பக்கங்கள்

புதன், 12 மே, 2010

என்னை பற்றி

முதலில் நான் என்னை பற்றி சொல்லி விடுகிறேன் .

நான் ரொம்ப நல்லவன் ஆணா அதவிட ரொம்ப கெட்டவன் .உங்கள் அனைவரிடமும் இருந்து வேறுபட்டவன் முற்றிலும் மாறுபட்டவன் . உங்களை போல் அல்ல நான் . நான் வேறு நீங்கள் வேறு உங்களை போல் நான் இருக்கவேண்டும் என்றால் நான் எதற்கு அதுதான் நீங்கள் உள்ளிர்களே . நான் முரண்பாடுகளை முதுகில் சுமப்பவன் அல்ல ஆனால் முரண்களை மூட்டை மூட்டையாய் வைத்து கொண்டிருப்பவன் . நீங்கள் கொண்ட நம்பும் கருத்துக்களை சித்தாந்தகளை முறியடிக்கும் ஆற்றல் கொண்டவன் . நான் எதை பட்ற்றிகொண்டுள்ளேன் என்பதை அறிவிக்காதவன் .பதில்களை வைத்துக்கொண்டு கேள்வி கேட்ப்பவன் கேள்விகளை தயாரிப்பதற்காகவே பதில்களை சேகரிப்பவன் . தேடிக்கொண்டு இருப்பதற்க்காக தொலைந்து போனவன் . கெட்டவனை போல் நடிக்கும் நல்லவன் நல்லவனை போல் பாசாங்கு புரியும் கெட்டவன் .எதற்கும் அடிமையாகதவன் அடிமை படுத்தும் பொருள்களை அடக்கியாள்பவன் .ஆதிக்கம் செலுத்தும் அன்பானவன் . பணிவு மறுக்கும் மனிதன் .சமன்பாடுகளை கொண்டு சமத்துவம் வரும் என்பதை நம்பாதவன் சமத்துவம் ஒன்றுதான் சமுதாய முன்னேற்றம் என்பதை வெறுப்பவன் .முகத்தின் முன் பட்டவர்த்தனமாக எதையும் போட்டு உடைக்கும் வெளிப்படையானவன். உங்களை போல் எல்லாம் அந்தரங்கம் என்று செக்ஸ் பற்றியோ சாக்கடை என்று அரசியலையோ மத துவேசம் என்று அறியாமையை பற்றியோ பேச தயங்காதவன் . வாழ்கையை அதன் போக்கில் சென்று எனக்கு விருப்பமான வளைவு நெளிவுகளை உண்டாக்கிகொள்பவன். யாருக்கும் அஞ்சாதவன் அதற்க்காக போக்கிரியும் அல்ல பித்தனும் அல்ல . எச்சரிக்கை தேவை என்னிடம்.

என்னை நம்புகிற என்னில் நம்பிக்கை வைத்துள்ள என் தேவைகளைபற்றி
அக்கறைகொண்டுள்ள என்னை திருத்துவதற்காக என் தவறுகளை நேர்மையோடு எடுத்து சொல்கிறவரே என் உண்மையான நண்பர்.நான் என்ன செய்தாலும் ஏற்கிற,நான் எப்படி இருக்கிறோனோ அப்படியே என்னை ஏற்று என்மீது அன்பை பொழிகிற ஒருவர் எனக்கு நிச்சியம் நண்பராக இருக்க முடியாது
பயமுறுத்துகிறேன் என்று எண்ணவேண்டாம் நான் கொஞ்சம் எதையும் நேர முகத்தில் அடித்தார் போல சொல்லிவிடுவேன் .அது சரியோ தவறோ அதனை பற்றிய அக்கறை இல்லை . எனக்கு தோணுவதை செய்துகொண்டே இருக்கிறேன் என்று இதற்க்கு நிறுத்தம் வருமென தெரியாது எதிர்பார்த்து வாழ்வது இல்லை காரணம் இங்கே எதிர்பார்ப்பது கிடைப்பதில்லை கிடைப்பதை வைத்து தான் வாழ்க்கை அமைத்துகொள்ளபடுகிறது .சரி இனிமேல் என் புராணம் வேண்டாம் போதும் நிறுத்திக்கறேன்

4 கருத்துகள்:

tt சொன்னது…

கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது :-)

insight சொன்னது…

பயம் ஒரு தோற்ற பிழை எத்தன மீது எல்லாம் நாம் பயமுறுகிரோமே அதன் மீதெல்லாம் மிகுந்த அன்பு செலுத்த ஆரம்பிக்கிறோம் . ஆகவே உங்கள் பயத்தை நான் ரசிக்கிறேன்

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

தோழர் ...
எல்லாம் சரி தான் ... சந்தோசமும் தான் ...
புகை பிடிப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ...
உடல் நலனிற்கு அது எந்த அளவிற்கு உதவுகிறது என்று நினைக்கிறீர்கள் ?
மன சுமைகளிலிருந்து விடுபடவோ அல்லது மகிழ்ச்சியை அதிகரிக்கவோ எந்த அளவுக்கு உதவுகிறது ?
aldous huxley போன்று உங்களிடம் எதிர்பார்க்கிறேன் ...
நன்றி தோழர் !

தனி காட்டு ராஜா சொன்னது…

//நான் ரொம்ப நல்லவன் ஆணா அதவிட ரொம்ப கெட்டவன்//

நாங்க மட்டும் என்னவாம் ...ரொம்ப கேவலமானவங்க அப்பு ...

//நான் முரண்பாடுகளை முதுகில் சுமப்பவன் அல்ல ஆனால் முரண்களை மூட்டை மூட்டையாய் வைத்து கொண்டிருப்பவன் .//

பூச்சாண்டி அண்ணா நில்லுங்க ...அந்த மூட்டைல என்ன இருக்குதுன்னு சொல்லிட்டு போங்க ...யே..யே..நில்லுங்க ...முட்டைய விட்டுட்டு ஓடாதீங்க .

//தேடிக்கொண்டு இருப்பதற்க்காக தொலைந்து போனவன் //

10 ரூபாய் யாரவது தொலைச்சுட்டா போதுமே ....உடனே இப்படி ஒரு டயலாக் ...