பக்கங்கள்

திங்கள், 27 டிசம்பர், 2010

நிகழ்வும் நினைப்பும் ஈரோடு சங்கமம் 2010நாங்க எல்லாம் சேர்ந்து அசத்திட்டோம் அப்படின்னு நாங்களே சொல்லகூடாது ..... அது தற்பெருமை ஆனால் வந்திருந்த பதிவர்களின் மணம் கோணாமல் சிறப்பாக நடத்தி காட்டிய பெருமை எல்லாம் ஈரோடு கதிர் , ஆருரான் , சந்துரு அண்ணன் , ஜாபர் , கார்த்தி , பாலாசி , ( இவங்க கிட்டதான் நான் பேசினேன் அதனால இவங்க பேரு நல்ல நியாபகம் இருக்கு ) எல்லாருக்கும் போய் சேரும் . ஏதோ நெல்லுக்கு பாஞ்சது இந்த புல்லுக்கும் பாஞ்சு அந்த புண்ணியத்தை நானும் கொஞ்சம் கட்டிட்டு வந்துட்டேன்னு நினைக்கறப்ப நேத்து அடிச்ச சரக்கையும் மீறி செம மப்பு எனக்கு . ( நான் எப்படி சரக்கடிசேன் அப்படின்னு பின்னாடி விலாவாரியா யாரவது எழுதுவாங்க அப்ப தெரிஞ்சுக்கங்க இப்பவேண்டாம் ).

நைட் அடிச்ச மப்பு தெளியாததுக்கு ஒரு சின்ன உதாரணம் நான் இன்னும் ஈரோட்டுக்கு போகவே இல்லை .காரணம் என்னோட தலைகவசம் கதிர் அண்ணன் அலுவலகத்தில் வைத்துவிட்டு வந்தது தான் ( சட்டத்தை ரொம்பவே நல்ல பின்பற்றுகிறேன் அப்படின்னு நினைச்சா உங்க நினைப்புல மன்ன அள்ளி நீங்களே போட்டுக்கங்க . திண்டல் கிட்ட போலிஸ் அய்யா ...!!! ( ஐயோ அய்யான்னு தானுங்க அவங்களை சொல்லோனும் ) ஒருத்தரு உதவி ஆய்வாளர் கோவிந்தசாமி ன்னு அவரு என்னை மடகிட்டறு தீவிரவாதி என்னமாரி அழக இருப்பனு சொல்லி .அப்ப பாத்தா வண்டிய சர்வீசி பண்ணின என் ஆருயிர் ஒன்றில் எதாவது ஒரு உயிரை எடுக்க நினைத்த நண்பன் விஜி தேவையான காகிதங்களை திரும்ப வைக்க மறந்து விட்டான் . நாம யாரு என்ன இருக்கு என்ன இல்லைன்னு எல்லாம் பாக்க மாட்டோம் இல்ல .. சரியான குசும்பனுங்க எக்குத்தப்பா பேசி மாட்டிகிட்டேன் . ( see Mr.Govindasamy எந்த மோட்டார் வாகன சட்டம் சொல்லி இருக்கு தேவையான ஆவணம் இல்லேன்னா வண்டிய சைக்கில் ஸ்டான்ட் ல விட்டு போகணும்னு எல்லாம் ரப்பு பேசி அந்த வழிய போக வர தலைகவசத கட்டாயம் உபயோகபடுத்தவேண்டியாத போச்சு :( சரி இத விடுங்க .... படிச்சு முடிச்சதுக்கு அப்பறம் சொல்லறேன்னு சொல்லறீங்கள ?.. நான் இத படிக்க சொல்லலைங்க இதுக்கு கீழ இருக்கறதா படிக்க சொல்லறேன் . )

எல்லாரையும் சரியான நேரத்துக்கு வரசொல்லி சரியாய் நடத்தினாங்க எல்லாரும் வழக்கம் போல நான் அதிகாலை 9 மணிக்கு எழுந்து விழா அரங்கிற்கு போய் சேர மணி 10.40 நல்லவேளை அந்த சமையத்துல குறைந்த அளவு நண்பர்கள் ( இனியும் அவங்களை பதிவர்கள்னு சொல்ல முடியாதுங்க ) தான் வந்து இருந்தாங்க . அடடே பரவலடா கணபதி கொஞ்சம் சொன்ன நேரத்துக்கு தான் வந்துட்டேன்னு எனக்கு நானே பாராட்டு பத்திரத்தை வாசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தேன் .

போன உடனே மிகப்பெரிய ஆச்சரியம் எங்க சந்துரு அண்ணன பாத்தது உங்க எல்லாருக்கும் தாமோதர் சந்துரு அப்படின நல்லாவே தெரியும் . எப்படியோ காலத்தால் காணமல் போயிருந்த என்னை மீண்டும் அவருடன் சங்கமித்ததில் இந்த சங்கமம் 2010 புண்ணியம் தேடிகொண்டது ....!!!

அவர்கிட்ட பேசிட்டு இருக்கறப்பர எங்க இருந்தது இறக்கை முளைச்சு வந்தாங்கனு தெரியலை ஒருவேளை கழுகா இருக்கலாம் ( ஜூனியர் விகடன் கழுகு இல்லைங்க ) டக்குனு மூக்கு வேர்த்து என் முன்னாடி நின்னாங்க ஆருரானும் , கதிரும் . போய் உங்க பேரு அட்ரஸ் எழுதுங்கன்னு அன்பான உத்தரவ போட்டு என்னை நிலைகுலைய வைத்தார்கள் . பின்ன எட்டாவது படிக்கறப்ப பேனா புடிச்சு எழுதின கை இப்ப போய் எழுத சொன்ன !!! அத எல்லாம் ஒருவழியா கஷ்ட பட்டு இஷ்டதோட எழுதிட்டு திரும்பினா நண்பர்கள் அவர்களின் அழகானக இளம் தளிர்களை வரவேற்ப்பு கொடுத்த இடத்தில் நிற்கவைத்து பழமை பேசி அவர்களின் புத்தகத்தையும் குறிப்பு எடுக்க சிறிய நோட்டு ஒன்றையும் கொடுத்து உள்ளே அனுப்பி விட்டார்கள் . நாம கொஞ்சம் சொகுசு பேர்வழிங்க போனதும் உள்ளார ஒரு மூளையோராம பாத்து ஒரு இடத்தை புடிச்சு ஒக்காந்துட்டேன் . ஆனா அப்பறமா நான் வெட்கப்படும் அளவிற்கு ஆளாளுக்கு ஒரு ஒரு வேலைய இழுத்துபோட்டு செய்யறாங்க .

இது என்னடா வம்பா போயிருச்சு நம்மளையும் வேலைசெய்ய வச்சுருவாங்களோனு அங்கலாப்போட கமுக்கமா போய் கதிர் அண்ணன் பக்கத்துல நின்னேன் . அவரு சாதரணம கணபதி இந்த பிளக்குல கரண்டு வரலை அதுல வருதனுபருங்க மொத வேலைய கொடுத்தாரு . சரிடா இன்னைக்கு நமக்கு நேரம் சரியில்லை போலன்னு நினைச்சு எதோ பன்னுவோமு ஆரம்பிச்சேன் . பாத்தா நான் ஒருத்தன் மட்டும் தான் எரும மாடு மாறி அசையாம நிக்கறேன் .சந்துரு அண்ணன் ஆருரான் கதிர் கார்த்தி ஜாபர் ன்னு எல்லாரும் பறந்தடிச்சு வேலை செய்யறாங்க. அத பாத்ததும் புது பொண்ணு வெட்கப்பட்டு மாமியார் வீட்டுல ஒளிஞ்சு இருக்குமே அந்த வேட்டகம் மொத ராத்திரி முடிஞ்சதும் காணாம போயிருக்கும் அதுமாறி இவிங்க காட்டின செயல் வேகத்துல எனக்கும் தொத்திகிச்சு . நான் வேலை செய்யரமாறி நடிக்க ஆரம்பிக்கறப்ப எல்லாரும் ஒரு ஒருத்தரா வர ஆரம்பிச்சாங்க . எங்க ஆளுங்க விழ நடந்த இடத்துக்கு வரதுக்கு கார் எல்லாம் கொடுத்து அசத்தி இருந்தது எனக்கு அப்பறம்தாங்க தெரிஞ்சுது . ஜாபர் இந்த விசியத்துல அசத்திட்டாருனு எல்லாரும் சொன்னப்ப பயங்கரமான சந்தோசம். பாலாசி துடுக்கு துடுகுனு தலேர் மொகந்தி பட்டுமாரி துடிப்ப வேலை செய்துட்டு இருகாரு சந்துரு அண்ணன் அத விட கலக்கறாரு கதிரன்னையும் ஆருரான் அண்ணனையும் சொல்லவேண்டியதே இல்லை செயல் புயல்கள் , கார்த்தி இவர பத்தி ஒரு தனி பத்தில சொல்லணும் .

இந்த கார்த்தி ஒரு ஒன்றை வருசமா சொல்லிட்டே இருக்காரு டகிலா ஒரு பாட்டில் இருக்கு ஒரு பாட்டில் இருக்குனு ஆனா கண்ணுல இன்னும் காமிக்கவே இல்லை . :( யாருகிட்டயாவது காமிச்ச எனக்கும் கொஞ்சம் சொல்லிவிடுங்க ஜோதில ஐக்கியம் ஆயிக்கறேன் . சாப்பாடு எல்லாம் போட்டுட்டு இருக்காங்க பாத்தா சூப்பரான பாயாசத்தை சுவைக்க கப்பு இல்லை உடனே ஓடு வாங்கியானு சொன்ன அப்பவும் மனுஷன் நாயா பேயா பறந்து அடிக்கறாரு . இப்படி எல்லாரும் ஆளாளுக்கு சிறப்ப அவங்க அவங்க பங்களிப்பை வழங்கி எனக்கும் நல்ல பேர கடைசி நேரத்துல வாங்கி தந்தாங்க .

நான் சென்னைல இருந்தது புதன் கிழமை ஈரோடுக்கு போனேன் . வெள்ளிகிழமை கதிர் அண்ணன பாத்தேன் அவளவுதான் அடுத்து ஞாயத்து கிழமை அங்க போனேன் . எல்லாரும் இதனை அர்ப்பணிப்போட ஈடுபட்டத பாத்ததும் ஒரு பெரிய சபதம் எனக்கு நானே எடுத்து கிட்டேன் அது ரகசியம் அடுத்த சங்கமம் அப்ப சொல்லறேன் .

சரி இன்னொரு விசியம் . என்ன என்னமோ எல்லாரும் பேசினாங்க சொன்னங்க சிறப்பு விருந்தினரவந்தவங்க எல்லாம் .எனக்கு ரொம்ப புடிச்சது கருவாயன்  போட்டோ எடுக்கறத சொல்லிகொடுத்து மட்டும் தான் மத்த படி எனக்கு ஒன்னும் புடிகலைங்க . ஆனா வந்திருந்தவங்க எல்லாம் ரொம்பவே ஆழ்ந்து கவனிச்சு தெரிஞ்சுகிட்டாங்க எல்லாரும் பேசினத. கடைசியா சேர்தளம் அமைப்பினர் ஏற்ப்பாடு செய்திருந்த கலந்துரையாடல் கலகலப்பா எல்லோரோட எண்ணங்களையும் வெளிப்படுத்தும் பின்னுட்டமாய் அமைந்திருந்தது .

வந்திருந்த எல்லோரும் விடை பெறுகிறார்கள் மணம் என்னமோ வெறுமையை எடுத்து பூசிகொண்டது .

அடுத்து விழ அரங்கை அரங்கத்தாரிடம் ஒப்படைக்க திரும்பவும் ஆளாளுக்கு வேலையை இழுத்து போட்டு கொண்டார்கள் . இப்பவும் நான் சும்மா இருந்த அர்த்தம் இல்லை என்று எனக்கும் ஈடுபாடு இருக்கிறது என்பதனை காண்பிக்க ஒரு தண்ணீர் கேனை எடுத்து வண்டியில் வைத்து இவர்களின் வேளையில் என்னையும் ஈடுபடுத்தி கொண்டேன் .

எல்லாம் ஒரு வழியா இனிதே முடிஞ்சு மன வருத்தத்தோட இருந்தப்ப கதிரண்ணன் வந்து ஒரே ஒரு லார்ஜ் அப்படின்னு சரக்க ஊத்தராறு .எனக்கு கொஞ்சம் சங்கடம் என்னதான் நாம கிரீன் பார்க் எஸ்கேப் பார்ல குடி இருந்தாலும் எங்க சந்துரு அண்ணன் முன்னாடி எப்படி குடிகராதுன்னு . அப்பவும் தலைல துண்ட போத்தி குடிச்சு வந்திருந்த நண்பர்கள் அனைவரும் சென்ற மன வருத்தத்தை காணாம போகவசுட்டேன் . அப்பறமும் விட்டங்கள எங்க பாசகாரங்க கதிர் அண்ணன் ஆபீஸுக்கு கூட்டிட்டு போய் அங்கயும் . எல்லாம் முடிஞ்சு அவரர் கூடுகளுக்கு திரும்புகிறோம் எனக்கு விழியோரத்தில் வழிகிறது கண்ணீர் .............

2011 டிசம்பர் எங்க இருந்தாலும் சீக்கரமே எங்க ஈரோட்டுக்கு வந்து விடமாட்டாயா ..... இதே போல் ஒரு சந்திப்பு பகிர்வு எனக்கு உடனே வேண்டும்

9 கருத்துகள்:

கார்த்திக் சொன்னது…

இப்பவும் சொல்லுறேன்
நாளைக்கு வாங்க டக்கீல ரெடி :-))

G.Ganapathi சொன்னது…

போதும் கார்த்தி இந்த நாளைக்கு தினமும் வருது ஆனா உங்களுக்கு மட்டும் வரதே இல்லை

ஈரோடு கதிர் சொன்னது…

தம்பி, நிஜமாவே மனச திருட்டிட்டீங்க!!!

கார்த்திக் நானும், அட்லீஸ்ட் அந்த டீ கடை வரைக்கும்! :)

கார்த்திக் சொன்னது…

// போதும் கார்த்தி //

அட அதுங்காட்டி போதுமா :-))

சரி விடுங்க

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
க.பாலாசி சொன்னது…

அண்ணா.. எவ்ளோ விளாவரியா எழுதியிருக்கீங்க.. பாய்ண்ட் பாயிண்ட்டா... ஒரு புது உறவாக உங்களையும் பெற்றதில் மகிழ்ச்சி..

G.Ganapathi சொன்னது…

ஈரோடு கதிர்:- அண்ணா நீங்கதான் உண்மையான திருடர் !!! எனக்கு பொண்ணுங்க இதயத்தை திருடித்தான் பழக்கம் ஆண்கள் தொலைக்கவே மாட்டங்க ஆணா நீங்க எல்லா ஆண்களின் இதயங்களையும்திருடிவிட்டிர்களே

அது டீ கடை இல்லைங்க பாம்பு செட் ரூம்

கார்த்திக் :- குடுத்தாதான விடறதுக்கு :( இன்னும் குடுக்கவே இல்லையே

க.பாலாசி :- நட்பில் பழசு என்றும் புது என்றும் எதுவும் இல்லை பாலாஜி நட்பு எப்போதும் நட்புதான் .

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

ராசா,,,,,, கலக்கிட்டய்யா......

பழமைபேசி சொன்னது…

இரசிச்சு எழுதி இருக்கீங்க...

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.