பக்கங்கள்

சனி, 22 மே, 2010

திரும்ப வாருங்கள் கார்த்திக்

இந்த பதிவை எழுதுவதன் நோக்கம் இத்தனைநாள் ஒரு நடிகர் தன்னை தொலைத்திருந்த காரணத்தினால் தான்.

அன்புள்ள நடிகர் கார்த்திக் அவர்களுக்கு நீங்கள் எனது இந்த பதிவை வாசிப்பிர்களா என்பது பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை ஆனால் எப்படியேனும் உங்களுக்கு இதே மாறியான கருத்துக்களை நேற்றிலிருந்து அதிகம் உங்களை நோக்கி புறப்பட்டதை நிச்சியம் அறிந்திருப்பிர்கள் என்று நம்புகிறேன்.

என்னை பொறுத்த வரை நாம் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அந்த செயலுக்கு நேர்மையாக இருக்கவேண்டும் என்று நம்புகிறவன். அது தொழிலோ அரசியலோ கலைகளோ நட்பு அல்லது உறவுகளோ . நமக்கு ஒன்று அமைந்து விட்டால் அதில் நாம் முழு வீச்சுடன் இறங்கி அதன் நீள அகலங்களை நமக்கு ஏற்றால் போல் அமைதுகொள்கிறோம்.அப்படி பட்ட ஒரு சிறந்த இடம் சினிமாவில் உங்களிடம் மட்டுமே தனித்தன்மையுடன் இருந்தது . இடையில் நீங்கள் இல்லாத போது கூட அப்படி பட்ட ஒரு இடத்தை யாராலும் யோசிக்கவே முடியவில்லை என்பது நிதர்சனம் .

அலைகள் ஓய்வதில்லை படத்தில் இருந்தது நேற்றைய மாஞ்சா வேலு படம் வரை நீங்களே உங்களை ஒரு முறை சாதாரண சினிமா ரசிகானாய் இருந்தது பாருங்களேன் திரையில் தோன்றும் கார்த்திக் எத்தனை வசீகரம் கொண்டவர் என்று . அதுவும் என்னை போன்ற யாரொருவருக்கும் ரசிகானாய் இல்லாதவர்களுக்கு நீங்கள் திரையில் தோன்றிய உடனே சுடுநீர் கொதித்து கொப்பளிப்பது போல உள்ளம் உற்சாகத்தில் கொப்பளிக்குமே அதனை எல்லாம் சொற்களில் அடக்கிவிட முடியுமா என்பது தெரியவில்லை . இன்னமும் நீங்கள் MR. சந்திரமௌலி என்று கூறுவதையும் மைக் போட்டு சொல்லிய உங்கள் காதல் தைரியத்தையும் எத்தனையோ இளைஞர் கூட்டம் அவர்கள் காதலிகளிடம் செயல்படுத்தி கொண்டுதான் இருக்கிறார்கள் . உங்கள் சினிமா பாத்திரத்தில் மிக முக்கியமான திரைப்படமாக கோகுலத்தில் சீதை படத்தை நான் சொல்லுவேன் . ஏன் தமிழ் திரைப்பட வரலாற்றில் ஆக சிறந்த ஒரு பாத்திர படைப்பாக உங்கள் கோகுலத்தில் சீதை படத்தை தான் நான் சொல்லுவேன் . எங்கே சார் போய் இருந்திருகள் இத்தனை நாட்களாக ?.. அரசியால வேண்டாம் சார் அது உங்களுக்கு வரவில்லை . எனக்கு தெரிந்து நீங்கள் ஒருவர்தான் கோடம்பாக்க வட்டாரத்தில் சக நடிகர் நடிகைகளை அழகான பட்டபெயர் வைத்து அவர்களை சந்தோஷ படுத்துவீர்கள் .  ( உதரணமாக வருஷம் 16 படத்தில் குஷ்பு அவர்களுக்கு  சைனிஸ்பட்லர் என்று அதனை இன்று வரை தொடர்வாதாக கேள்விபடுகிறேன் ) ஆனால் உங்களை அந்த அரசியல் வட்டத்தில் வேறு மாரியான பட்ட பெயர்களை சூட்டி மகிழ்கிறார்கள் என்பது தெரியுமா ?.. சார் புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்ளலாம் ஆனால் பூனையை பார்த்து புலி தன் கோடுகளை அழித்து கொள்ளலாமா ?.. வேண்டாம் சார் உங்களுக்கு இந்த அரசியல் .

நேற்று இரவு கமலா திரையரங்கில் உங்கள் புதிய படமான மாஞ்சா வேலுவை பார்த்தேன் சார் உங்கள் அறிமுக காட்சியில் திரைகதை படி சொக்கி போனவள் கதாநாயகி மட்டும் அல்ல சார் எங்களை போன்ற ரசிகர்களும் தான். இன்னமும் எத்தனை அழகாக சண்டை போடுகிரிகள் குறிப்பாக அந்த பிணவறை சண்டை காட்சிகள் . இன்னமும் அதே கவர்ச்சி எத்தனை எத்தனை பெண் ரசிகர்கள் வெட்கத்துடன் நீங்கள் " ராஜா ராஜாதி ராஜனிந்த ராஜ " பாடலுக்கு குறும்பு நடனம் ஆடிய போது ரசித்தார்கள் என்பதை அருகே அமர்ந்து பார்த்துகொண்டு இருந்தேன் சார் .

இடைவேளையில் ராவணன் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி ஒளிபரப்பினார்கள் ஐஸ்வர்யா , விக்கரம் என்று வந்த போது எல்லாம் அரங்கில் யாரும் விசில் அடிக்க வில்லை சார் ஒரு ஜீப்பில் நீங்கள் தொப்பியுடன் வருவீர்களே அப்போது அனைவரும் அடித்த விசில் சத்தம் உங்கள் வீடுவரை கெட்டு இருக்கும் என்று நம்புகிறேன் .

உங்களுக்கு இந்த திரையுலகில் யாரும் போட்டி இல்லை சார் உங்கள் இடம் என்றுமே காலியாக உள்ளது அந்த இடத்திருக்கு யாரும் வரவே முடியாது சார் உங்களை தவிர .



உங்கள் வருகை அந்த காலி இடத்தை இட்டு நிரப்பும் என்றும் ஆவலில் .

8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கணபதி உங்க அபிப்ராயம் தான் என்னதும் ...கார்த்திக் ஒரு அருமையான நடிகன் ,எனக்கு அவர் நடிச்ச மௌன ராகம்,கிழக்கு வாசல் இன்னும் பல சினிமா பிடிக்கும் ...இன்னும் நிறையே நாள் அவர் சினிமாவில் இருக்க நானும் ஆசைபடறே ...
என் ப்ளாக் லே வந்து பதில் எழுதினதுக்கு ரொம்ப நன்றி,
அந்த ஸ்கூல் மேலே வழக்கு பதிவு பண்ணலாம் ஆனா ஞாயம் கிடைக்குமான்னு நம்பிக்கை இல்ல சார் .

movithan சொன்னது…

இதே எண்ணம் என் மனதிலும் இருந்திச்சு,
அழகாய் கூறினீர்கள்.

பெயரில்லா சொன்னது…

உண்மை தான். கார்த்திக் ஒரு அருமையான நடிகர். மௌனராகம் சில வருடங்களுக்கு முன்னர் பார்த்தேன். அது தான் கார்த்திக்கின் படத்தில் நான் பார்த்தது. பின்னர் கோகுலத்தில் சீதை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பூவேலி, ஆனந்த பூங்காற்றே, கிழக்கு வாசல் போன்றவை பார்த்திருக்கிறேன். அருமையான நடிகர். You feel good to see him on screen. Right??!!??

G.Ganapathi சொன்னது…

You feel good to see him on screen. Right??!!??


//


YES what an pepy actor he is

மதுரை சரவணன் சொன்னது…

karthik parriya karuththukkal umai.pl visit my blog and ans to my question recording the exam pattern.

Unknown சொன்னது…

ya ur rite how can we forget his mounaragam

Suriya சொன்னது…

Ya he is nice actor... We are missing him for the past few years...

Welcome Karthik Fans சொன்னது…

1980 களில் பல கதாநாயகர்கள் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் உலா வந்து கொண்டிருந்தார்கள். ரஜினி, கமல் தவிர்த்து மோகன், ராமராஜன், சத்யராஜ், முரளி என்று பலர் நடித்து வந்தாலும், சில நடிகர்களே இன்று வரை தாக்குபிடித்து நடித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர், நடிகர் முத்துராமனின் மகனான 'நவரச நாயகன்' கார்த்திக். கார்த்திக் ஒரு சிறந்த நடிகர் என்பது தமிழ் நாட்டு ரசிகர்கள் அனைவரும் அறிவர். கார்த்திக் ஒரு இயல்பான நடிகர். இன்று வரை அவரின் இடத்தை நிரப்புவதற்கு ஒருவர் கூட இல்லை என்பதே அவருடைய நடிப்பிற்கான வெற்றியாகும்