பக்கங்கள்

சனி, 12 ஜூன், 2010

எங்கே இருக்கிறது ?.. ( பெரியவர்களுக்கு )





ரயில் பயணம் யார் ஒருவருக்கும் அலுப்பூட்டுவதாக இருக்கவே முடியாது என்பது என் எண்ணம் .அதிலும் குழந்தைகள் நமது இருக்கைக்கு அருகில் இருந்து விட்டால் எனக்கு உலகம் மறந்து போகும் குட்டி குட்டி கதைகள் பேசி விரல் மடக்கி காசு மறைத்து மந்திரம் போட்டு என்று அவர்ளுடன் அவர்களாகவே மாறி விடுவேன் . என் அலைபேசி ipod  நானோ போன்ற புகைப்பட வீடியோ கருவிகள் அனைத்திலும் என்னுடன் பயணம் செய்யும் குழந்தைகளினால் நிறைந்திருக்கும் . என்னுடைய சிறந்த நண்பர்கள் என்று என்னுடன் பயணம் செய்த குழந்தைகளை எந்த மன உறுத்தலும் இல்லாமல் சொல்லமுடியும் . கடல் கடந்து கனடாவில் இருந்து என்னுடன் ரயில் பயணத்தில் வந்த செர்லியாகட்டும் அமிர்தானந்த மாயி மருத்துவமனையில் இதய சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பிய பெங்களூருவை சேர்ந்த நிஷாந்த் ஆகட்டும் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் ஆகட்டும் இன்னும் இன்னமும் என் பயணங்களை சுகமாகுவதில் குழந்தைகளுக்கு மிக பெரிய அக்கறை இருக்கிறது போல் உணர்கிறேன் .

எனக்கு ஒரு சிறு வருத்தம் ஒன்று உண்டு  நான் சிறுவனாக இருந்த போது அம்புலிமாம ,கோகுலம் , ராணி காமிக்ஸ் , முதுகாமிஸ் , தினமலர் சிறுவர் மலரில் என்று நிறைய கதைகள் வரும் இப்போது அப்படி பெரிய புனைவுகள் குழந்தைகளை குதுகலத்துடன் அறிவையும் வளர செய்து மனதையும் உறுதியாக்கும் கதைகளோ புனைவுகளோ ஏதும் இல்லை . இப்போதைய குழந்தைகளின் ஒரே வடிகாலாக நான் வேலு சரவணனை தான் சொல்லமுடிகிறது .சில எழுத்தாளர்கள்  கூட குழந்தைகளுக்கான கதைகள் வருவதில்லை என்று ஏக்க படுகிறார்கள் .

இப்போது பெரியவர்களுகுகான அனைத்தையும் குழந்தைகளுக்கு என்று ஆகிவிட்டது அது சினிமாவாகட்டும் பாடல்கள் ஆகட்டும் தொலைக்காட்சி நிகழ்சிகள் ஆகட்டும் எல்லாமே பெரியவர்களுக்கு மட்டும் இருந்து குழந்தை உலகத்தை எடுத்து இதன் மீது திணிக்கிறோம் .

முன்பெல்லாம் நீதிபோதனை என்று ஒரு வகுப்பு எனது பள்ளியில் இருக்கும் இப்போது அது எல்லாம் இல்லையாம் . அந்த வகுப்பில் எனது ஓவிய ஆசிரியர்தான் வகுப்பெடுப்பார் மரியாதை ராமன் கதைகள் பரமார்த்த குருவும் அவரின் சீடர்களும் சில ஜென் கதைகள் என்று சுவாரசியமாக இருக்கும் பள்ளி கல்வி துறை இப்போது இதனை எல்லாம் கண்டுகொள்வதாகவே தெரியவில்லை .

சரி இலக்கிய உலகம் என்ன செய்கிறது குழந்தைகளுக்கு என்று பார்த்தல் ஒன்றுமே இல்லை வருத்தமாக தான் இருக்கிறது ."காலசுவடு " " உயிர்மை" என்று இரண்டு உலகம் பின் " மக்கள் ஜனநாயக இலக்கிய கழகம்" என்று மற்றொன்று இவர்களுக்கு எல்லாம் பேனா எதற்கு என்றால் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் ஆயுதமாகவே இருக்கிறது . பெரியவர்கள் சண்டையில் குழந்தைகள் அன்னியப்பட்டு போகிறார்கள் என்பது நமது தமிழ் இலக்கிய உலகமே சான்று . குழந்தைகளுக்கான கதை பாடல் என்று எதாவது புனைய முடிகிறாத இந்த இலக்கிய உலகத்தாரால் . மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளில் இருக்கும் குழந்தைகளின் இலக்கியம் ஏன் இங்கே இல்லை .

எனக்கு வாசிப்பின் மேல் பெரிய ஈடுபாடு வருவதற்கு காரணம் எனது தந்தை . அவர் எனக்கு வாங்கி குவித்த பொம்மைகளை விட புத்தகங்கள் அதிகம் .அனால் இன்று நமது குழந்தைகளுக்கு பாட புத்தகத்தை தவிர வேறு புத்தகம் இருக்கிறது என்று தெரியாத நிலை .சரி வாசிக்கும் பழக்கம் தான் இப்படி என்றால் .விளையாட்டு கூட ரொம்ப சுருங்கி விட்டது வீட்டை தாண்டி ஒரு பெரிய மைதானம் என்பதை இன்றைய குழந்தைகளுக்கு இருப்பதாக காட்டவே நாம் விரும்புவதில்லை .அதுவும் இந்த நவநாகரீக உலகில் " நியுகிளியர் பேமலி" என்று கணவனும் மனைவியும் மட்டும் இருக்கும் தனி குடும்பத்தின் குழந்தைகளுக்கு கிடைக்கும் அடக்குமுறை என்பது அந்த கற்பனைகெட்டாத குழந்தை மனதின் உலகத்திற்கு கிடைக்கும் உயர்ந்தபட்ச தண்டனையாகவே கருதுகிறேன் .கணினியில் விளையாட்டு கையில் கொடுக்கப்படும் ரிமோட் என்று மிக சிறிய வட்டத்தில் அவர்களின் உலகம் சுருக்கபடுகிறது .தாத்த பாட்டி அத்தை மாமா அவர்களின் குழந்தைகள் என்ற குடும்ப உலகம் கூட பறிக்கப்பட்டு விட்டது இப்போது .

ஏன் இன்றைய குழந்தைகளின் மீது நமது சிந்தனைகளை துணித்து அவர்களை அவர்களாகவே இருக்க விடுவதில்லை . குழந்தையாக பிறக்கிறோம் முதுமை வயதில் மீண்டும் குழந்தையாகிறோம் இடைப்பட்ட வயதில் மட்டும் குழந்தை உலகை சூரையாடுகிறோம் நமது எண்ணங்களை திணிப்பதன் மூலம் . நாம் எவளவு பெரிய சுயநலவாதிகள் .நான் மட்டும் குழந்தையாக இருப்பேன் ஏன் குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடமாட்டேன் என்பது என்ன நியாயம் .

குழந்தை உலகம் என்பது மிக பெரியது அதில் பெரியவர் உலகத்தை திணித்து சிறுசுகளின் மனங்களை பாழ்படுத்தலாமா....

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

வலையுலகில் இன்றைய டாப் ஐம்பது பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

குறையொன்றுமில்லை. சொன்னது…

முற்றிலும் உண்மைதான்..