பக்கங்கள்

ஞாயிறு, 30 மே, 2010

பெண் ஏன் அடிமையானாள் ?..


  தலைப்பை பார்த்தவுடன் பெரியார் தாசர்கள் கொஞ்சம் சந்தோசபடலாம் .அடிக்கடி கருஞ்சட்டை காரர்களிடம் இடிவாங்கும் பார்ப்பனர்கள் கொஞ்சம் வருத்தபடலாம் . நான் இங்கே இருவரை பற்றியும் எழுதவில்லை மதங்கள் கூறுவதை பற்றியும் எழுத வில்லை .கொஞ்சம் என் அறிவிற்கு எட்டிய என் சிந்தனையில் உதித்த நான் பார்த்த நான் அனுமானித்த என்னால் உணரப்பட்டதன் மூலம் எழுதுகிறேன் . பெண் இப்படித்தான் அடிமையாகி இருக்கவேண்டும் என்று . ( நான் நான் ன்னு சொல்லறேன்னு தப்பா நினைக்காதிங்க நான் ஒன்னும் பெரிய ஆளு இல்லைதாங்க )

    சரி விசியத்திற்கு வருவோம் , பெண் இந்த சொல்லை உதிர்க்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஒருவேளை நான் ஆண் என்பதாலோ ( வாங்க பாத்தியா இந்து மாதம் பெண்ணை எப்படி பாக்க வச்சுருக்கு ன்னு சொல்லற கருஞ்சட்டை காரர்களே... மதத்தை விடுத்தது பாருங்கள் உங்கள் ஆண் குறி கூட எழுந்து நிற்கும் பெண்ணின் அங்கங்களை பார்க்கும் போது ) . ஆண் பெண் என்பது என்னை பொறுத்தவரை இரண்டு உயிர்கள் உடற்கூறு ரீதியாக அங்க அவையங்கள் மட்டுமே மாறு பட்ட மனித உயிர்கள் . இதில் ஆண் மட்டும் என்ன உசத்தி பெண் மட்டும் என்ன தாழ்ந்தவள் ?.. இந்த கேள்வி எப்போதும் என்னை குடைந்துகொண்டே இருக்கும் . காரணம் அது என்ன எல்லாமே ஆண் மட்டும் செய்யணும் பெண் மட்டும் சுகமா இருந்துக்கற ஆனா பெண் அடிமைத்தனம் ( இத எப்படிங்க சொல்லறது ஆண் அடிமைத்தனமா இல்ல பெண் அடிமைத்தனமா ) ஆண் அடக்கி ஆளுகிறான் பெண் அடங்கி போகிறாள் என்று நாவிருக்கும் உதடுகள் எல்லாம் கூச்சல் கூப்பாடுகள் அப்படி என்னதான் ஆண் அடிமை படுத்தி வைத்திருக்கிறான் பெண்ணை என்று பார்த்தல் பெரியதாக ஒன்றும் தோணவில்லை .அட உண்மையாலும் தாங்க சொல்லறேன் ஆண் ஒன்னும் பெரிசா பெண்ணால வெளிய வர முடியாத அளவிற்கு ஒன்றும் அவளை ஆளவில்லை அவளே அவளுக்கு அடங்கி கொள்கிறாள் பலியை தூக்கி ஆண் மீது போட்டுவிட்டு அதற்கும் துளி கண்ணீர் சிந்துகிறாள் . அவளால் ஆண் செய்யும் எதனையும் செய்ய முடியும் ஆனால் அவள் செய்ய மாட்டாள் ( வாங்க இப்பதான் நாங்க எல்லா துறையுளையும் முன்னுக்கு வந்துட்டு இருக்கோமே ன்னு சொல்லாதிங்க இன்னும் முனேருங்க இப்ப நீங்க பண்ணறது எல்லாம் கொசுறு ) அவளுக்கு என்றைக்குமே பலி போட ஒரு ஜீவன் வேண்டும் நாய் பூனை எல்லாம் வேலைக்காகாது இன்னொரு மனிதனாக இருந்தால் தான் வசதி ( எப்பவும் ஜெய்க்கனும் அப்படின்னு போட்டி போடறவங்க தன்னை விட பலம் குறைந்தவர்களிடம் தான் போட்டி போடுவார்கள் அப்படித்தான் பெண்ணும் அவளை விட பலம் குறைந்த ஆணிடம் போட்டி போடுகிறாள் ) காரணம் மிருகங்களிடம் போட்டி போட்டு ஜெயிப்பது என்பது கடினம் ஆனால் ஆண் எப்போதுமே பெண் என்பதால் கொஞ்சம் கருணை காட்டுகிறான் சரி பரவாயில்லை என்று . இத்தனைக்கும் அவள் தன்னை போல் ஒரு மனித உயிர் என்பதை அறிந்திருந்தும் .

ஏன் ஆண் கருணை காட்டுகிறான் ?. பெண் ஏன் தன்னை ஆண் போல வளர்த்துகொள்லாமல் இருந்தது விட்டால் ?.. 

    இதற்க்கான காரனத்தனை ஆராயும் போது எனக்கு புலப்பட்டது இது தான் . இதனால் தான் பெண் தனுக்கு தானே அடிமையாகி கொண்டு ஆண் மீது பலி சுமத்தி விட்டாள் . இத்தனைக்கும் பெண்ணுக்கு பரிணாமம் ஏனைய சுதந்திரத்தை கொடுத்திருந்தும் அதனை எல்லாம் அவள் பயன்படுத்தி கொண்டதே கிடையாது . பரிணாம சுதந்திரமே ஆணுக்கு கிடையாது என்பது என் வதம் . 

    சரி அது என்ன காரணம் ?. அந்த காரணமா பெண்ணை அடிமை படுத்தி வைத்திருகிறது என்று கேட்டாள் நான் ஆம் என்று சொல்லுவேன் .கேவலம் ஒரு காரணமா அவளை அடிமை படுத்தி வைத்திருகிறது பிறகு ஏன் அவள் ஆண் அவளை அடிமை படுத்தி வைத்திருக்கிறான் என்று கூறுகிறாள் என்றால் அவளுக்கு இப்படி பலி போட்டு பலி போட்டு அவனை எப்போதும் அவளிடம் சூழ்நிலை கைதியாகவே வைத்திருக்க இந்த சொல் இன்றியமையாமல் இருப்பதனால் தான் . அட காரனத்த சொல்ல மாட்டையா என்று கோவ படாதிர்கள் அதற்க்கு தான் வருகிறேன் . 

    மனிதன் காட்டண்டியாக வாழ்ந்த போது அவனுக்கு தெரிந்த தொழில் வேட்டை . ( நான் உலகின் முதல் தொழில் விபசாரம் என்று எல்லாம் நம்ப மாட்டேன் ) இங்கே மனிதன் என்பது ஆண் பெண் இருவரையுமே குறிக்கும் . அவன் வேட்டை தொழிலுக்கு போகும் போதெல்லாம் அவளும் போவாள் காரணம் அப்போது இருவருமே போனால் தான் உணவு . எப்படி இப்ப எல்லாம் ஆண் பெண் இரண்டு பேருமே வேலைக்கு போனத்தான் கொஞ்சம் சொகுசா வாழ முடியும்னு நினைகரமோ அது மாறி. இப்பவாது சொகுசா வாழவும் குழந்தைகளை படிக்கவைக்க வேண்டும் அது இதுன்னு ஆயிரம் காரணம் இருக்கலாம் ஆனால் மணிதான் காட்டன்டியாய் வாழ்ந்த போது அவனது தேவைகள் மிக குறைவு ஏன் ஒன்றே ஒன்று தான் அது உணவு .அந்த உணவுக்கான வேட்டை தொழிலுக்கு மனிதன் போகுபோதேல்லாம் சில சமையம் அவனின் இருப்பிடத்தை அறிந்து கொண்ட மிருகங்கள் அவனை தாக்க தொடங்கின . அதானால் அவன் மிகுந்த அச்சம் கொண்டவன் ஆனான் ( இங்கே தான் பரிணாமம் மனிதனுக்கு தேவையான ஆதர உணர்ச்சியான பயத்தை அறிமுக படுத்தி வைத்திர்க்கலம் ) அவ்வாறு மிருகங்கள் அவனை தாக்குவதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்திக்க தொடங்கினான் . பெண் சில நாட்களுக்கு மட்டும் சோர்ந்து போய் திறன் குறைந்து இருப்பது தான் தான் காரணமாக இருக்குமோ என்ற உணர்வு தோனுகிறது அந்த நம் முன்னோர் காட்டாண்டி மனிதனுக்கு .அதிலும் அவனுக்கு சந்தேகம் அவள் திறன் குறைந்து இருப்பதை பார்த்த மிருகங்கள் அவனை வேட்டையாடுகிறது என்று . பிறகு கண்டு உணர்ந்தான் . ரத்த வாடை தான் காரணம் என்று . சில குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பெண்ணிடம் இருந்தது உதிரம் வெளியேறுகிறது அந்த சமையங்களில் பெண் திறன் இல்லாமல் போய்விடுகிறாள் மற்றும் அந்த ரத்தவாடை கண்டுதான் மிருகங்கள் அவனின் இருப்பிடத்தை கண்டு கொண்டு அவனை தாக்குகிறது என்பதை .இனி பெண் தன்னுடன் வந்தால் முதலுக்கே மோசம் வந்து விடும் என்று அஞ்சி அவளை தடுத்து நிறுத்துகிறான் . அவளை தங்க வைக்க பாதுக்காப்பான இடமமைத்து அங்கேயே இருக்குமாறு பார்த்துகொள்கிறான். அவளும் மிருகங்களிடம் இருந்தது தானை காத்து கொள்வதற்கு அந்த ஏற்பாட்டை ஏற்று வேட்டைக்கு செல்வதில் இருந்தது விலக்கு பெறுகிறாள் . அதுவும் மாதத்தில் சில நாட்கள் நடக்கும்  இயற்க்கை சுழற்சியை சாதகமாக அவள் புத்தி பயன்படுத்திகொண்டது. வேலைக்கு செல்ல வேண்டியது இல்லை சாப்பாடு துணிமணி எல்லாம் வந்துரும் அப்படின யாரு வென சோம்பேறி ஐடலம் இல்லைங்கள அதுமாரி பெண் கொஞ்சம் கொஞ்சமாக சுகவாசி ஆக தொடங்குகிறாள் ஆண் கஷ்ட பட்டு வேட்டையாட சென்று வேட்டையாடி வீட்டில் சும்மா இருக்கும் பெண்ணுக்கு என்று உணவு வழங்க ஆரம்பித்தானோ அன்றே அவள் மெல்ல மெல்ல அடிமை ஆக தொடங்குகிறாள் .இத்தனைக்கும் அவள் ஆணுக்கு சளைத்தவள் இல்லை என்று தெரிந்தும் . ஆணுக்கும் கஷ்ட படுவது நான் தானே இவள் சும்மா தானே இருக்கிறாள் என்று அவளை ஆள முற்ப்படுகிறான் .அவளும் அதற்க்கு இடம் கொடுத்து விடுகிறாள் காரணம் உயிர் வாழ உணவு தேவை அந்த உணவு வேலை செய்யாமல் வேட்டையாடாமல் இருக்கும்போது ஆணால் அவளுக்கு கிடைகிறது என்பதால் .இப்படியே அவள் மெல்ல மெல்ல தொடர பரிணாமம் அவளை அவளின் திறன்களை எல்லாம் குறைக்க ஆரம்பித்து பின் ஒட்டுமொத்தமாக பெண்ணை மெல்லிய உடல்வாகு கொண்டவளாக மாற்றி விட்டது .இதனையே சாக்காக வைத்து அவளும் தன்னை வளர்த்தி கொள்ளாமல் ஆண் மீது பழிசுமத்தி வாழ பழகி கொண்டாள்.

   நாகரீகம் வளர ஆரம்பிக்கிறது பெண் மாத சுழற்சி நாட்களில் விரைவில் நோய் தொற்றுக்கு ஆளாக ஆரம்பிக்கிறாள் அதனால் மரணம் அடையவும் செய்கிறாள் . அதுவரை வீட்டு வேலை என்று சிலவற்றை அந்த மாத சுழற்சி நாட்களிலும் அவள் செய்துவந்தால் . மனிதன் பார்த்தான் இப்படியே இவள் நோய் தொற்றுக்கு ஆளாகி வந்தால் நமக்கு சந்ததி தொடராதே என்று கண்டுகொண்டு அந்த நாட்களில் அவளுக்கு முழு ஓய்வு கிடைக்குமாறு பார்த்து கொள்கிறான் அவளுக்கு தானியான இடம் சுகாதாரமாக வழங்கி . இதனை எப்படி செயல்படுத்துவது அப்போது எதோ ஒரு மனிதனுக்கு தோன்றிய எண்ணம் தான் கடவுள் கோவித்து கொள்வார் தீட்டு என்று அவளை கட்டாயபடுத்தி முழு ஓய்வுக்கு அனுப்புகிறான் .அவளும் மரணத்திடம் நோய் தொற்றுக்களிடம் இருந்தது தன்னை காத்து கொள்வதற்காக மனிதன் இட்ட கட்டளைக்கு இசைந்து கொள்கிறாள் . அதுவரை அவள் புதிய உயிரை  படைக்கும் மேலானவள் என்று நம்பி வந்த மனிதன் கொஞ்சம் காழ்புணர்ச்சி கொண்டு இருந்தான் அவளை எப்படி நமக்கு கீழ் என்று உணர வைப்பது என்று அவனின் சிந்தனை பரிணாம வளர்ச்சி அடைந்து எதவது ஒரு புது புது காரணத்தை அவளுக்கு கொடுத்து அவளை எளிமை படுத்தி அடக்க ஆரம்பித்தான் பெண்ணும் சுலபாமா இருகிறதே என்று அடங்கிகொள்ள ஆயத்தமானால் . இப்படி தான் பெண் அடிமையாகி இருக்க வேண்டும் . சர்வைவல் தான் காரணமாக எனக்கு தெரிகிறது . மத்தபடி பெண் ஆணுக்கு ஒன்றும் சளைத்தவள் கிடையாது அவளால் எல்லாமே செய்ய இயலும் அவளும் சில பல சந்தர்ப்பங்களில் அவளை நிருபித்து கொண்டுதான் இருக்கிறாள்.அவளை அவளே உந்தித்தள்ளி கொண்டாள் ஒழிய பெண்ணடிமை என்னும் மாயவலையை தாண்டி ஒட்டுமொத்த பெண் இனம் வெளிவராது என்பது எண்ணம் . 

நன்றி இத்தனை நேரம் இதனை படித்தற்கு பின்னுட்டங்களை எதிர்பார்க்கிறேன் . கொஞ்சம் உணர்சியவ படாமல் உணர்வு பூர்வ அணுகுமறை பின்னுட்டங்களை . 

10 கருத்துகள்:

Ahamed irshad சொன்னது…

தெளிவான சிந்தனை..ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் உள்ளது.. கட்டுரை கொஞ்சம் நீளம்.. அடுத்த முறை சுருக்கி பழகிக்கொள்ளுங்கள்.. அப்பொழுதுதான் முழுமையாக படிப்பார்கள்...

Unknown சொன்னது…

அண்ணே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?..

insight சொன்னது…

நன்றிங்க அஹமது இர்ஷாத் ...

சுருக்கமாக சொல்லவந்தே இத்தனை நீளம் ஆகி விட்டதுங்க . டைப் செய்வதில் உள்ள பிரச்னை தான் எழுத்துப்பிழைக்கு காரணம் இனி வரும் பதிவுகளில் கவனம் செலுத்துகிறேன்

insight சொன்னது…

அண்ணே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?..
//
இல்லைங்கண்ண தேனுங்க :(

பெயரில்லா சொன்னது…

பெண்ணை குறை சொல்ல வேண்டும் என்று சொல்லாமல் சொல்லி இருகிறீர்கள் என்ன விளக்கம் சொன்னாலும் புரிந்து கொள்ள கூடிய மன நிலையில் இல்லை நீங்கள் அப்படியே சொன்னாலும் பெண்களாகிய நாங்கள் தப்பித்துக் கொள்ள சொல்லப்பட்ட புனைவு கதை என்றே அடித்து சொல்வீர்கள். என்ன செய்வது நீங்கள் பார்த்து பழகிய பெண்கள் அவ்வாறா இல்லை அனுபவமா புரியவில்லை. ஆக மொத்தத்தில் ஒரு ஆண் துணையின்றி பெண்களால் வாழ முடியும் என்றும் சர்வசக்தி படைத்தவர்கள் என ஆணித்தரமாக ஒத்து கொண்டதற்கு நன்றி

tt சொன்னது…

சொல்ல வந்த கருத்திலிருந்து தடம் விலகாமல் சொல்லியிருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லாயிருக்கும் என்பது என் கருத்து..

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

கட்டுரையின் மைய்யக் கருத்து யோசிக்க வைக்கிறது தோழர் ...
உணர்ச்சி வசப்படாமல் உங்கள் வார்த்தைகளை அணுகுவது என்பது தான் சவால் !
பின்னர் வருகிறேன் தோழர் !

பெயரில்லா சொன்னது…

சிந்திக்க தக்க கருத்துக்கள் ஆனால்
"மதத்தை விடுத்தது பாருங்கள் உங்கள் ஆண் குறி கூட எழுந்து நிற்கும் பெண்ணின் அங்கங்களை பார்க்கும் போது
இது தேவையில்லாதது.

தனி காட்டு ராஜா சொன்னது…

படு மொக்கை ....

Unknown சொன்னது…

தமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...