப்பா எங்க பாத்தாலும் உலக தமிழ் மாநாடு பத்தி தான் பேசறாங்க ( செம் மொழி ) நல்லவிசியம்தாங்க நிறைய ஆய்வு கட்டுரைகள் விவாதங்கள் அடுத்த கட்டவளர்ச்சி கோவை மாநகரத்துல நிறைய மரம் போச்சு அடிப்படை தேவைகள் மாநாட்டை ஒட்டி வேகமாகவும் விவேகமாகமும் செய்து தந்திருக்காங்க நிறையபேரு வசூலில் கொழித்து இருக்காங்கனு பேச்சு வருது திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் கலைஞர் அவர்களுக்கும் ஒரு பேரு கிடைக்குது துணை முதல்வர் ஸ்டாலின் நல்லாவே எல்லா பணிகளையும் முடிக்கி விட்டு திறம்பட மாநாட்டை நடத்த திட்டம் போட்டு அதன் வழியில் அருமையாகவும் செயல்படறார். நிறைய தமிழ் அறிஞர்கள் அவர்கள் அறிவின் நீள அகலங்களை நமக்கு கொடுக்க இருக்கிறார்கள் அதற்க்கு என் பணிவான வணக்கம்

மத்த மொழிகளில் நம்ம தமிழ் மாறி இருக்கணு எனக்கு தெரியலைங்க நான் அத்தனை பெரிய ஆளு எல்லாம் கிடையாது ஆனா தெரிஞ்சத வச்சு சொல்லறேனுங்க. தமிழ் ஆதி மொழியாக இருந்தாலும் அதனை மூன்று பெரும் பிரிவுகளாக பிரித்து ஆராய முடியும் முத்தமிழ்ன்னு சொல்லராங்க அதனை
இயல் இசை நாடகம் என்று . மூன்றும் ஒரே கற்பிதமான மொழி என்பதில் வந்தாலும் மூன்றுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு .

இயல் என்பது நாம் சாதரணமாக பொதுவழக்கில் கொண்டு இருப்பது இதற்க்கு எழுத்து வரலாறு பன்மை தன்மை என்று நிறைய இருக்கு இப்ப நடக்க போற மாநாடு கூட இயல் தமிழை முன்னிறுத்தி தான் நடக்க இருக்கிறது . அனால் இசை, நாடகம் எனும் இரண்டு தமிழும் எதோ போன ஜென்மத்தின் பாவங்களை போல நடத்த படுவது வேதனை அளிக்கிறது .ஒரு வேலை இசை என்பது பார்ப்பனர்கள் சார்ந்தது என்று போலி தமிழ் திராவிடர்கள் நினைத்து கொண்டார்களோ என்னவோ நாடக தமிழை ஏன் இப்படி ஒதிக்கி இருக்கிறார்கள் என்பது முற்றிலும் புரியாத விசியாகமாக இருக்கிறது .

இசை தமிழ் பற்றிய கற்றுரைகளோ ஆய்வரிக்கைகளோ நாடக தமிழ் பற்றிய கற்றுரைகளோ ஆய்வரிக்கைகளோ இல்லை இந்த மாநாட்டில் என்ன செய்தது இந்த இரட்டை தமிழ் இவர்களுக்கு ?.. இயல் தமிழ் பொது புத்தியில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது எப்படியும் வளர்ந்து கொண்டு இருக்கிறது அனால் இசையும் நாடகமும் அல்லவே சவளை பிள்ளைகளை போல இருக்கிறது இன்றைய நிலையில் .

இயல் தமிழ் பற்றி ஆயிரம் கட்டுரைகள் வந்தால் இசைக்கும் நாடகத்திற்கும் ஒரு நூறு கட்டுரைகள் கூடவா வரவில்லை ?.. அப்படியானால் இதுவரை ஆண்டுவந்த திராவிடம் பேசும் பெரியாரின் வாரிசுகள் தமிழ் கொடை ஆற்றியது இவளவுதான ?.. இனிவரும் ஆண்டுகளிலாவது இசை தமிழையும் நாடகத்தமிழையும் வளர்க்க ஏதேனும் வழிகள் கொண்டுவர போகிறார்களா ?..

இவர்களா செய்யபோகிறார்கள் பள்ளி கல்வியில் 6000 ஆசிரியர்கள் பற்றகுறையாம் அட தமிழ் ஆசிரியர்கள் இல்லையாமங்க இவங்க இதையே கவனிக்க முடியலை தமிழ எங்க வளர்க போறாங்க விளம்பரத்துல அவங்கள வளதுக்கவே நேரம் பத்தலை .

இன்னொரு பக்கம் உண்மை தமிழன் நாம் தமிழன் உலக தமிழ்னு சொல்லறவங்க எல்லாம் புலிக்கு வால பிடிக்கறதுக்கு தான் முயற்சி செய்யறாங்க ராஜபக்சே எத்தன சதவீதம் இலங்கை தமிழர்கள் சாக காரணமோ அதே அளவிற்கு புலி தலைவன் பிரபாகரனும் காரணம் என்பதை மறைக்கும் முயற்சி செய்யவே அவர்களுக்கும் நேரம் போதவில்லை இருக்கும் நேரமும் புலிகளை ஆதரிக்கதவர்களை தமிழ் இன துரோகி முத்திரை குத்த நேரம் போதவில்லை அவர்களுக்கு . விடு தமிழா தமிழ் இனி மெல்ல சாகும் என்பது எல்லாம் பழங்கதை தமிழை கொண்டுபோய் சுடுகாட்டில் வயதாகி விட்டது வந்து வாய்க்கரிசி போடவேண்டியது தான் மிச்சம் அதையும் இவர்களே போட்டு முடித்து விடுவார்கள் .

சனி, 12 ஜூன், 2010

எங்கே இருக்கிறது ?.. ( பெரியவர்களுக்கு )





ரயில் பயணம் யார் ஒருவருக்கும் அலுப்பூட்டுவதாக இருக்கவே முடியாது என்பது என் எண்ணம் .அதிலும் குழந்தைகள் நமது இருக்கைக்கு அருகில் இருந்து விட்டால் எனக்கு உலகம் மறந்து போகும் குட்டி குட்டி கதைகள் பேசி விரல் மடக்கி காசு மறைத்து மந்திரம் போட்டு என்று அவர்ளுடன் அவர்களாகவே மாறி விடுவேன் . என் அலைபேசி ipod  நானோ போன்ற புகைப்பட வீடியோ கருவிகள் அனைத்திலும் என்னுடன் பயணம் செய்யும் குழந்தைகளினால் நிறைந்திருக்கும் . என்னுடைய சிறந்த நண்பர்கள் என்று என்னுடன் பயணம் செய்த குழந்தைகளை எந்த மன உறுத்தலும் இல்லாமல் சொல்லமுடியும் . கடல் கடந்து கனடாவில் இருந்து என்னுடன் ரயில் பயணத்தில் வந்த செர்லியாகட்டும் அமிர்தானந்த மாயி மருத்துவமனையில் இதய சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பிய பெங்களூருவை சேர்ந்த நிஷாந்த் ஆகட்டும் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் ஆகட்டும் இன்னும் இன்னமும் என் பயணங்களை சுகமாகுவதில் குழந்தைகளுக்கு மிக பெரிய அக்கறை இருக்கிறது போல் உணர்கிறேன் .

எனக்கு ஒரு சிறு வருத்தம் ஒன்று உண்டு  நான் சிறுவனாக இருந்த போது அம்புலிமாம ,கோகுலம் , ராணி காமிக்ஸ் , முதுகாமிஸ் , தினமலர் சிறுவர் மலரில் என்று நிறைய கதைகள் வரும் இப்போது அப்படி பெரிய புனைவுகள் குழந்தைகளை குதுகலத்துடன் அறிவையும் வளர செய்து மனதையும் உறுதியாக்கும் கதைகளோ புனைவுகளோ ஏதும் இல்லை . இப்போதைய குழந்தைகளின் ஒரே வடிகாலாக நான் வேலு சரவணனை தான் சொல்லமுடிகிறது .சில எழுத்தாளர்கள்  கூட குழந்தைகளுக்கான கதைகள் வருவதில்லை என்று ஏக்க படுகிறார்கள் .

இப்போது பெரியவர்களுகுகான அனைத்தையும் குழந்தைகளுக்கு என்று ஆகிவிட்டது அது சினிமாவாகட்டும் பாடல்கள் ஆகட்டும் தொலைக்காட்சி நிகழ்சிகள் ஆகட்டும் எல்லாமே பெரியவர்களுக்கு மட்டும் இருந்து குழந்தை உலகத்தை எடுத்து இதன் மீது திணிக்கிறோம் .

முன்பெல்லாம் நீதிபோதனை என்று ஒரு வகுப்பு எனது பள்ளியில் இருக்கும் இப்போது அது எல்லாம் இல்லையாம் . அந்த வகுப்பில் எனது ஓவிய ஆசிரியர்தான் வகுப்பெடுப்பார் மரியாதை ராமன் கதைகள் பரமார்த்த குருவும் அவரின் சீடர்களும் சில ஜென் கதைகள் என்று சுவாரசியமாக இருக்கும் பள்ளி கல்வி துறை இப்போது இதனை எல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை .

சரி இலக்கிய உலகம் என்ன செய்கிறது குழந்தைகளுக்கு என்று பார்த்தல் ஒன்றுமே இல்லை வருத்தமாக தான் இருக்கிறது ."காலசுவடு " " உயிர்மை" என்று இரண்டு உலகம் பின் " மக்கள் ஜனநாயக இலக்கிய கழகம்" என்று மற்றொன்று இவர்களுக்கு எல்லாம் பேனா எதற்கு என்றால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் ஆயுதமாகவே இருக்கிறது . பெரியவர்கள் சண்டையில் குழந்தைகள் அன்னியப்பட்டு போகிறார்கள் என்பது நமது தமிழ் இலக்கிய உலகமே சான்று . குழந்தைகளுக்கான கதை பாடல் என்று எதாவது புனைய முடிகிறாத இந்த இலக்கிய உலகத்தாரால் . மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளில் இருக்கும் குழந்தைகளின் இலக்கியம் ஏன் இங்கே இல்லை .

எனக்கு வாசிப்பின் மேல் பெரிய ஈடுபாடு வருவதற்கு காரணம் எனது தந்தை . அவர் எனக்கு வாங்கி குவித்த பொம்மைகளை விட புத்தகங்கள் அதிகம் .அனால் இன்று நமது குழந்தைகளுக்கு பாட புத்தகத்தை தவிர வேறு புத்தகம் இருக்கிறது என்று தெரியாத நிலை .சரி வாசிக்கும் பழக்கம் தான் இப்படி என்றால் .விளையாட்டு கூட ரொம்ப சுருங்கி விட்டது வீட்டை தாண்டி ஒரு பெரிய மைதானம் என்பதை இன்றைய குழந்தைகளுக்கு இருப்பதாக காட்டவே நாம் விரும்புவதில்லை .அதுவும் இந்த நவநாகரீக உலகில் " நியுகிளியர் பேமலி" என்று கணவனும் மனைவியும் மட்டும் இருக்கும் தனி குடும்பத்தின் குழந்தைகளுக்கு கிடைக்கும் அடக்குமுறை என்பது அந்த கற்பனைகெட்டாத குழந்தை மனதின் உலகத்திற்கு கிடைக்கும் உயர்ந்தபட்ச தண்டனையாகவே கருதுகிறேன் .கணினியில் விளையாட்டு கையில் கொடுக்கப்படும் ரிமோட் என்று மிக சிறிய வட்டத்தில் அவர்களின் உலகம் சுருக்கபடுகிறது .தாத்த பாட்டி அத்தை மாமா அவர்களின் குழந்தைகள் என்ற குடும்ப உலகம் கூட பறிக்கப்பட்டு விட்டது இப்போது .

ஏன் இன்றைய குழந்தைகளின் மீது நமது சிந்தனைகளை துணித்து அவர்களை அவர்களாகவே இருக்க விடுவதில்லை . குழந்தையாக பிறக்கிறோம் முதுமை வயதில் மீண்டும் குழந்தையாகிறோம் இடைப்பட்ட வயதில் மட்டும் குழந்தை உலகை சூரையாடுகிறோம் நமது எண்ணங்களை திணிப்பதன் மூலம் . நாம் எவளவு பெரிய சுயநலவாதிகள் .நான் மட்டும் குழந்தையாக இருப்பேன் ஏன் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடமாட்டேன் என்பது என்ன நியாயம் .

குழந்தை உலகம் என்பது மிக பெரியது அதில் பெரியவர் உலகத்தை திணித்து சிறுசுகளின் மனங்களை பாழ்படுத்தலாமா....

செவ்வாய், 1 ஜூன், 2010

மதம் என்றால் என்ன ?..

தலைப்பு வணக்கம் சொல்லி ஆரம்பிக்க சொன்னாலும் மனசு ஏற்றுக்கொள்ளவில்லை .காரணம் இந்த மதத்தை வைத்து எத்தனை எத்தனை பிரச்சனைகள எத்தனை எத்தனை கொலைகள் எத்தனை எத்தனை கற்பழிப்புகள் எத்தனை எத்தனை ஆக்கரமிப்புகள் . கருமம் இந்த மதம் அப்படிங்கறதுல என்னதான் இருக்கு ?.. என்னத்துக்காக இப்படி எல்லாம் நடக்குதுன்னு . இதனால என்ன நல்லது நடக்க போகுது ?...இல்ல நடந்துச்சு ?..மதம் அவசியமா ?..இதனால் மனித குலம் சாதித்தது என்ன ?.. இப்படி பட்ட ஆயிரம் கேள்விகள் எழுகிறது .ஆனால் அதற்கும் முன்னால் மதம் என்பது பற்றி தெரிந்து கொள்ள விளைந்ததின் விளைவுதான் இந்த பதிவு . 

மதம் இந்த சொல்லுக்கு என்னவோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது . கடவுளை நம்புகிறவனும் நம்பாதவனும் இதனை பிடித்து தொங்கிக்கொண்டே இருக்கிறன் . அந்த ஈர்ப்பு இல்லை என்றால் அவர்கள் இப்படி தொங்கி கொண்டு இருந்திருக்க தேவை இல்லை . 

நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா அல்லது இருந்தால் நன்றாக இருக்கும் இல்லேன்னா கொஞ்சம் மோசமா இருக்கும் என்ற ஜல்லி அடிப்புகளுக்குள் இப்போதைக்கு போகவில்லை .என் நோக்கம் மிக சிறிய தேடல் மதம் இதன் தேவை என்ன ?.. என் உருவாக்க பட்டது ?..
அதன் அடிப்படை என்னவாக இருந்திருக்கும் இப்படி பட்ட கட்டமைவின் மூலம் என்ன ?.. மதம் தான் மனிதனை ஒழுங்கு படுத்தியாத என்பது மட்டும் தான் இப்போதைக்கு . பின் வரும் பதிவுகளின் கொஞ்சம் ஆழமாக அகலமாக செல்ல விரும்புகிறேன் .இப்போதைக்கு மதம் என்றால் என்ன என்பது பற்றி மட்டுமே .

ஆதி காலத்தில் மனிதன் கூட்டம் கூட்டமாய் வாழ்ந்து வந்தான் என்பது நாமனைவரும் அறிந்ததே . அப்படி கூட்டங்கள் கொஞ்சம் ஒன்று சேர்ந்து சமூகமாய் மாறியது அந்த சமுகத்திற்கு சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள் தேவை எழுந்த போது ஒட்டு மொத்தமாய் அவர்களை ஒன்று திரட்டி வழி படுத்த மனிதன் உருவாக்கிய அம்சம் கடவுள் .காரணம் எதனை வேண்டுமானலும் அனுகிவிடலாம் ஆராயலாம் கடவுளை எப்படி அணுகுவது அல்லது ஆராய்வது ?... தங்கம் தகரம் என்பது பொருளாக இருப்பதினால் ஆராயலாம் அறியலாம் கடவுள் என்பது வேற்று சித்தாந்தம் தானே . அந்த சித்தாந்தத்தின் மீது பயம் எனும் சாயம் பூசியது தான் மதம் . மனித சமூகத்தை நல்வழி படுத்த உருவான மதம் அவனை அழிவின் பாதைக்கு கொண்டு செல்வது கொடுமை தான் . 

சரி மதம் என்பது பயத்தின் மீது பூசிய சாயம் என்றால் அதன் மீது சாயம் பூசவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது ?.. 

அந்த சாயத்தின் தேவை ஏற்ப்பட காரணம் மனித மனம் . இந்த மனித மானது தன்னுடைய இயலாமையை அகற்றி கொள்ள எதாவது ஒன்றை பற்றிக்கொள்ள வேடியாதாய் இருந்தது. அந்த மனதிற்கு அதற்க்கு காரண காரியங்களை ஆராயமுடியாத ஒரு பொருள் ஒன்றின் தேவை ஏற்பட்டதன் விளைவு கடவுள் . மனம் கொஞ்சம் ஆறுதல் அடைய இயற்கையை அதன் விநோதங்களை கண்டு ஆச்சர்யமுற்றவன் அதனை செய்பவர் கடவுள் என்று நம்ப தொடங்கினான்.அவனது தேவைகளுக்கு கடவுள் என்பதை நம்ப தொடக்கி அந்த தேவைகள் அவனை அறியாமலே அவனே அல்லது பிறர் மூலமாகவோ இயற்கையாகவோ பூர்த்தியான போது இன்னும் கொஞ்சம் அதிகப்படியாகவே கடவுளை அவன் எப்படி எல்லாம் கற்பனையில் உருவ படுத்த முடியுமோ அப்படியெல்லாம் உருவபடுத்தி அவனின் தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டான் . அவனது நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவனுடனிருந்த  மனிதன் நம்ப ஆரம்பிக்க அப்படி நம்ப ஆரம்பித்த பொதுவான கூட்டத்தை மதம் என்று சொல்லலாம் . ஆக சமுதாயத்தை கட்டுக்குள் வைக்கவும் சட்ட திட்டங்களை போட்டு ஒழுங்கமைகவும் நம்பிக்கையை கொடுக்கவும் உருவாக்க பட்டது கடவுளும் மதமும் என்று நம்புகிறேன் . ஆனால் இப்போது நடப்பது எல்லாம் வேறு அதனை பற்றியெல்லாம் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம் . 

படிச்சிங்கன்ன பின்னுட்டம் போடுங்களேன் உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் என் கருத்துக்களில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள இயலும் அல்லவா ?..

ஞாயிறு, 30 மே, 2010

பெண் ஏன் அடிமையானாள் ?..


  தலைப்பை பார்த்தவுடன் பெரியார் தாசர்கள் கொஞ்சம் சந்தோசபடலாம் .அடிக்கடி கருஞ்சட்டை காரர்களிடம் இடிவாங்கும் பார்ப்பனர்கள் கொஞ்சம் வருத்தபடலாம் . நான் இங்கே இருவரை பற்றியும் எழுதவில்லை மதங்கள் கூறுவதை பற்றியும் எழுத வில்லை .கொஞ்சம் என் அறிவிற்கு எட்டிய என் சிந்தனையில் உதித்த நான் பார்த்த நான் அனுமானித்த என்னால் உணரப்பட்டதன் மூலம் எழுதுகிறேன் . பெண் இப்படித்தான் அடிமையாகி இருக்கவேண்டும் என்று . ( நான் நான் ன்னு சொல்லறேன்னு தப்பா நினைக்காதிங்க நான் ஒன்னும் பெரிய ஆளு இல்லைதாங்க )

    சரி விசியத்திற்கு வருவோம் , பெண் இந்த சொல்லை உதிர்க்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஒருவேளை நான் ஆண் என்பதாலோ ( வாங்க பாத்தியா இந்து மாதம் பெண்ணை எப்படி பாக்க வச்சுருக்கு ன்னு சொல்லற கருஞ்சட்டை காரர்களே... மதத்தை விடுத்தது பாருங்கள் உங்கள் ஆண் குறி கூட எழுந்து நிற்கும் பெண்ணின் அங்கங்களை பார்க்கும் போது ) . ஆண் பெண் என்பது என்னை பொறுத்தவரை இரண்டு உயிர்கள் உடற்கூறு ரீதியாக அங்க அவையங்கள் மட்டுமே மாறு பட்ட மனித உயிர்கள் . இதில் ஆண் மட்டும் என்ன உசத்தி பெண் மட்டும் என்ன தாழ்ந்தவள் ?.. இந்த கேள்வி எப்போதும் என்னை குடைந்துகொண்டே இருக்கும் . காரணம் அது என்ன எல்லாமே ஆண் மட்டும் செய்யணும் பெண் மட்டும் சுகமா இருந்துக்கற ஆனா பெண் அடிமைத்தனம் ( இத எப்படிங்க சொல்லறது ஆண் அடிமைத்தனமா இல்ல பெண் அடிமைத்தனமா ) ஆண் அடக்கி ஆளுகிறான் பெண் அடங்கி போகிறாள் என்று நாவிருக்கும் உதடுகள் எல்லாம் கூச்சல் கூப்பாடுகள் அப்படி என்னதான் ஆண் அடிமை படுத்தி வைத்திருக்கிறான் பெண்ணை என்று பார்த்தல் பெரியதாக ஒன்றும் தோணவில்லை .அட உண்மையாலும் தாங்க சொல்லறேன் ஆண் ஒன்னும் பெரிசா பெண்ணால வெளிய வர முடியாத அளவிற்கு ஒன்றும் அவளை ஆளவில்லை அவளே அவளுக்கு அடங்கி கொள்கிறாள் பலியை தூக்கி ஆண் மீது போட்டுவிட்டு அதற்கும் துளி கண்ணீர் சிந்துகிறாள் . அவளால் ஆண் செய்யும் எதனையும் செய்ய முடியும் ஆனால் அவள் செய்ய மாட்டாள் ( வாங்க இப்பதான் நாங்க எல்லா துறையுளையும் முன்னுக்கு வந்துட்டு இருக்கோமே ன்னு சொல்லாதிங்க இன்னும் முனேருங்க இப்ப நீங்க பண்ணறது எல்லாம் கொசுறு ) அவளுக்கு என்றைக்குமே பலி போட ஒரு ஜீவன் வேண்டும் நாய் பூனை எல்லாம் வேலைக்காகாது இன்னொரு மனிதனாக இருந்தால் தான் வசதி ( எப்பவும் ஜெய்க்கனும் அப்படின்னு போட்டி போடறவங்க தன்னை விட பலம் குறைந்தவர்களிடம் தான் போட்டி போடுவார்கள் அப்படித்தான் பெண்ணும் அவளை விட பலம் குறைந்த ஆணிடம் போட்டி போடுகிறாள் ) காரணம் மிருகங்களிடம் போட்டி போட்டு ஜெயிப்பது என்பது கடினம் ஆனால் ஆண் எப்போதுமே பெண் என்பதால் கொஞ்சம் கருணை காட்டுகிறான் சரி பரவாயில்லை என்று . இத்தனைக்கும் அவள் தன்னை போல் ஒரு மனித உயிர் என்பதை அறிந்திருந்தும் .

ஏன் ஆண் கருணை காட்டுகிறான் ?. பெண் ஏன் தன்னை ஆண் போல வளர்த்துகொள்லாமல் இருந்தது விட்டால் ?.. 

    இதற்க்கான காரனத்தனை ஆராயும் போது எனக்கு புலப்பட்டது இது தான் . இதனால் தான் பெண் தனுக்கு தானே அடிமையாகி கொண்டு ஆண் மீது பலி சுமத்தி விட்டாள் . இத்தனைக்கும் பெண்ணுக்கு பரிணாமம் ஏனைய சுதந்திரத்தை கொடுத்திருந்தும் அதனை எல்லாம் அவள் பயன்படுத்தி கொண்டதே கிடையாது . பரிணாம சுதந்திரமே ஆணுக்கு கிடையாது என்பது என் வதம் . 

    சரி அது என்ன காரணம் ?. அந்த காரணமா பெண்ணை அடிமை படுத்தி வைத்திருகிறது என்று கேட்டாள் நான் ஆம் என்று சொல்லுவேன் .கேவலம் ஒரு காரணமா அவளை அடிமை படுத்தி வைத்திருகிறது பிறகு ஏன் அவள் ஆண் அவளை அடிமை படுத்தி வைத்திருக்கிறான் என்று கூறுகிறாள் என்றால் அவளுக்கு இப்படி பலி போட்டு பலி போட்டு அவனை எப்போதும் அவளிடம் சூழ்நிலை கைதியாகவே வைத்திருக்க இந்த சொல் இன்றியமையாமல் இருப்பதனால் தான் . அட காரனத்த சொல்ல மாட்டையா என்று கோவ படாதிர்கள் அதற்க்கு தான் வருகிறேன் . 

    மனிதன் காட்டண்டியாக வாழ்ந்த போது அவனுக்கு தெரிந்த தொழில் வேட்டை . ( நான் உலகின் முதல் தொழில் விபசாரம் என்று எல்லாம் நம்ப மாட்டேன் ) இங்கே மனிதன் என்பது ஆண் பெண் இருவரையுமே குறிக்கும் . அவன் வேட்டை தொழிலுக்கு போகும் போதெல்லாம் அவளும் போவாள் காரணம் அப்போது இருவருமே போனால் தான் உணவு . எப்படி இப்ப எல்லாம் ஆண் பெண் இரண்டு பேருமே வேலைக்கு போனத்தான் கொஞ்சம் சொகுசா வாழ முடியும்னு நினைகரமோ அது மாறி. இப்பவாது சொகுசா வாழவும் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் அது இதுன்னு ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் மணிதான் காட்டன்டியாய் வாழ்ந்த போது அவனது தேவைகள் மிக குறைவு ஏன் ஒன்றே ஒன்று தான் அது உணவு .அந்த உணவுக்கான வேட்டை தொழிலுக்கு மனிதன் போகுபோதேல்லாம் சில சமையம் அவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட மிருகங்கள் அவனை தாக்க தொடங்கின . அதானால் அவன் மிகுந்த அச்சம் கொண்டவன் ஆனான் ( இங்கே தான் பரிணாமம் மனிதனுக்கு தேவையான ஆதர உணர்ச்சியான பயத்தை அறிமுக படுத்தி வைத்திர்க்கலம் ) அவ்வாறு மிருகங்கள் அவனை தாக்குவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க தொடங்கினான் . பெண் சில நாட்களுக்கு மட்டும் சோர்ந்து போய் திறன் குறைந்து இருப்பது தான் தான் காரணமாக இருக்குமோ என்ற உணர்வு தோனுகிறது அந்த நம் முன்னோர் காட்டாண்டி மனிதனுக்கு .அதிலும் அவனுக்கு சந்தேகம் அவள் திறன் குறைந்து இருப்பதை பார்த்த மிருகங்கள் அவனை வேட்டையாடுகிறது என்று . பிறகு கண்டு உணர்ந்தான் . ரத்த வாடை தான் காரணம் என்று . சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பெண்ணிடம் இருந்தது உதிரம் வெளியேறுகிறது அந்த சமையங்களில் பெண் திறன் இல்லாமல் போய்விடுகிறாள் மற்றும் அந்த ரத்தவாடை கண்டுதான் மிருகங்கள் அவனின் இருப்பிடத்தை கண்டு கொண்டு அவனை தாக்குகிறது என்பதை .இனி பெண் தன்னுடன் வந்தால் முதலுக்கே மோசம் வந்து விடும் என்று அஞ்சி அவளை தடுத்து நிறுத்துகிறான் . அவளை தங்க வைக்க பாதுக்காப்பான இடமமைத்து அங்கேயே இருக்குமாறு பார்த்துகொள்கிறான். அவளும் மிருகங்களிடம் இருந்தது தானை காத்து கொள்வதற்கு அந்த ஏற்பாட்டை ஏற்று வேட்டைக்கு செல்வதில் இருந்தது விலக்கு பெறுகிறாள் . அதுவும் மாதத்தில் சில நாட்கள் நடக்கும்  இயற்க்கை சுழற்சியை சாதகமாக அவள் புத்தி பயன்படுத்திகொண்டது. வேலைக்கு செல்ல வேண்டியது இல்லை சாப்பாடு துணிமணி எல்லாம் வந்துரும் அப்படின யாரு வென சோம்பேறி ஐடலம் இல்லைங்கள அதுமாரி பெண் கொஞ்சம் கொஞ்சமாக சுகவாசி ஆக தொடங்குகிறாள் ஆண் கஷ்ட பட்டு வேட்டையாட சென்று வேட்டையாடி வீட்டில் சும்மா இருக்கும் பெண்ணுக்கு என்று உணவு வழங்க ஆரம்பித்தானோ அன்றே அவள் மெல்ல மெல்ல அடிமை ஆக தொடங்குகிறாள் .இத்தனைக்கும் அவள் ஆணுக்கு சளைத்தவள் இல்லை என்று தெரிந்தும் . ஆணுக்கும் கஷ்ட படுவது நான் தானே இவள் சும்மா தானே இருக்கிறாள் என்று அவளை ஆள முற்ப்படுகிறான் .அவளும் அதற்க்கு இடம் கொடுத்து விடுகிறாள் காரணம் உயிர் வாழ உணவு தேவை அந்த உணவு வேலை செய்யாமல் வேட்டையாடாமல் இருக்கும்போது ஆணால் அவளுக்கு கிடைகிறது என்பதால் .இப்படியே அவள் மெல்ல மெல்ல தொடர பரிணாமம் அவளை அவளின் திறன்களை எல்லாம் குறைக்க ஆரம்பித்து பின் ஒட்டுமொத்தமாக பெண்ணை மெல்லிய உடல்வாகு கொண்டவளாக மாற்றி விட்டது .இதனையே சாக்காக வைத்து அவளும் தன்னை வளர்த்தி கொள்ளாமல் ஆண் மீது பழிசுமத்தி வாழ பழகி கொண்டாள்.

   நாகரீகம் வளர ஆரம்பிக்கிறது பெண் மாத சுழற்சி நாட்களில் விரைவில் நோய் தொற்றுக்கு ஆளாக ஆரம்பிக்கிறாள் அதனால் மரணம் அடையவும் செய்கிறாள் . அதுவரை வீட்டு வேலை என்று சிலவற்றை அந்த மாத சுழற்சி நாட்களிலும் அவள் செய்துவந்தால் . மனிதன் பார்த்தான் இப்படியே இவள் நோய் தொற்றுக்கு ஆளாகி வந்தால் நமக்கு சந்ததி தொடராதே என்று கண்டுகொண்டு அந்த நாட்களில் அவளுக்கு முழு ஓய்வு கிடைக்குமாறு பார்த்து கொள்கிறான் அவளுக்கு தானியான இடம் சுகாதாரமாக வழங்கி . இதனை எப்படி செயல்படுத்துவது அப்போது எதோ ஒரு மனிதனுக்கு தோன்றிய எண்ணம் தான் கடவுள் கோவித்து கொள்வார் தீட்டு என்று அவளை கட்டாயபடுத்தி முழு ஓய்வுக்கு அனுப்புகிறான் .அவளும் மரணத்திடம் நோய் தொற்றுக்களிடம் இருந்தது தன்னை காத்து கொள்வதற்காக மனிதன் இட்ட கட்டளைக்கு இசைந்து கொள்கிறாள் . அதுவரை அவள் புதிய உயிரை  படைக்கும் மேலானவள் என்று நம்பி வந்த மனிதன் கொஞ்சம் காழ்புணர்ச்சி கொண்டு இருந்தான் அவளை எப்படி நமக்கு கீழ் என்று உணர வைப்பது என்று அவனின் சிந்தனை பரிணாம வளர்ச்சி அடைந்து எதவது ஒரு புது புது காரணத்தை அவளுக்கு கொடுத்து அவளை எளிமை படுத்தி அடக்க ஆரம்பித்தான் பெண்ணும் சுலபாமா இருகிறதே என்று அடங்கிகொள்ள ஆயத்தமானால் . இப்படி தான் பெண் அடிமையாகி இருக்க வேண்டும் . சர்வைவல் தான் காரணமாக எனக்கு தெரிகிறது . மத்தபடி பெண் ஆணுக்கு ஒன்றும் சளைத்தவள் கிடையாது அவளால் எல்லாமே செய்ய இயலும் அவளும் சில பல சந்தர்ப்பங்களில் அவளை நிருபித்து கொண்டுதான் இருக்கிறாள்.அவளை அவளே உந்தித்தள்ளி கொண்டாள் ஒழிய பெண்ணடிமை என்னும் மாயவலையை தாண்டி ஒட்டுமொத்த பெண் இனம் வெளிவராது என்பது எண்ணம் . 

நன்றி இத்தனை நேரம் இதனை படித்தற்கு பின்னுட்டங்களை எதிர்பார்க்கிறேன் . கொஞ்சம் உணர்சியவ படாமல் உணர்வு பூர்வ அணுகுமறை பின்னுட்டங்களை . 

திங்கள், 24 மே, 2010

போக்குவரத்து ....

சொல்லறதுக்கு சுலமாப இருக்குங்க இந்த வார்த்தை . அனால் இன்று இந்த வார்த்தை உபயோகிப்பதை போல் அத்தனை சுலபமாக இருப்பதில்லை நமது அன்றாட போக்குவரத்து . முன்மெல்லாம் பயண நேரம் மிக அதிகமா இருந்தாம் தாத்தா பாட்டி எல்லாம் கதை சொல்லுவாங்க . வண்டி பூட்டி போகணுமாம் அதும் எப்படி காலைல ஒரு விசேசத்துக்கு கிளம்பனும்ன நள்ளிரவே பயணம் செய்ய ஆரம்பிக்க வேண்டுமாம் . எத்தனை தூரம்னு நினைச்சிங்க ஒரு இர்வத்தி அஞ்சு கிலோ மீட்டர் . அப்பா எல்லாம் அத்தனை கஷ்டமா இருந்து போக்குவரத்து . இவங்களுக்கு முன்னாடி வாழ்ந்தவங்க எல்லாம் நடை போட்டு போயிருப்பாங்க நினைச்சாலே ரொம்ப கஷ்டமா இருக்கு இன்னைக்கு நாம இருக்கற போக்குவரத்து சூழலை பார்க்கும் போது.

சிநேகிதி ஒருத்தி லண்டன்ல இருக்க டேய் நான் ஏர்போர்ட் ல இருக்கேன் நாளைக்கு நைட் வந்து சேன்தீருவேன் என்ன பிக் அப் பண்ணிக்க அப்படின்னு சொல்லுவா . இனொரு நண்பன் இருக்கான் அவன நான் " பிளைட் மிஸ் பண்ணி " ன்னு சொல்லுவேன் . காரணம் டொமஸ்டிக் பிளைட் தானடா ஒரு மணிநேரத்துக்கு முன்னாடி இருந்த போதும்னு சொல்லியே மிஸ் பண்ணிருவான் . நான் மட்டும் என்னவாம் . 3.45 இகு கோவை ஈரோடுல இருந்து கிளம்பும் நான் 2.30 இகு வீட்டுல இருந்து கிளம்புவேன் .24 கிலோமீட்டர் தான 30 min ல போய்கிடலாம்ன்னு நினைச்சு கிளம்புவேன் ஆனா பாருங்க நான் லேட்டா ஐடுவேன் எப்பவும் முப்பது நிமிஷம் லேட்டா வர கோவை எக்ஸ்பரஸ் அன்னைக்குனு பாத்து சரியான நேரத்துக்கு வந்து சரியான நேரத்துல கிளம்பி போயிருக்கும் . எல்லாம் தலைஎலுத்துனு அடுத்த ரெய்ல புடிக்க உக்காந்துக்குவேன் சிவனேன்னு . சரி இது கூட என்னைக்காவது நமக்கு நடக்கராதுன்னு நினைச்சா தினம் தினம் நடக்குதே ஒரு ட்ராபிக் ஜாம் . அட போடா பேசாம நாம செத்து போய்டலாம்னு தோணும் . அதும் இந்த வெய்யல் காலத்துல போக்குவரத்து நெரிசலில் மாட்டிகிட்ட அவளவுதான் பொரிக்கவோ வறுக்கவோ தேவையே இல்லைங்க . அப்படியே சாப்பிடலாம் மனித கறியை . அந்த அளவுக்கு சூரியன் சுட்டு எரிக்கறது இல்லைங்க !!! நாம எல்லாரும் சேந்து உபயோகிக்கற வாகனத்தின் வெப்பமும் சூரியனோட சேந்து கொடுமையான வெப்பத்தை உண்டாக்கி நமை வேக வைக்குது ( ஹ்ம்ம் எப்படியும் அடுத்த வருசத்துக்குள ஏசி கார் ஒன்னு வாங்கினாதான் சமாளிக்க முடியும் போல ).

இத்தனைக்கும் நாம இன்னைக்கு இருக்கற கால கட்டம் நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு நினைத்த வேகத்தில் செல்ல முடியும் என்ற நிலையில் தான் இருக்கிறோம் . அனால் இப்போதெல்லாம் அப்படி பயணபட முடிகிறாத என்ன ?.. என்னைக்காவது சுற்றுலா போறதமட்டும் சொல்லலைங்க தினசரி போக்குவரத்தை தான் சொல்லுகிறேன் . அதுவும் தருமமிகு சென்னையில் பள்ளி கல்லூரி அலுவலகங்களுக்கு செல்லும் போது தான் தெரிகிறது எந்த காலத்டத்தில் வாழ்கிறோம் என்று பத்து கிலோமீட்டர் தொலைவு செல்ல இன்று ஒரு மணிநேரம் ஆகிறது . அத்தனை போக்குவரத்து நெருக்கடி யாரை குறை சொல்லலாம் ?...

ஐய்யா நான் குறை சொல்லரதுக்குனே சில பல ஜீவன்கள் இருக்குதே . அது எல்லாம் யார் யார் ன்னு பாக்கலாமா ?..

1 ) . நீல்மெட்டல் பனால்கா ( இவங்க குப்பை அல்லராங்கள இல்ல குப்பை போடராங்கலானு யாரவது சொல்லுங்க பாக்கலாம் ..

2 ) . மாநகர போக்குவரத்து கழகம் ( ஹ்ம்ம் இவங்கள என்ன சொல்றது போங்க )

3 ) . சென்னை போக்குவரத்து காவல் துறை ( இவங்களுக்கு என்னைக்கு தான் சரியான புத்தி வருமோ .)

4 ) . நாம துணை முதல்வர் மாண்புமிகு.மு.கா. ஸ்டாலின் . ( பாலம் கட்ட்டிடே இருக்காருங்க )

5 ) . சென்னை போக்குவரத்தின் நரம்பு மண்டலம் ஆட்டோ ( வேற வழி இல்லை இவங்க பண்ணறத பாக்கறப்ப )

6 ) நடைபாதை வியாபாரிகள் ( இது என்ன சொற்றொடர் ?.!!! சரியான பதம் தான யாரவது தமிழ் ஆர்வலர் சொல்லுங்களேன் )

7 ) . விதிமுறை மீறிய கட்டிடங்கள் ( கொஞ்சத்த காச சும்மா விடமுடியுமா இடிக்கறதுக்கு சொல்லுங்க பாவமில்லையா அவிங்க )

8) விதிமுறை மீறிய பார்கிங் செய்ய அடிகோலும் வியாபார நிறுவனங்கள் ( உதாரணம் அசோக் நகர் சரவணாபவன் )

9 ) நிறுவனங்கள் வாரியங்கள் :- ( யாருக்காக தோண்டறாங்க நமக்கதன .. நாம வீட்டுல கரண்டு வேணும் தொலைபேசி வேண்டும் கண்ணீர் விடவும் மாண்ட மயிலாட மார்பாட நிகழ்ச்சியை பார்க்க கேபிள் வேண்டும் அந்த நல்ல எண்ணத்துல தான தோண்டறாங்க )

10 ). நீங்களும் நானும் பொதுமக்கள் எல்லோரும் ( ஆமாங்க நாம்தான் மிக பெரிய கரணம் இத்தனை பெரிய போக்குவரத்து நெரிசலுக்கு )
 
சரி இவங்களோட குறைகள் என்ன என்ன ஒன்னு ஒன்ன சொல்லறேன் கேளுங்க .

நீல் மெட்டல் பனால்கா : இவங்க ரொம்ப சரியா பீக் அவர் ன்னு சொல்லற நேரத்துலதான் குப்பை அல்லுவாங்க அதை எல்லா பக்கமும் கொட்டிட்டே போவாங்க

மாநகர போக்குவரத்து கழகம் : பாதி நெருக்கடி இவங்க தராது தான் சரியான வேகத்துலியே சரியான நிறுத்ததிலையோ சரியான வழிதடத்திலையோ இவர்களின் ஓட்டுனர்கள் பேருந்தை செலுத்துவதே கிடையாது

சென்னை போக்குவரத்து காவல் துறை : இவங்களுக்கு என்னைக்கு தான் புத்தி வருமோ தெரியலை இன்னைக்கு எத்தனையோ தொழில் நுட்ட்பம் வந்தாச்சு இவங்க பண்ணற அக்கபோரு சரிபன்னறேனு சொல்லி ஐயோ கடவுளே பேசாம என்ன யாரவது ஆள் வச்சு அடிச்சு கொன்னுரு.

துணை முதல்வர் மாண்புமிகு.மு.கா. ஸ்டாலின் :- ஐய்யா நீங்க பாலம் எல்லாம் கட்டறீங்க அதுக்கு ஒரு பெரிய கும்பிடு ஆனா அந்த பாலம் எல்லாம் இன்னும் எத்தனை வருசத்துக்கு நெருக்கடிகளை சமாளிக்கும் அதும் இப்ப செனடாப் ரோடு ல கட்டி இருகின்களே அந்த பாலத்துல உங்கள என் பைக் பின்னாடி உக்காரவச்சு ஓட்டிட்டு போகணும் ஆசையா இருக்கு ஆனா துனைமுதல்வரை கொன்ற தற்கொலை கொலையாளினு தினத்தந்தில பேரு வந்து என் குடும்ப மானம் போயிருமேன்னு பயமா இருக்குங்க .

சென்னை போக்குவரத்தின் நரம்பு மண்டலம் ஆட்டோ :- ஆடோகார அன்பர்களே நீங்க சர் பூர் ன்னு போறதால முண்டி வழி விட்டு போகததினால் எதனை நெருக்கடி தெரியுங்கள.கொஞ்சம் அனுசரிங்க அண்ணாச்சி நீங்க இல்லேன்னா நிறையபேருக்கு போக்குவரத்தே இல்லைதாங்க ஆனா அதே மாறி உங்களால நிறைய பேரு பதிக்க படரோமுங்க .

நடைபாதை வியாபாரிகள் :- ஏங்க நீங்க எல்லாம் " நடைபாதைல " கடை போட்டு உக்கதுக்கரிங்க உங்க பொழப்பை பாக்கறதுக்கு நடந்து போறவங்க ரோடுல போறாங்க அவங்க பொழப்ப பாக்கறதுக்கு ரோடுல போகவேண்டியவங்க அவங்க பொழப்பை பாக்கமுடியறது இல்லைங்க காரணம் நடை பாதையில் நடக்கவேண்டியவர்கள் ரோட்டில் நடப்பதால்.

விதிமுறை மீறிய கட்டிடங்கள் :- உங்களுக்கு ரெண்டு அடி அதிகமா கிடைக்குதுன்னு எடுதுக்கரிங்க ரோடு விரிவாக்கம் பண்ணனுமேன்னு நினைச்சு வந்த அப்படி இடமே இல்லையே இங்கனு நினைகரமாரி சுத்தி வளைச்சு போது இடத்தை அபகரிச்ச எப்படிங்க .

விதிமுறை மீறிய பார்கிங் செய்ய அடிகோலும் வியாபார நிறுவனங்கள் :- இத ஏற்று கொள்ளவே முடியாது காவல்துறை ஆணையர் இதற்க்கு என்ன பதில் சொல்லுவார் ?.. இல்லைன்னு சொல்லமுடியாது . நான் ஒரு வராம சில குறிப்பிட்ட கடைகள் நிறுவனங்கள் அருகில் இருந்து காட்சி படம் எடுத்து வைத்து இருக்கிறேன் ஆதாரமாக . ரொம்ப சின்ன உதாரணம் . அசோக் நகர் பார்க் அருகில் நிறுத்த முடியாது ஆனால் அதனை விடுத்தது ஐம்பது அடி தாண்டினால் நோ பார்கிங் பலகையை காணலாம் சரவணா பவன் அருகில் அங்கு வரும் வாகனகள் பின்னல் வருவதும் முன்னால் போவதும் என்றும் பில்லர் அருகில் தரும் நெருக்கடி சாதாரண போக்க்வரத்தில் இருக்கும் என்னை போன்றவர்களுக்கு சவுக்கடி.

நிறுவனங்கள் வாரியங்கள் :- ஐய நீங்க தோண்டுங்க நள்ளிரவில் வாங்க அது என்ன நெருக்கடி நேரத்தில் வந்து வேலை செய்யறிங்க நீங்க மக்களுக்கு சேவை தான செய்யறீங்க ?.. அப்பறம் குழி தோண்டி அதனை மூடியும் மூடாமலும் செல்வது அந்த குழியில் விடாமல் இருக்க வாகனத்தனை வளைத்து நெளிச்சு ஓட்டும்போது ஏற்ப்படும் விபத்து என்னக சொல்லறது இத.

நீங்களும் நானும் பொதுமக்கள் எல்லோரும் :- ஆமாங்க நாம எல்லாருமே இதற்க்கு பொறுப்பாளிகள் தான் .போது போக்குவரத்தை அதிகரிக்க செய்தல் சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்தால் நெருக்கடி குறையும் நெருக்கடி குறைந்தால் நேரம் மிச்சமாகும் நேரம் மிச்சமானால் சொகுசு அதிகரிக்கும் .
 
நமது இந்திய பொருளாதாரம் மாமேதைகள் பொருளாதார சூறாவளிகள் புலிகள் சொல்லுவது போல் எல்லாம் இல்லைங்க உண்மையில் நமது இந்திய பொருளாதாரம் ஆயில் பொருளாதாரம் தான் . ஆயில் ( பெட்ரோல், டிசல் ,மண்ணெண்ணெய் , காஸ் ) பொருள்கள் மீது சுமத்தப்பட்டு இருக்கும் வரிகள் தான் உண்மையில் நமது அரசாங்கத்தை இயங்க வைக்கிறது . நாம் பொது போக்குவரத்தை அதிகபடுதினாலே நமது அந்நிய செலாவணியும் மிச்சமாகும் அரசாங்கத்தின் சுமையும் மிச்சமாகும் .

ஒரு நபர் மட்டும் செல்லும் கார் அடுத்த தெருவுக்கோ அல்லது அருகாமை கடைகளுக்கோ இருசக்கர வாகனத்தை பயன்படுத்தாமல் இருக்கலாம். இதனால் சுற்றுப்புறமும் மேன்மையடையும் நமது காசும் மிச்சமாகும் போக்குவரத்து நெரிசலும் குறையும் அரசாங்கத்தின் அந்நிய செலாவணியும் மிச்சமாகும் .

இதனை நேரம் இதனை படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க . எதாவது பலன் வந்தால் நிச்சியம் சந்தோஷ படுவேன் . நமது அடுத்த சந்ததிக்கு எதாவது விட்டு போகனுங்க எரிச்சலையும் ஆற்றாமையும் கோபத்தையும் அல்ல . நிச்சியம் இந்த போக்கு வரத்து நெரிசல் நம்மால் அவர்கள் மூளைக்குள் உளவியல் ரீதியாக பாதிக்க செய்யும் . யோசித்து பாருங்கள் அன்பர்களே

சனி, 22 மே, 2010

திரும்ப வாருங்கள் கார்த்திக்

இந்த பதிவை எழுதுவதன் நோக்கம் இத்தனைநாள் ஒரு நடிகர் தன்னை தொலைத்திருந்த காரணத்தினால் தான்.

அன்புள்ள நடிகர் கார்த்திக் அவர்களுக்கு நீங்கள் எனது இந்த பதிவை வாசிப்பிர்களா என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை ஆனால் எப்படியேனும் உங்களுக்கு இதே மாறியான கருத்துக்களை நேற்றிலிருந்து அதிகம் உங்களை நோக்கி புறப்பட்டதை நிச்சியம் அறிந்திருப்பிர்கள் என்று நம்புகிறேன்.

என்னை பொறுத்த வரை நாம் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அந்த செயலுக்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்று நம்புகிறவன். அது தொழிலோ அரசியலோ கலைகளோ நட்பு அல்லது உறவுகளோ . நமக்கு ஒன்று அமைந்து விட்டால் அதில் நாம் முழு வீச்சுடன் இறங்கி அதன் நீள அகலங்களை நமக்கு ஏற்றால் போல் அமைதுகொள்கிறோம்.அப்படி பட்ட ஒரு சிறந்த இடம் சினிமாவில் உங்களிடம் மட்டுமே தனித்தன்மையுடன் இருந்தது . இடையில் நீங்கள் இல்லாத போது கூட அப்படி பட்ட ஒரு இடத்தை யாராலும் யோசிக்கவே முடியவில்லை என்பது நிதர்சனம் .

அலைகள் ஓய்வதில்லை படத்தில் இருந்தது நேற்றைய மாஞ்சா வேலு படம் வரை நீங்களே உங்களை ஒரு முறை சாதாரண சினிமா ரசிகானாய் இருந்தது பாருங்களேன் திரையில் தோன்றும் கார்த்திக் எத்தனை வசீகரம் கொண்டவர் என்று . அதுவும் என்னை போன்ற யாரொருவருக்கும் ரசிகானாய் இல்லாதவர்களுக்கு நீங்கள் திரையில் தோன்றிய உடனே சுடுநீர் கொதித்து கொப்பளிப்பது போல உள்ளம் உற்சாகத்தில் கொப்பளிக்குமே அதனை எல்லாம் சொற்களில் அடக்கிவிட முடியுமா என்பது தெரியவில்லை . இன்னமும் நீங்கள் MR. சந்திரமௌலி என்று கூறுவதையும் மைக் போட்டு சொல்லிய உங்கள் காதல் தைரியத்தையும் எத்தனையோ இளைஞர் கூட்டம் அவர்கள் காதலிகளிடம் செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள் . உங்கள் சினிமா பாத்திரத்தில் மிக முக்கியமான திரைப்படமாக கோகுலத்தில் சீதை படத்தை நான் சொல்லுவேன் . ஏன் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆக சிறந்த ஒரு பாத்திர படைப்பாக உங்கள் கோகுலத்தில் சீதை படத்தை தான் நான் சொல்லுவேன் . எங்கே சார் போய் இருந்திருகள் இத்தனை நாட்களாக ?.. அரசியால வேண்டாம் சார் அது உங்களுக்கு வரவில்லை . எனக்கு தெரிந்து நீங்கள் ஒருவர்தான் கோடம்பாக்க வட்டாரத்தில் சக நடிகர் நடிகைகளை அழகான பட்டபெயர் வைத்து அவர்களை சந்தோஷ படுத்துவீர்கள் .  ( உதரணமாக வருஷம் 16 படத்தில் குஷ்பு அவர்களுக்கு  சைனிஸ்பட்லர் என்று அதனை இன்று வரை தொடர்வாதாக கேள்விபடுகிறேன் ) ஆனால் உங்களை அந்த அரசியல் வட்டத்தில் வேறு மாரியான பட்ட பெயர்களை சூட்டி மகிழ்கிறார்கள் என்பது தெரியுமா ?.. சார் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்ளலாம் ஆனால் பூனையை பார்த்து புலி தன் கோடுகளை அழித்து கொள்ளலாமா ?.. வேண்டாம் சார் உங்களுக்கு இந்த அரசியல் .

நேற்று இரவு கமலா திரையரங்கில் உங்கள் புதிய படமான மாஞ்சா வேலுவை பார்த்தேன் சார் உங்கள் அறிமுக காட்சியில் திரைகதை படி சொக்கி போனவள் கதாநாயகி மட்டும் அல்ல சார் எங்களை போன்ற ரசிகர்களும் தான். இன்னமும் எத்தனை அழகாக சண்டை போடுகிரிகள் குறிப்பாக அந்த பிணவறை சண்டை காட்சிகள் . இன்னமும் அதே கவர்ச்சி எத்தனை எத்தனை பெண் ரசிகர்கள் வெட்கத்துடன் நீங்கள் " ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜ " பாடலுக்கு குறும்பு நடனம் ஆடிய போது ரசித்தார்கள் என்பதை அருகே அமர்ந்து பார்த்துகொண்டு இருந்தேன் சார் .

இடைவேளையில் ராவணன் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒளிபரப்பினார்கள் ஐஸ்வர்யா , விக்கரம் என்று வந்த போது எல்லாம் அரங்கில் யாரும் விசில் அடிக்க வில்லை சார் ஒரு ஜீப்பில் நீங்கள் தொப்பியுடன் வருவீர்களே அப்போது அனைவரும் அடித்த விசில் சத்தம் உங்கள் வீடுவரை கெட்டு இருக்கும் என்று நம்புகிறேன் .

உங்களுக்கு இந்த திரையுலகில் யாரும் போட்டி இல்லை சார் உங்கள் இடம் என்றுமே காலியாக உள்ளது அந்த இடத்திருக்கு யாரும் வரவே முடியாது சார் உங்களை தவிர .



உங்கள் வருகை அந்த காலி இடத்தை இட்டு நிரப்பும் என்றும் ஆவலில் .

வியாழன், 20 மே, 2010

உயரும் சாலை மட்டம் தேங்கும் மழை நீர்

ச்ச தலைப்பே இத்தனை அழகா இருக்கே ..!!! எதோ சொல்லவரேன்னு நினைச்சிங்கன மேல படிங்க.

நாம எப்படி எல்லாம் அரசியல்வதிகளளையும் அரசு அதிகரிகளளையும் பாதிக்க படுகிறோம் என்பதை இந்த மழைய உதரணமா வச்சு பார்க்கலாம்.



18/05/2010 இரவில் கொஞ்சமா லைலா ( ஏன் எப்பபாத்தாலும் புயலுக்கு பொண்ணுங்க பேர் வைக்கரங்கன்னு தெரியமாடின்கிறது ஒருவேளை பேரு வைகரவரு பெண்ணல ஏதாவது பாதிக்க பட்டவங்கள இருப்பங்களோ ) தன்னோட வேலையை ஆரம்பிச்சுது . அது அப்படியே 19/05/2010 மாலை வரை கொஞ்சம் விட்டும் அப்பறமா கொஞ்ச நேரம் விடாமையும் கொட்டி தீர்த்திருச்சு. ( ஒருவேளை அந்த லைலா ஏதாவது ஆணால் பாதிக்கப்பட்டு அழுதுசோ ...!!! )



18/05/2010 இரவு என்னோட அறைக்கு என் அன்றைய தினத்தின் வேலையை எல்லாம் முடிச்சுட்டு போய்டேன் . மழை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே.விடிந்து அன்றாட அலுவல்களுக்கு செல்ல ஆயத்தமாகி என் இருசக்கர வாகனத்தை அதன் நிறுத்து பகுதியில் இருந்து எடுக்க வந்தால் ( அப்பவும் மழை பெய்துட்டுதாங்க இருந்தது நம்புங்க நான் கடமைன்னு வந்துட்ட புயலோ மழையோ வெயிலோ பார்ப்பதில்லை ) ஒரு அறை அடி தண்ணீர் என் இருசக்கர வாகனத்தை குளத்தினுள் நிறுத்தியதை போல் காட்சி அளித்தது . கடந்த 2006 ஆம் ஆண்டு பெரு மழையின் தாக்கத்தை பார்த்து எனது வீட்டு உரிமையாளர் கொஞ்சம் மேடாக்கி இருந்தார் . சரி இந்த அளவுக்கு நம்ம கட்டடத்துல தண்ணீர் நிற்கிரதுன எங்கையோ அடைப்பாக இருக்கலாம் என்று நினைத்தேன் . சாலையை தொட்ட போது புரிந்தது என் குடியிருப்பு மட்டும் அல்ல சென்னை முழுவதுமே இப்படி திடீர் குளத்தில் மிதக்கிறது என்பது.காரணம் என்னவாக இருக்கும் இந்த மழைக்கே இப்படி ஆகிவிட்டதே என்று யோசித்து எனது அலுவல் தொடர்பாக புதிய வாடிக்கையாளரை அவரது இல்லத்தில் சந்திக்க போய் இருந்தேன். வடிவேலு பாணியில் சொல்லவேண்டும் என்றால் நான் கொஞ்சம் ஷாக் ஆய்ட்டேன் அவங்க குடியிருப்பை பார்த்து . அதிகம் இல்லை சாலையை விட இரண்டடி ஆழத்தில் வீட்டை கட்டி வைத்திருக்கிறார் அவர் . என்னங்க இது இப்படி வீட்டை கட்டி வசுருக்கிங்கனு கேட்டா என்ன சார் பண்ணறது நான் கட்டலை எங்க அப்ப கட்டி வச்சாரு ஆனா ரோடு போடறவங்க நடைபாதையை மூடி ரோடு போடறாங்க நீங்களே பாருங்க முனைல நடைபாதை தெரியும் அப்படியே அதை பார்த்துட்டு வாங்க காணாம போயிருக்கும் இப்படி இருந்த எப்படி சார் என்ன சார் பண்ணறது நாங்களும் பழகிடோம்னு சாதரணம எடுத்துட்டு பேசினார் . எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு என்னடா இது நாளைக்கு வீட்டு உசரத்துக்கு ரோட போடுவாங்களோன்னு.இப்படி ரோடு மேல ரோடு போட்டுட்டே இருகன்களே ட்ரைனேஜ் சிஸ்டம் எல்லாம் சரியாய் இருக்கும்னு பாத்த அந்த வழியெல்லாம் அடைசுட்டங்க . அபாரம் எங்க இருந்தது மழை தண்ணி வெளிய போகும் ?..ஆனா நம்ம ஆளுங்க யாரு பாதாள சாக்கடை மூடிய திறந்து அதுக்கு போற மாறி ஒரு சின்ன வாய்க்காலை நாலா புறமும் வெட்டி வச்சுறாங்க அதுபோக அந்த மூடிய மூடாம போயிடறாங்க . அந்த வழிய போற இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழும் அவலம்வேறு ( அப்படி ஒரு குழில விளுந்தேங்க நேத்தைக்கு [:(] . சரி இந்த பிரச்சனைக்கு தீர்வு என்னனு எனக்கு தெரிஞ்ச பெறியாலரை கேட்டேன் இவர் பொதுப்பணி துறையில் வேலை செய்கிறார் . ரொம்ப சாதரணம சொல்லிட்டரு ஆனா எனக்கு தான் புரியலை ஏன் அப்படி பண்ணமாடிங்கரங்கனு .



அவரு என்ன சொன்னாரு அப்படின . போட்ட ரோடுல போடாம அந்த ரோட்டை பறிச்சு கீறி கிளறி அதே கல்லு அதுல கிடைக்கற கொஞ்சம் தார் ( இது திரும்ப உபயோகிக்கலாமம் ) எல்லாத்தையும் உபயோக படுத்தின சாலையை பழைய மட்டத்துலையே குறைந்த செலவில் போட முடியும் உதரணாமாக ஒரு கிலோ மீட்டார் சாலையை போடுவதற்கு ஒரு கோடி ருபாய் செலவானால் இப்படி செய்யும் போது அறுவது லட்சத்தில் முடித்து விடலாம் என்று .



அப்பறம் ஏங்க இப்படி போடறாங்க ஏற்க்கனவே பழுது பட்ட சாலையில் அதன் மீதே புதிதாக சாலையை போடுவதன் நோக்கம் என்ன ?..



அங்கங்கே ஒரு ஒரு வாரியத்தின் நிறுவனத்தின் குழி பறிப்பு ஏன் ஒருங்கிணைவு இல்லமால் ?



அப்படி குழிபறிக்கும் சாலைகளை ஒழுங்காக மூடாமல் ஏனோ தானோவென மூடி செல்வது ஏன் ?.



இப்படி சாலை மட்டம் உயரும் போது எல்லாம் மழை வெள்ளமாக மாறுவதை தடுக்க யோசிக்காமல் இருப்பது ஏன் ? வெள்ள நிவாரணம் கொடுக்க அலையும் அரசியல் மேதைகள் இதனை சரி செய்ய சிந்திக்காமல் இருப்பதன் காரணம் என்ன ?..



இதே சாலைகளை பயன்படுத்தும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் சகித்து கொள்வதன் பின்னணி என்ன ?..



நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை உங்களுக்கு



லஞ்சம்



யாரோ ஒரு நூறு நபர்கள் சம்பாரிக்க பொதுமக்களை இப்படி சிக்கலில் சிக்க வைக்கலாமா ?

செவ்வாய், 18 மே, 2010

கருத்து சுதந்திரம் என்பது என்ன வார்த்தை ?..

எழுதி கிழித்த காகிதாமாய் கசக்கி எறிந்த குப்பையை போல் சுயபச்சாதபம் தேடும் மனிதர்கள் இடத்தில் மாட்டிகொண்ட மிருகம் போல் நான் . தடுக்கப்பட்ட பழம் ,தீர்ந்துவிட்ட பாத்திரம், வற்றிப்போன நீரோடை, பயனற்றவன் இன்று . சில நேரம் மதி மயங்கிடக்கிறேன் பழைய நினைவுகளில். பல நேரம் மதி கெட்டு கிடக்கிறேன் பைத்தியகார உலகின் நியமங்களை நினைத்து . இங்கே தீர்மானிக்கும் சக்தியாக காரணியாக காமமும் கடவுளும் இருக்கும் வரை யாரும் உண்மையை கடைசிவரை கண்டு உணரபோவது இல்லை .. உன்னையும் என்னையும் உள்ளுக்குளே கடக்க சொல்லுவது கடவுள் என்பது. புரிந்துகொள்ள பட்டதோ உனது கடவுளை விட எனது கடவுள் பெரியவர் அகவே உன் கடவுளில் இருந்து நீ கடந்து என் கடவுளிடம் வா எனும் சித்தாந்தம் . காமமோ இன்னும் பூசி மொழிகி அருவருப்படைய வைக்கிறது . முலைகளையும் யோனியையும் எத்தனை நாள் பத்திரபடுத்தி கொண்டே இருப்பது ?.. காவல்காரனாக இருப்பதற்கு கடவுளும் காமமும் பொக்கிசங்கள என்ன ?.. பரினமத்தின் அடுத்த கட்டத்தை தேடிசெல்ல அறிவுறுத்த யாருமில்லை பரினமத்தின் உந்துசக்தியை தடுப்பதற்கோ ஆயிரமாயிரம் சிந்தனைகள் சித்தாந்தங்கள் . பெரியார் கற்பு பெண்ணுக்கு அணிவிக்கப்பட்ட  விலங்கு என்று சொன்னார் .ஆனால் அவரின் வழிதோன்றல்கள் வாரிசுகள் என்று கூறிகொள்ளும் பலரோ முன்னறையில் ஒரு வேஷம் பின்னறையில் ஒரு வேஷம் என்று போட்டு கொண்டு தெரிகிறார்கள் . குஷ்புவிற்கு மட்டும் எதிர்ப்பேன எண்ணவேண்டாம் இங்கே அதிகாரமும் ஆற்றலும் மிதமிஞ்சி இருக்கும் அனைத்து மட்டங்களிலும் வேவேறன பிரச்சனைகளில் எதிர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கும் . தலையான பிரச்சனையை விடுத்து ஒன்றுக்கும் உதவாததை ஊதி பெருசாக்கி அதனை காசாக்கும் பொருளாராத மேதைகள் நமை சுற்றி சமுதாயம் எனும் போலி வலை ஒன்றினால் பிணைத்திருக்கிறார்கள் . அந்த வலையை தாண்டி யாரும் வெளியேற முடியாது . காரணம் அவர்களுக்கு எப்போதும் ஒரு ஆட்டு மந்தை தேவைபடுகிறது அவர்களை மட்டும் தற்க்காத்துகொள்ளுவதர்க்கு.நீங்கள் எல்லாம் அந்த ஆட்டு மந்தை கூட்டத்தில் ஒரு உறுப்பினர்கள் நான் அதனை விட்டு வெளியேறி தனித்து சுற்றித்திரியும் பலியாடு.

கருத்து சுதந்திரம் இதன் அர்த்தம் தான் என்ன என்னுடைய கருத்திற்கு மாற்றாக நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது தானோ ?..

நமது சமுதய சிந்தனையில் நிகழும் நிகழ்வுகளை உற்று நோக்குபோது அவ்வாறுதான் எண்ணத்தோன்றுகிறது . ஆனால் உலக ஜனநாய வசிபிடத்துள் இந்திய நாட்டை போல் ஒரு கருத்து சுதந்திரத்தை உடைய சட்டரீதியாக பாதுகாப்பு கொடுக்கும் அரசியலப்பை எந்த ஒரு நிலப்பரப்பிலும் காணமுடியாது என்பது நிதர்சனம் .

ஆனால் இங்கே அதுவும் தமிழகத்தில் நடக்கும் கூத்துகளுக்கு அளவில்லாமல் போய்வருகிறது . பின் நவீனதுவம் , பகுத்தறிவு , மார்க்சியம் , கம்யுனிசம் இந்து அமைப்புகள் என்று விரவி கிடக்கும் அதிகார மையங்கள் ஆளுக்கு ஒரு அளவீடு வைத்திருக்கிறார்கள் .இது கருத்து சுதந்திரம் என்று.

சில நூற்றாண்டுகளுக்கு முன் காமத்தை தனி அதிகாரமாகவே எழுதிய வள்ளுவர் வேறு இன்று லீலா மணிமேகலை வேறு அகநானூறு புற நானூறு எழுதிய கவிகள் வேறு கலவி சுகம் தேடி மாதவியை நாடிய கோவலன் கதை வேறு , என்ன கொடுமை இது நான் வாழ்வது நாகரீகத்தை பண்பாட்டை கலாச்சாரத்தை மறுமதிப்பீடு செய்து தனக்குள்ளே வகுத்துக்கொண்டு அதனை மாற்றிகொண்டே வந்த சமுதாயா அமைபில இருக்கிறேன் ?..

 கருத்து வித்தியாசத்தை அதில் நாம் உணரப்படும் நுட்பத்தை கவனிக்க தவறி தனுக்கு எதிராக தன் நம்பிக்கைக்கு ஊருவிளைவிக்கிறதோ என்று சந்தேகம் கொண்டு . தனக்கோ தான் சார்ந்த மதத்திற்கு அமைபிர்க்கோ இனத்திற்கோ எதிர் கருத்துக்களை பயன்படுத்துபவர்களை சாடுவது கருத்து சுதந்திரம் என்று ஆகிப்போனது இன்று . இதற்க்கு காரணியாக என்னவெல்லாம் இருக்கிறது ?.. அந்த கூறு கெட்ட காரணிகள் மறுபரிசீலனை செய்யபடுவதற்கு ஏதேனும் வாய்புகள் உண்டா ?..

அல்லது யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் கேலிசெய்து அவமான படுத்தி கூறும் வசைசொற்கள் மட்டும் தான் கருத்து சுதந்திரம் என்று காலம் முழுவதும் பதிவு செய்யப்படுமா ?..

புதன், 12 மே, 2010

என்னை பற்றி

முதலில் நான் என்னை பற்றி சொல்லி விடுகிறேன் .

நான் ரொம்ப நல்லவன் ஆணா அதவிட ரொம்ப கெட்டவன் .உங்கள் அனைவரிடமும் இருந்து வேறுபட்டவன் முற்றிலும் மாறுபட்டவன் . உங்களை போல் அல்ல நான் . நான் வேறு நீங்கள் வேறு உங்களை போல் நான் இருக்கவேண்டும் என்றால் நான் எதற்கு அதுதான் நீங்கள் உள்ளிர்களே . நான் முரண்பாடுகளை முதுகில் சுமப்பவன் அல்ல ஆனால் முரண்களை மூட்டை மூட்டையாய் வைத்து கொண்டிருப்பவன் . நீங்கள் கொண்ட நம்பும் கருத்துக்களை சித்தாந்தகளை முறியடிக்கும் ஆற்றல் கொண்டவன் . நான் எதை பட்ற்றிகொண்டுள்ளேன் என்பதை அறிவிக்காதவன் .பதில்களை வைத்துக்கொண்டு கேள்வி கேட்ப்பவன் கேள்விகளை தயாரிப்பதற்காகவே பதில்களை சேகரிப்பவன் . தேடிக்கொண்டு இருப்பதற்க்காக தொலைந்து போனவன் . கெட்டவனை போல் நடிக்கும் நல்லவன் நல்லவனை போல் பாசாங்கு புரியும் கெட்டவன் .எதற்கும் அடிமையாகதவன் அடிமை படுத்தும் பொருள்களை அடக்கியாள்பவன் .ஆதிக்கம் செலுத்தும் அன்பானவன் . பணிவு மறுக்கும் மனிதன் .சமன்பாடுகளை கொண்டு சமத்துவம் வரும் என்பதை நம்பாதவன் சமத்துவம் ஒன்றுதான் சமுதாய முன்னேற்றம் என்பதை வெறுப்பவன் .முகத்தின் முன் பட்டவர்த்தனமாக எதையும் போட்டு உடைக்கும் வெளிப்படையானவன். உங்களை போல் எல்லாம் அந்தரங்கம் என்று செக்ஸ் பற்றியோ சாக்கடை என்று அரசியலையோ மத துவேசம் என்று அறியாமையை பற்றியோ பேச தயங்காதவன் . வாழ்கையை அதன் போக்கில் சென்று எனக்கு விருப்பமான வளைவு நெளிவுகளை உண்டாக்கிகொள்பவன். யாருக்கும் அஞ்சாதவன் அதற்க்காக போக்கிரியும் அல்ல பித்தனும் அல்ல . எச்சரிக்கை தேவை என்னிடம்.

என்னை நம்புகிற என்னில் நம்பிக்கை வைத்துள்ள என் தேவைகளைபற்றி
அக்கறைகொண்டுள்ள என்னை திருத்துவதற்காக என் தவறுகளை நேர்மையோடு எடுத்து சொல்கிறவரே என் உண்மையான நண்பர்.நான் என்ன செய்தாலும் ஏற்கிற,நான் எப்படி இருக்கிறோனோ அப்படியே என்னை ஏற்று என்மீது அன்பை பொழிகிற ஒருவர் எனக்கு நிச்சியம் நண்பராக இருக்க முடியாது
பயமுறுத்துகிறேன் என்று எண்ணவேண்டாம் நான் கொஞ்சம் எதையும் நேர முகத்தில் அடித்தார் போல சொல்லிவிடுவேன் .அது சரியோ தவறோ அதனை பற்றிய அக்கறை இல்லை . எனக்கு தோணுவதை செய்துகொண்டே இருக்கிறேன் என்று இதற்க்கு நிறுத்தம் வருமென தெரியாது எதிர்பார்த்து வாழ்வது இல்லை காரணம் இங்கே எதிர்பார்ப்பது கிடைப்பதில்லை கிடைப்பதை வைத்து தான் வாழ்க்கை அமைத்துகொள்ளபடுகிறது .சரி இனிமேல் என் புராணம் வேண்டாம் போதும் நிறுத்திக்கறேன்