பக்கங்கள்

வெள்ளி, 24 டிசம்பர், 2010

ஒளிரும் விளக்குகள் இருளும் வாழ்கை
அவசியமான நாம் அனைவரும் உணரவேண்டிய கட்டாயம் செயல்படுத்தவேண்டிய ஒன்று ஆனால் யாரும் கவனிப்பதும் இல்லை கண்டுகொள்வதும் இல்லை . இன்றைய நவ நாகரீக உலகில் வேகம் மிக பெரிய பங்கு பெறுகிறது ஒருவரை ஒருவர் முந்தி செல்வதில் அது வாழ்கையாக இருந்தாலும் வாகனமாக இருந்தாலும் சரி நமக்கு முன்னால் போகிறவரை எப்படியேனும் முந்தி செல்ல முயலுகிறோம் .

வாழ்கையில் வேகம் நமது சந்ததிகளையும் நமது நீட்சியையும் நிலைத்திருக்க பயன்படுகிறது ஆனால் , சாலையில் ?...

போக்குவரத்தில் நமது கவனம் எல்லம் எதிர் வரும் வாகனங்களை பற்றி எப்போதுமே இருப்பதில்லை . அதுவும் இரவில் நமக்கு அந்த அக்கறை ஒரு துளியேனும் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளவே பயமாக இருக்கிறது .சாமான்ய மக்களை இருள் குற்றங்களை எல்லாம் மறைப்பதற்கு மட்டும் அல்ல செயல்படுத்தவும் தூண்டுகிறதோ என்ற கவலை எனக்கு . இரவில் தானே பாத்துகொள்ளலாம் எனும் அலட்சியம் தான் உச்ச பட்ச விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது . அது நகரமோ கிராமமோ நெடுச்சலையோ எந்த இடத்தில் பார்த்தாலும் எந்த வாகனத்தை பார்த்தாலும் மிக பிரகாசமாக முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு செல்கிறார்கள் எதிர் வரும் வாகனகளுக்கு இதனால் இடையுறு ஏற்படும் எனும் அக்கறையோ கவலையோ இன்றி. இத்தனைக்கும் இவர்களும் இனொரு புறத்தில் எதிர்வரும் வாகனம் என்பதை புரிந்து கொள்ள மறுகிறார்கள் . 
 


முன்பெல்லாம் இது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது . வாகன ஓட்டிகளும் ஹய் பீம், லோ பீம் இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து ஓட்டுவார்கள் அதுபோக முகப்பு விளக்கில் கருப்புவண்ண பட்டையையோ அல்லது வட்ட பட்டையையோ வாகனத்திற்கு தகுந்தாற்போல் ஒட்டி இருப்பார்கள் . எதிர் வரும் வாகங்களுக்கு அந்த பிரகாசமான ஒளியால் கண்கள் கூசுவது தடுக்கப்பட்டு சாலையும் தெளிவாக தெரியும் . ஹய் பீம் ஒளியை ஒளிரவிட்டு வரும் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் வாகனத்திருக்கு தான் வருவதை தெரிவிக்கவும் அவர்களை எச்சரிக்கை செய்யவும் எதிர் புற சாலை தெளிவாக தெரியும் வண்ணம் லோ பீம் விளக்குகளை பயன்படுத்துவதே இல்லை .

இந்த விசியத்தில் கனரக வாகன ஓட்டிகள் நிச்சியம் பாரட்டபடவேண்டியவர்கள் அவர்கள் இதனை சர்வ நிச்சியமாக கடைபிடிகிறார்கள் .அதிகமாக நெடுஞ்சாலையில் பயணிப்பவன் அதுவும் இரு சக்கர வாகனத்தில் என்பதால் அறுதியிட்டு கூற முடிகிறது .... பெரும்பாலான ஓட்டுனர்கள் எதிர் புறம் வரும் வாகனம் இருசக்கரமாக இருந்தாலும் கண்களை கூசுகிறது உங்கள் முகப்பு விளக்கை குறைந்த ஒளிக்கு மாற்றுங்கள் என்பது போல் நமது வாகனத்தின் முகப்பு விளக்கை அனைத்து போட்டால் அவர்கள் குறைந்த ஒளிக்கு உடனே மாறி விடுகிறார்கள் . சில வாகன ஓட்டிகள் அவர்களை நாம் கடக்கும் வரைக்கும் சில நொடிகளுக்கு முகப்பு விளக்கை அனைத்து விடுகிறார்கள் . ஆனால் இந்த நகர் புறத்தில் இருக்கும் பேருந்து , மற்றும் மகிழ்வுந்து ஓட்டிகள் இதற்க்கு எல்லாம் கண் சாய்ப்பதே சிமிட்டுவதே கிடையாது . நகர் முழுக்க பிரகாசமான தெரு விளக்குகள் எறிந்தாலும் சாலை மிக தெளிவாக தெரிந்தாலும் அவர்களின் வாகனத்தின் முகப்பு விளக்கு மட்டும் ஏன் இத்தனை பிரகசாமாக எரிகிறது ?.. இப்போது மழை பெய்து சாலைகளும் தெருக்களும் குண்டும் குழியுமாக இருக்கிறது . எதிர் புறம் பிரகாசமாக வரும் வாகங்களின் கண்ணை கூசும் ஒளிகளால் அந்த குண்டும் குழியுமான சாலை கண்ணனுக்கு தெளிவாக புலப்படுவதே இல்லை . கவனிக்காமல் பழக்கம் இல்ல சாலைகளில் சென்றால் நிச்சியம் விழுந்து எழவேண்டியது தான் .


முகப்பு விளக்கின் கண்ணாடியில் நிச்சியம் கருப்பு பட்டையையோ அல்லது கருப்பு வட்ட பட்டையையோ ஒட்டி இருப்பதை காவல் துறையினர் இதனை எல்லாம் முறைபடுத்த்வதில்லை அவர்களுக்கு இதற்கு எல்லாம் நேரமும் இருப்பது இல்லை அவர்களுக்கு அப்பழுக்கற்ற அரசு ஊழியர் , வீர தீர சாகசம் போன்ற தமக்கு தாமே பட்டம் வழங்கி கொள்வதற்கே நேரம் போதவில்லையாம் . அவர்களை கடிந்து நாம் என்ன செய்ய முடியும் . நாமது இதனை எல்லாம் சரி செய்யலாமே நமக்கு நாமே கொஞ்சமேனும் இதனை பின்பற்றினால் எதிர்வரும் வாகன ஒட்டிகளும் உணருவார்கள் . நமக்கு சாலை பிரகாசமாக வேண்டி எதிர்வரும் வரும் வாகன ஓட்டிகளுக்கு வாழ்க்கையை இருளில் தள்ளாமல் இருக்கலாமே நாமாவது .
அப்பறம் நீங்க எல்லாம் எங்க ஊருல நடக்கற ஈரோடு பதிவர்கள் வாசகர்கள் சங்கமம்-2010 நிகழ்விற்கு வருகிறிகள் தானே ... உங்களை எல்லாம் எண்ணத்தாலும் எழுத்தாலும் சந்தித்திருந்தாலும் உருவமாக உணர்வாக சந்திக்க போகும் நிகழ்வை நானும் ஆர்வமுடனும் ஆசைகளுடனும் எதிர் நோக்குகிறேன் .
இடம்:
டைஸ் & கெமிக்கல் மஹால்
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

கருத்துகள் இல்லை:

இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.