எழுதி கிழித்த காகிதாமாய் கசக்கி எறிந்த குப்பையை போல் சுயபச்சாதபம் தேடும் மனிதர்கள் இடத்தில் மாட்டிகொண்ட மிருகம் போல் நான் . தடுக்கப்பட்ட பழம் ,தீர்ந்துவிட்ட பாத்திரம், வற்றிப்போன நீரோடை, பயனற்றவன் இன்று . சில நேரம் மதி மயங்கிடக்கிறேன் பழைய நினைவுகளில். பல நேரம் மதி கெட்டு கிடக்கிறேன் பைத்தியகார உலகின் நியமங்களை நினைத்து . இங்கே தீர்மானிக்கும் சக்தியாக காரணியாக காமமும் கடவுளும் இருக்கும் வரை யாரும் உண்மையை கடைசிவரை கண்டு உணரபோவது இல்லை .. உன்னையும் என்னையும் உள்ளுக்குளே கடக்க சொல்லுவது கடவுள் என்பது. புரிந்துகொள்ள பட்டதோ உனது கடவுளை விட எனது கடவுள் பெரியவர் அகவே உன் கடவுளில் இருந்து நீ கடந்து என் கடவுளிடம் வா எனும் சித்தாந்தம் . காமமோ இன்னும் பூசி மொழிகி அருவருப்படைய வைக்கிறது . முலைகளையும் யோனியையும் எத்தனை நாள் பத்திரபடுத்தி கொண்டே இருப்பது ?.. காவல்காரனாக இருப்பதற்கு கடவுளும் காமமும் பொக்கிசங்கள என்ன ?.. பரினமத்தின் அடுத்த கட்டத்தை தேடிசெல்ல அறிவுறுத்த யாருமில்லை பரினமத்தின் உந்துசக்தியை தடுப்பதற்கோ ஆயிரமாயிரம் சிந்தனைகள் சித்தாந்தங்கள் . பெரியார் கற்பு பெண்ணுக்கு அணிவிக்கப்பட்ட விலங்கு என்று சொன்னார் .ஆனால் அவரின் வழிதோன்றல்கள் வாரிசுகள் என்று கூறிகொள்ளும் பலரோ முன்னறையில் ஒரு வேஷம் பின்னறையில் ஒரு வேஷம் என்று போட்டு கொண்டு தெரிகிறார்கள் . குஷ்புவிற்கு மட்டும் எதிர்ப்பேன எண்ணவேண்டாம் இங்கே அதிகாரமும் ஆற்றலும் மிதமிஞ்சி இருக்கும் அனைத்து மட்டங்களிலும் வேவேறன பிரச்சனைகளில் எதிர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கும் . தலையான பிரச்சனையை விடுத்து ஒன்றுக்கும் உதவாததை ஊதி பெருசாக்கி அதனை காசாக்கும் பொருளாராத மேதைகள் நமை சுற்றி சமுதாயம் எனும் போலி வலை ஒன்றினால் பிணைத்திருக்கிறார்கள் . அந்த வலையை தாண்டி யாரும் வெளியேற முடியாது . காரணம் அவர்களுக்கு எப்போதும் ஒரு ஆட்டு மந்தை தேவைபடுகிறது அவர்களை மட்டும் தற்க்காத்துகொள்ளுவதர்க்கு.நீங்கள் எல்லாம் அந்த ஆட்டு மந்தை கூட்டத்தில் ஒரு உறுப்பினர்கள் நான் அதனை விட்டு வெளியேறி தனித்து சுற்றித்திரியும் பலியாடு.
கருத்து சுதந்திரம் இதன் அர்த்தம் தான் என்ன என்னுடைய கருத்திற்கு மாற்றாக நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது தானோ ?..
நமது சமுதய சிந்தனையில் நிகழும் நிகழ்வுகளை உற்று நோக்குபோது அவ்வாறுதான் எண்ணத்தோன்றுகிறது . ஆனால் உலக ஜனநாய வசிபிடத்துள் இந்திய நாட்டை போல் ஒரு கருத்து சுதந்திரத்தை உடைய சட்டரீதியாக பாதுகாப்பு கொடுக்கும் அரசியலப்பை எந்த ஒரு நிலப்பரப்பிலும் காணமுடியாது என்பது நிதர்சனம் .
ஆனால் இங்கே அதுவும் தமிழகத்தில் நடக்கும் கூத்துகளுக்கு அளவில்லாமல் போய்வருகிறது . பின் நவீனதுவம் , பகுத்தறிவு , மார்க்சியம் , கம்யுனிசம் இந்து அமைப்புகள் என்று விரவி கிடக்கும் அதிகார மையங்கள் ஆளுக்கு ஒரு அளவீடு வைத்திருக்கிறார்கள் .இது கருத்து சுதந்திரம் என்று.
சில நூற்றாண்டுகளுக்கு முன் காமத்தை தனி அதிகாரமாகவே எழுதிய வள்ளுவர் வேறு இன்று லீலா மணிமேகலை வேறு அகநானூறு புற நானூறு எழுதிய கவிகள் வேறு கலவி சுகம் தேடி மாதவியை நாடிய கோவலன் கதை வேறு , என்ன கொடுமை இது நான் வாழ்வது நாகரீகத்தை பண்பாட்டை கலாச்சாரத்தை மறுமதிப்பீடு செய்து தனக்குள்ளே வகுத்துக்கொண்டு அதனை மாற்றிகொண்டே வந்த சமுதாயா அமைபில இருக்கிறேன் ?..
கருத்து வித்தியாசத்தை அதில் நாம் உணரப்படும் நுட்பத்தை கவனிக்க தவறி தனுக்கு எதிராக தன் நம்பிக்கைக்கு ஊருவிளைவிக்கிறதோ என்று சந்தேகம் கொண்டு . தனக்கோ தான் சார்ந்த மதத்திற்கு அமைபிர்க்கோ இனத்திற்கோ எதிர் கருத்துக்களை பயன்படுத்துபவர்களை சாடுவது கருத்து சுதந்திரம் என்று ஆகிப்போனது இன்று . இதற்க்கு காரணியாக என்னவெல்லாம் இருக்கிறது ?.. அந்த கூறு கெட்ட காரணிகள் மறுபரிசீலனை செய்யபடுவதற்கு ஏதேனும் வாய்புகள் உண்டா ?..
அல்லது யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் கேலிசெய்து அவமான படுத்தி கூறும் வசைசொற்கள் மட்டும் தான் கருத்து சுதந்திரம் என்று காலம் முழுவதும் பதிவு செய்யப்படுமா ?..
4 கருத்துகள்:
கொஞ்சம் புரியும்படியா எழுதுங்கண்ணே!
//கருத்து சுதந்திரம் இதன் அர்த்தம் தான் என்ன என்னுடைய கருத்திற்கு மாற்றாக நீ கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது தானோ ?.//
ஏற்றுக் கொள்ளுதல்/ ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைத் தவிர்த்து பிறர் கருத்தை மதித்தல் அல்லது கருத்து சொல்ல வாய்ப்புக் கொடுப்பது தான் கருத்து சுதந்திரம் அல்லது கருத்துரிமை எனப்படும்.
//அல்லது யாரும் யாரையும் தனிப்பட்ட முறையில் கேலிசெய்து அவமான படுத்தி கூறும் வசைசொற்கள் மட்டும் தான் கருத்து சுதந்திரம் //
இதன் பெயர் உணர்ச்சி வசப்படுதல்.
நல்ல இடுகை
நன்றிங்க சேட்டைக்காரன் , இனி வரும் பதிவுகளில் கவனம் கொள்கிறேன் . தவறு நேரும் போது வந்து சுட்டிகாட்டுங்கள் திருத்திகொள்கிறேன்
நன்றிங்க கோவி .கண்ணன் ,
இந்த பதிவின் ஆதங்கமே நீங்கள் சொன்ன கருது சுதந்திரம் / கருத்துரிமை என்பதை யாரும் உணரமால் உணர்ச்சிவய படுவதால் தான் .
அது கலைஞர்லிருந்து, திருமா, அமர்க்ஸ் வரை குப்பனில் இருந்து சுப்பன் வரை உணராமல் வேற்று உணர்சிக்களுக்கு ஆட்பட்டு தங்கள் நிலைத்தன்மையை மறுபரிசிலனை செய்யாமல் போவது பற்றியது தாங்க
கருத்துரையிடுக