தலைப்பு வணக்கம் சொல்லி ஆரம்பிக்க சொன்னாலும் மனசு ஏற்றுக்கொள்ளவில்லை .காரணம் இந்த மதத்தை வைத்து எத்தனை எத்தனை பிரச்சனைகள எத்தனை எத்தனை கொலைகள் எத்தனை எத்தனை கற்பழிப்புகள் எத்தனை எத்தனை ஆக்கரமிப்புகள் . கருமம் இந்த மதம் அப்படிங்கறதுல என்னதான் இருக்கு ?.. என்னத்துக்காக இப்படி எல்லாம் நடக்குதுன்னு . இதனால என்ன நல்லது நடக்க போகுது ?...இல்ல நடந்துச்சு ?..மதம் அவசியமா ?..இதனால் மனித குலம் சாதித்தது என்ன ?.. இப்படி பட்ட ஆயிரம் கேள்விகள் எழுகிறது .ஆனால் அதற்கும் முன்னால் மதம் என்பது பற்றி தெரிந்து கொள்ள விளைந்ததின் விளைவுதான் இந்த பதிவு .
மதம் இந்த சொல்லுக்கு என்னவோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது . கடவுளை நம்புகிறவனும் நம்பாதவனும் இதனை பிடித்து தொங்கிக்கொண்டே இருக்கிறன் . அந்த ஈர்ப்பு இல்லை என்றால் அவர்கள் இப்படி தொங்கி கொண்டு இருந்திருக்க தேவை இல்லை .
நான் கடவுள் இருக்கிறாரா இல்லையா அல்லது இருந்தால் நன்றாக இருக்கும் இல்லேன்னா கொஞ்சம் மோசமா இருக்கும் என்ற ஜல்லி அடிப்புகளுக்குள் இப்போதைக்கு போகவில்லை .என் நோக்கம் மிக சிறிய தேடல் மதம் இதன் தேவை என்ன ?.. என் உருவாக்க பட்டது ?..
அதன் அடிப்படை என்னவாக இருந்திருக்கும் இப்படி பட்ட கட்டமைவின் மூலம் என்ன ?.. மதம் தான் மனிதனை ஒழுங்கு படுத்தியாத என்பது மட்டும் தான் இப்போதைக்கு . பின் வரும் பதிவுகளின் கொஞ்சம் ஆழமாக அகலமாக செல்ல விரும்புகிறேன் .இப்போதைக்கு மதம் என்றால் என்ன என்பது பற்றி மட்டுமே .
ஆதி காலத்தில் மனிதன் கூட்டம் கூட்டமாய் வாழ்ந்து வந்தான் என்பது நாமனைவரும் அறிந்ததே . அப்படி கூட்டங்கள் கொஞ்சம் ஒன்று சேர்ந்து சமூகமாய் மாறியது அந்த சமுகத்திற்கு சட்ட திட்டங்கள் கட்டுப்பாடுகள் தேவை எழுந்த போது ஒட்டு மொத்தமாய் அவர்களை ஒன்று திரட்டி வழி படுத்த மனிதன் உருவாக்கிய அம்சம் கடவுள் .காரணம் எதனை வேண்டுமானலும் அனுகிவிடலாம் ஆராயலாம் கடவுளை எப்படி அணுகுவது அல்லது ஆராய்வது ?... தங்கம் தகரம் என்பது பொருளாக இருப்பதினால் ஆராயலாம் அறியலாம் கடவுள் என்பது வேற்று சித்தாந்தம் தானே . அந்த சித்தாந்தத்தின் மீது பயம் எனும் சாயம் பூசியது தான் மதம் . மனித சமூகத்தை நல்வழி படுத்த உருவான மதம் அவனை அழிவின் பாதைக்கு கொண்டு செல்வது கொடுமை தான் .
சரி மதம் என்பது பயத்தின் மீது பூசிய சாயம் என்றால் அதன் மீது சாயம் பூசவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது ?..
அந்த சாயத்தின் தேவை ஏற்ப்பட காரணம் மனித மனம் . இந்த மனித மானது தன்னுடைய இயலாமையை அகற்றி கொள்ள எதாவது ஒன்றை பற்றிக்கொள்ள வேடியாதாய் இருந்தது. அந்த மனதிற்கு அதற்க்கு காரண காரியங்களை ஆராயமுடியாத ஒரு பொருள் ஒன்றின் தேவை ஏற்பட்டதன் விளைவு கடவுள் . மனம் கொஞ்சம் ஆறுதல் அடைய இயற்கையை அதன் விநோதங்களை கண்டு ஆச்சர்யமுற்றவன் அதனை செய்பவர் கடவுள் என்று நம்ப தொடங்கினான்.அவனது தேவைகளுக்கு கடவுள் என்பதை நம்ப தொடக்கி அந்த தேவைகள் அவனை அறியாமலே அவனே அல்லது பிறர் மூலமாகவோ இயற்கையாகவோ பூர்த்தியான போது இன்னும் கொஞ்சம் அதிகப்படியாகவே கடவுளை அவன் எப்படி எல்லாம் கற்பனையில் உருவ படுத்த முடியுமோ அப்படியெல்லாம் உருவபடுத்தி அவனின் தன்னம்பிக்கையை வளர்த்து கொண்டான் . அவனது நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க அவனுடனிருந்த மனிதன் நம்ப ஆரம்பிக்க அப்படி நம்ப ஆரம்பித்த பொதுவான கூட்டத்தை மதம் என்று சொல்லலாம் . ஆக சமுதாயத்தை கட்டுக்குள் வைக்கவும் சட்ட திட்டங்களை போட்டு ஒழுங்கமைகவும் நம்பிக்கையை கொடுக்கவும் உருவாக்க பட்டது கடவுளும் மதமும் என்று நம்புகிறேன் . ஆனால் இப்போது நடப்பது எல்லாம் வேறு அதனை பற்றியெல்லாம் பின்வரும் பதிவுகளில் பார்க்கலாம் .
படிச்சிங்கன்ன பின்னுட்டம் போடுங்களேன் உங்கள் கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் என் கருத்துக்களில் தவறு இருந்தால் திருத்தி கொள்ள இயலும் அல்லவா ?..
2 கருத்துகள்:
மிகவும் அற்புதமான படைப்பு நண்பரே
சரியாக சொன்னீர் தங்கள் கருத்துக்களை நானும் ஆதரிக்கிறேன். ஆரம்பத்தில் மனிதன் இயற்கையாக நடந்த விசயங்களை கடவுளின் செயல் என்று நம்பினான். தன் முயற்ச்சியால் நடந்த விசயங்களையும் கடவுளின் செயல் என்று கூறினான். பிறர்க்கு நன்மை செய்தால் கடவுள் நமக்கு நல்லது செய்வர் என நம்பினான். தீமை செய்தால் கடவுள் நம்மை தண்டிப்பார் எனவும் நம்பினான். ஆனால் சிலர் கடவுளின் மீது நம்பிக்கை அற்று திரிந்தனர். அவர்கள் தான் கடவுளை பற்றி தவறான விவரங்களை பரப்புவதுடன் தீய வழியிலும் நடக்கின்றனர். தான் நினைத்தது நடக்கதவர்களும் குறுக்கு வழியில் நடக்கின்றனர் அவர்களால் தான் மதம் என்பது தவறானதாக கருதப்படுகிறது. உண்மையில் கடவுள் மேல் நம்பிக்கை உள்ளவன் தவறு செய்வதுஇல்லை. கடவுள் மேல் நம்பிக்கை அற்றவனும், அரைகுறை நம்பிக்கை உள்ளவனுமே தவறு செய்கின்றான். எந்த ஒரு மதமும் மனிதனை தவறுசெய்ய தூண்டுவதுமில்லை. எந்த கடவுளும் தவறுசெய்வதை ஆதரிப்பதும் இல்லை.
கருத்துரையிடுக